Monday, November 1, 2010

இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளே- சொன்னது யார்?

உணர்வு அக்டோபர் 1 -7 இதழில், பக்கம் 23 இல், தீவிரவாதிகள் யார்; ஆங்கில நாளேட்டிற்கு எஸ்.எல்.டி.ஜே.வின் பதில் என்ற தலைப்பில் வெளியான ஆக்கத்தில் ஒரு பாரா;

பீஜே தீவிரவாதியா?
கடந்த 25 ஆண்டுகளாக இஸ்லாம் ஒரு இனியமார்க்கம் நிகழ்ச்சி நடத்துவதின் மூலம், தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனால் பல இஸ்லாமிய அமைப்புகளின் பகைமையை பெற்று அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அதாவது பீஜே தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் எதிர்ப்பதால், இஸ்லாமிய அமைப்புகளின் பகைமையை பெற்று அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று சொல்ல வருவதன் மூலம், பல இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாத செயலில் ஈடுபடும் அமைப்பாகவும், அதில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகவும் இங்கே அடையாளம் காட்டுகிறார்கள் என்றால், இதற்கு பெயர் 'காட்டிக்கொடுத்தல்' இல்லையா?

இன்னும் சொல்லப்போனால் இவரது தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தால் ஒரு தீவிரவாத இந்துத்துவாவின் பகைமையையும் இவர் சம்பாதிக்கவில்லை. எனவே இந்துத்துவாக்கள் தீவிரவாதிகள் அல்ல. இந்துத்துவா அமைப்புகளில் தீவிரவாத அமைப்புகள் இல்லை. தீவிரவாத அமைப்புகளும், தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தான் என்று இதன் மூலம் சொல்லாமல் சொல்கிறார்கள்.

ஆக, இஸ்லாமிய பயங்கரவாதம்- முஸ்லிம் தீவிரவாதம் என்று இந்துத்துவாக்கள் சொல்லும் அதே ஸ்லோகத்தை இவர்கள் வழிமொழிந்துள்ளார்கள். ஆனாலும் இவர்கள் நமது சமுதாய பாதுகாவலர்கள் என்று நம்பவேண்டும்.

எல்லாம் அவன் [அல்லாஹ்] செயல்.

--
10/31/2010 08:00:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

0 comments:

Post a Comment