Monday, November 8, 2010

திருவிடைச்சேரி படுகொலைக்கு திருக்குர்ஆண் வசனத்தை துணைக்கழைக்கும் த.த.ஜ.



ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

ஒரு ஆசிரியர் கரும்பலகையில் ஒரு கோட்டை வரைந்து, இந்த கோட்டை அழிக்காமல் சிரியதாக்கவேண்டும் என்று மாணவர்களிடம் கூறினார். மாணவர்களில் பலர் விழிக்க, அதில் ஒருவன் முன்வந்து கரும்பலகையில் ஆசிரியர் கிழித்த கோட்டிற்கு அருகே அதைவிட பெரிய கோட்டை கிழித்தான். பின்பு சொன்னான். ஆசிரியரே! நீங்கள் கிழித்த கோட்டை அழைக்காமல் சிரியதாக்கிவிட்டேன் என்று.


அதுபோல திருவிடைச்சேரி படுபாதக கொலையில் தமது ஜமாஅத்தின் பெயர் அடிபடுவதை எப்பாடுபட்டேனும் தடுக்கவேண்டும் என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உலரிவரும் அண்ணன் ஜமாஅத், இப்போது திருவிடைச்சேரி படுகொலையை விட, ஜமாத்தார்களின் அக்கிரமம் பெரிது என்று நிறுவும் வகையில் ஒரு வசனத்தையும், அந்த வசனம் இறக்கப்பட்ட காரணத்தையும் ஏகத்துவம் அக்டோபர் இதழில் எடுத்தெழுதியுள்ளனர். அதை இப்போது பார்ப்போம்.


''நபி[ஸல்] அவர்கள் [குறைஷிகளை உளவு பார்ப்பதற்காக] ஒரு கூட்டத்தை அபூ உபைதா[ரலி] அவர்கள் தலைமையில் அனுப்புகிறார்கள். அவர் செல்ல துவங்கும்போது, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் மீதுள்ள அன்பின் காரணமாக அழுகின்றார். செல்லாமல் அமர்ந்தும் விடுகின்றார். அவருக்கு பதிலாக அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ்[ரலி] அவர்களை அவருடைய பொறுப்பில் நியமித்து அனுப்புகிறார்கள்.


அந்த கூட்டத்தினர் செல்லும் வழியில், [மக்காவை சேர்ந்த எதிரியான] இப்னுல் ஹல்றமி என்பவரை சந்தித்து, அவரை கொன்றும் விடுகின்றனர். அந்த நாள் [போர் செய்ய தடை செய்யப்பட்ட] ரஜப் மாதமா? அல்லது ஜமாதுல் ஆகிர் மாதத்தின் இறுதியா என்று அவர்களுக்கு தெரியாது.

அப்போது இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களை நோக்கி, போர் தடுக்கப்பட்ட புனித மாதத்தில் கொலை செய்து விட்டீர்களே என்று விமர்சித்தார்கள். அப்போதுதான் அல்லாஹ் 2 ;217 வசனத்தை இறக்கி அருளினான்.
நூல்; முஸ்னத் அபூயஃலா, தப்ரானி.

ஏகத்துவத்தில் எடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த ஹதீஸில் அவர்களுக்கு எதிராக உள்ள விஷயங்களை வசதியாக மறைத்து விட்டார்கள்.

#நபி[ஸல்] அவர்கள் சஹாபாக்களை அனுப்பியது உளவு பார்ப்பதற்கு. ஹாஜி முஹம்மது யாரை உளவு பார்க்க துப்பாக்கியுடன் வந்தார்?
#சஹாபாக்கள் கொன்றது இஸ்லாமிய எதிரியை. ஆனால் திருவிடைச்சேரியில் கொல்லப்பட்ட இருவரும் இஸ்லாமிய எதிரிகளா? ஆம் எனில், இவர்களைப் போன்ற ஜமாஅத் நிர்வாகிகள் 'தீர்த்துக்கட்டப்பட' வேண்டியவர்களா?
#மேலும் சஹாபாக்களை அனுப்பியது அல்லாஹ்வின் தூதர். ஹாஜிமுஹம்மதுவை துப்பாக்கியுடன் அனுப்பியது யார்?
#சஹாபாக்கள் எதிரியை கொன்றபோது, அந்த நாள் போர்செய்ய தடை செய்யப்பட்ட ரஜப் மாதத்தின் துவக்க நாளா? அல்லது அதற்கு முந்தைய மாதமான ஜமாதுல் ஆகிராவின் கடைசி நாளா என்று அவர்களுக்கு தெரியாது. ரஜப் மாதத்தின் முதல்நாள் என்று தெரிந்திருந்தால் சஹாபாக்கள் இப்னுல் ஹல்றமியை கொன்றிருக்க மாட்டார்கள். ஆனால் ஹாஜிமுஹம்மது தெள்ளத்தெளிவாக ரமலான் என்று தெரிந்தும், அதுவும் சந்தேகத்திற்கு இடமில்லாத ரமலான் பிறை 25 ல் கொன்றாரே! இந்த படுகொலையும், சஹாபாக்கள் எதிர்பாராமல் செய்த படுகொலையும் ஒன்று என்று சொல்ல உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்?

அடுத்து மேற்கண்ட ஹதீஸோடு சம்மந்தப்பட்ட குர்ஆண் வசனத்தை பிரதான ஆதாரமாக காட்டுகிறார்கள். அந்த வசனம்;

(நபியே!) புனிதமான (விளக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; "அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;. ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது. அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்;. உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;. இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்." [2 ;217 ]

இந்த வசனத்திலாவது இவர்களுக்கு ஆதரவான கருத்து உண்டா என்றால் இல்லை. முதலாவதாக அல்லாஹ் புனித மாதம் என்று அறியாமல் சஹாபாக்கள் செய்திருந்தாலும், அந்த கொலையை அல்லாஹ் கண்டிக்கிறான். அடுத்துதான் அந்த இணைவைப்பாளர்களின் செயல் சஹாபாக்கள் செய்ததை விட பெருங்குற்றமாகும் என்று கூறுகிறான். இந்த வசனத்தை ஆதாரமாக கொள்ளும் அண்ணன் ஜமாஅத் முதலில் என்ன செய்திருக்கவேண்டும்? முதலில் நடந்த படுபாதக படுகொலையை கண்டித்து விட்டு பின்னர் ஜமாத்தாரின் செயல்பாடுகளை கண்டித்திருந்தால் அது ஒருவகையில் இந்த வசனத்தை பின்பற்றி இருக்கிறார்கள் என்று கருதலாம். ஆனால் அண்ணன் ஜமாஅத், படுகொலையை [செங்கல்பட்டு செயற்குழு வரைக்கும்] கண்டிக்காமல், அதை நியாயப்படுத்தும் வகையில்தானே பேசினீர்கள்?

அடுத்து இணை வைப்பாளர்களின் செயலை பற்றி அல்லாஹ் கூறும்போது,
அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;
என்று கூறுகின்றான்.
கொல்லப்பட்ட ஜமாத்தார்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கும்போதுதான் கொல்லப்பட்டார்களா? அல்லாஹ்வை அவர்கள் நிராகரித்தார்களா? பள்ளிவாசலில் நுழைவதை தடுக்கும்போதுதான் கொல்லப்பட்டார்களா? ததஜவினரை ஊரைவிட்டும் விரட்டும்போதுதான் கொல்லப்பட்டார்களா? ஒரு பேச்சுக்கு அப்படியே அவர்கள் செய்திருந்தாலும், மேற்கண்ட ஹதீசையும், இந்த வசனத்தையும் ஆதாரமாக கொண்டு,

பள்ளிவாசலில் தொழுபவர்களை தடுக்கும் ஜமாஅத்தார்களையும்,
ஊர் விலக்கம் செய்யும் ஜமாஅத்தார்களையும்
இணைவைக்கும் ஜமாஅத்தாரையும்,

கொலை செய்வது மார்க்கத்தில் ஆகுமானதுதான் என்று ஃபத்வா வழங்க அண்ணன் ஜமாஅத் தயாரா?

மேலும், திருவிடைச்சேரி சம்பவத்திற்கும்- ததஜவிற்கும் தொடர்பில்லை என்றால் ஒருவரியில் முடித்திருக்கவேண்டும். ஆனால் தொடர்ந்து அதுபற்றியே வியாக்கியானம் கொடுப்பதின் மூலமும், அதற்கு தோதாக மார்க்க ஆதாரங்களை உருவாக்குவதன் மூலமும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று அண்ணன் ஜமாஅத் அழுத்தம் திருத்தமாக சொல்வதாகவே மக்கள் நம்புகிறார்கள்.


--
11/06/2010 07:50:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல்

0 comments:

Post a Comment