Wednesday, November 10, 2010

பிறைக்குழப்பம் பெருங்குழப்பம்! த.த.ஜ. = தமிழ்நாட்டில் தடுமாறும் ஜமாஅத்?

'கேடு வரும் பின்னே மதி கேட்டு விடும் முன்னே '
என்று அண்ணன் அடிக்கடி சொல்வதுண்டு! சமிபகாலமாக தனிநபர் ஜமாத்தின் பல நிலைப்பாடுகள் அண்ணனின் அந்தர் பல்டிகளால் கேலிகூத்தாக்கியுள்ளது !

*ஜூலை நாலு மாநாட்டில் மக்கள் எண்ணிக்கையில் சொன்ன பொய் ,

*பிரதமரே அழைத்தார் என்று பில்டப் ,

*ஜே.எம்.ஹாருணை மேடையேற்றியது,

*அல்தபியை ஓரங்கட்டியது ,

*நிர்வாக தலைவர் ரஹ்மதுல்லா, நிஜதலைவர் அல்தாபி, மேலாண்மை தலைவர் லுஹா, நிறுவனத்தலைவர் தான் என ஒரு இயக்கத்திற்கு நான்கு தலைவர்களை ஏற்படுத்தியது ,

*திருவிடசேரி கொலையில் திரும்ப திரும்ப அடித்த பல்டிகள்,

*சிறைவாசிகள் பிரச்னை,

*'ஐயோ கொல்லபாக்கிரான்களே' என்கிற பாணியில் அரசின் பாதுகாப்பு பெற நடத்திய நாடகம்

*நக்கீரன் ஆபாச போராட்டம்,

* பாபர் மஸ்ஜித் பற்றிய அளஹபாத் தீர்ப்பு குறித்து முன்னுக்குப்பின் முரணான மூன்று நிலைப்பாடுகள்,

*பத்தொன்பது அமைப்புகளின் போஸ்டருக்கு எதிராக பாக்கரும் ஜவஹிருல்லஹ்வும் சிமி தீவிரவாதிகள், பாபுலர் பிரான்ட் தீவிரவாத இயக்கம் என ஆர்.எஸ்.எஸ்.பாணியில் அடித்த போஸ்டர் ,


போன்ற விவகாரங்களால் ஏற்கனவே சரிந்து போய்க்கிடக்கும் இமேஜை தூக்கி நிறுத்த சக கோமாளியோடு நடத்திய விவாதமும் ,நடு நிலையாளர்களை முகம் சுளிக்க வைத்ததோடு , அண்ணன் பாணியிலேயே லாஜிக்கில் அடித்த கோமாளி வைத்த பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல், தன்னுடைய வழக்கமான நேர்மையற்ற முறையிலான நிலையினாலும் தவ்ஹீத் சகோதரர்களாலேயே விமர்சனதிர்க்குள்ளாகி இருக்கும் அண்ணனின் அடுத்த பின்னடைவு ஹஜ் பெருநாள் அறிவிப்பில் வெளியாகி உள்ளது!

'தமிழகத்தில் ஏழாம் தேதி எங்கும் பிறை தென்படாததால் நாட்களை முப்பதாக கணக்கிட்டு வரும் பதினெட்டு அன்று பெருநாள் என தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைமை காஜி[?!] ரஹ்மத்துல்லாஹ் அறிவிப்பு! என்று தங்கள் தொலைக்காட்சியில் அறிவித்துள்ளனர்!

ஷியா காஜி , சன்னி காஜி கேள்விப்பட்டுள்ளோம்! எப்போது தமிழக அரசு தவ்ஹீத் காஜியாக ரஹ்மதுல்லாஹ்வை அறிவித்தது என நமக்கு தெரியவில்லை.! அப்படியே அறிவித்தாலும் அந்த அரசு பதவியை த.த.ஜ. ஏற்றுக்கொள்ளுமா? மவ்லானா, மவ்லவி , போன்ற பட்டங்களை எல்லாம் பெயருக்கு முன்னாள் போடக்கூடாது என்றவர்கள் காஜி என்று மட்டும் தங்களை தாங்களே அழைக்கலாமா?

இது மட்டுமின்றி கடந்த சில வருடம் முன்பு வரை தத்தம் பகுதி பிறை என்று கூறி விட்டு , பின்னர் தமிழக பிறை என்ற கருத்தை மக்களிடம் கூறி , அதற்க்கு விளக்கம் என்ற பெயரில் 'மக்கள் என்று பெருநாள் என்று தீர்மானிக்கிரர்களோ அன்று தான் பெருநாள் ' என்று டவுன் காஜி பிறையை பின்பற்றி பெருநாள் கொண்டாடியவர், அதில் இருந்தும் விலகி இன்று மூன்றாம் நாள் பெருநாள் என்ற முடிவை எடுத்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை தவிர ஏனைய பெரும்பாலான ஊர்களில் பிறை தெரிந்ததாக டவுன் காஜி ,ஜமாத்துல் உலமா உள்பட , அனைவரும் அறிவித்த நிலையில் , லட்சக்கணக்கான [?!] த.த.ஜ. தொண்டர்களுக்கும் .அவர்களின் பிறைக்குலுவினருக்கும் [?!] தெரியாமல் போனது ஆச்சர்யமே!

ஒரு வேளை அண்ணன் தன்னுடைய சொந்த கூட்டம் எவ்வளவு? பிறிதொரு காலத்தில் தான் எடுக்கும் 'முக்கிய முடிவிற்கு' எத்தனை பேர் தன்னோடு [பில்டராகி] தங்குவார்கள். என்பதை சோதிக்க முடிவு செய்து விட்டார் போலும்! அண்ணே ! இது அபாயகரமான சோதனை! திடல் தொழுகைக்கு வரும் சுன்னத் ஜமாஅத் மக்களை காட்டித்தான் நம்ம பத்தாயிரம் பேர் தொழுகைக்கு கூடும் ஜமாஅத் என்று பில்டப் பண்ணிக்கிட்டு இருக்கோம்! அதையும் கெடுத்துடாதீங்க' என்று யாரோ கூறினாலும் , பதினெட்டாம் தேதி பெருநாள் என அறிவித்தது விட்டு பின் வாங்க முடியாதே! என அண்ணன் புலம்புவது புரிகிறது! என்ன செய்வது கேடு வரும் பின்னே ! மதி கெட்டு விடும் முன்னே என்பது சொன்னவருக்கே பொருந்தி விட்டதே!
-அபு குரேஷி

0 comments:

Post a Comment