Tuesday, November 2, 2010

பட்டப்பகலில் பகலவனை மறைக்க நினைக்கும் பதர்கள்!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

உணர்வில் வெளியான,
பீஜே தீவிரவாதியா?
கடந்த 25 ஆண்டுகளாக இஸ்லாம் ஒரு இனியமார்க்கம் நிகழ்ச்சி நடத்துவதின் மூலம், தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனால் பல இஸ்லாமிய அமைப்புகளின் பகைமையை பெற்று அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.


என்ற பார்வை எடுத்தெழுதி, அண்ணனின் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தால், இஸ்லாமிய அமைப்புகளின் பகைமையை சம்பாதித்துள்ளார் என்று கூறுகிறீர்களே? அப்படியாயின் இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளா? அதில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்கள தீவிரவாதிகளா? என்ற வினாவை எழுப்பியிருந்தோம்.

இதற்கு பதிலளிக்க புகுந்த அண்ணனின் ஆசி பெற்ற பொய்யன் தளம் பதில் என்ற பெயரில் செய்துள்ள வார்த்தை மோசடிகளை பாருங்கள்;

அந்தக் கட்டுரையில் ஒரு பேராவில் சகோதரர் பி.ஜெ அவர்கள் தீவிரவாதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருவதால் இஸ்லாமிய அமைப்புக்கள் என்று சொல்பவர்களே இவரை எதிர்க்க ஆரம்பித்ததால் பி.ஜெ யுடைய பாதுகாப்பு தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.
என்று உணர்வில் எழுதப்பட்டுள்ளதாம்.

இவர்கள் சொல்வது போன்று உணர்வில் எழுதப்பட்டுள்ளதா? அல்லது மேலே நாம் அடிக்கோடிட்டுள்ள வாசகம் போன்று எழுதப்பட்டுள்ளதா என்பதை நடுநிலையாளர்கள் கவனிக்க வேண்டுகிறோம். இத்தகைய வார்த்தை மோசடி மூலம் செய்த தவறை மறைத்து, பட்டப்பகலில் பகலவனை மறைக்கும் கூட்டம் என்பதை காட்டுகிறார்கள்.

மேலும் இஸ்லாமிய அமைப்புகள் என்று சொல்பவர்களே என்ற வார்த்தைக்கும், இஸ்லாமிய அமைப்புகள் என்ற வார்த்தைக்கும் வேறுபாடு உண்டு. இஸ்லாமிய அமைப்புகள் என்று சொல்பவர்களே என்றால் அதற்கு அர்த்தம், அவ்வமைப்பை சேர்ந்தவர்கள் அவ்வாறு சொல்லிக்கொள்கிறார்கள் என்று பொருள். அது இஸ்லாமிய அமைப்பாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இஸ்லாமிய அமைப்புதான் என்று அண்ணன் வகையறாக்கள் உறுதிப்படுத்தி விட்டு, பின்னர் அவர்கள் தீவிரவாத அமைப்புகள் என்று சொன்னால் இவர்கள் இஸ்லாமிய இயக்கங்களை அறுதியிட்டு உறுதியாக தீவிரவாத இயக்கங்கள் என்று சொல்கிறார்கள் என்று அர்த்தம். இந்த வேறுபாட்டை மூளையை முற்றாக கழற்றி வைத்த கூட்டம் விளங்கிக்கொள்ளட்டும்.

அடுத்து அண்ணனின் தீவிரவாத எதிர்ப்பு பேச்சால் பாதிப்பைடைத்த இஸ்லாமிய அமைப்புகள், அண்ணனின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக உள்ளதாக கூறிய இவர்கள், அந்த தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்கள் எவை என்றும், அந்த இயக்கங்கள் நாட்டில் நடத்திய தீவிரவாத செயல்கள் எவை என்றும் பட்டியலிட்டிருந்தால் இவர்கள் அறிவாளிகள் என்று கொஞ்சமேனும் நம்பலாம். ஆனால் அண்ணனை எதிர்த்து அண்ணனுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு அடையாளமாக,

பஸ் பயணம் செய்தது.
சிலை திறந்தது[?]
மடாதிபதியிடம் ஆசி பெற்றது[?]
கொடிக்கு சல்யூட் அடித்தது.


இவ்வாறு பட்டியல் போடுகிறார்கள். இவைதான் தீவிரவாத இயக்கத்திற்கு அடையாளமா? அண்ணன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக உங்களால் மறைமுகமாக சுட்டிக்காட்டப்படும்,
இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, பாப்புலர் பிரன்ட் ஆகிய அமைப்புகள் நாட்டில் நடத்திய தீவிரவாத செயல்கள் என்ன? உங்கள் வாதப்படி தீவிரவாத அமைப்புகளான இந்த அமைப்புகளை இந்திய அரசு தடை செய்யாதது ஏன்?

எனவே மீண்டும் சொல்கிறோம். தங்களுக்கு எதிராக உள்ள இஸ்லாமிய அமைப்புகளை தீவிரவாத அமைப்புகளாக அரசுக்குக்கு காட்டிக்கொடுத்து, தங்களை வளப்படுத்த எண்ணுகிறீர்கள். உங்கள் சூழ்ச்சியை அல்லாஹ் மக்களுக்கு இனம்காட்டியே தீருவான் இன்ஷா அல்லாஹ்.

--
11/01/2010 09:07:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

0 comments:

Post a Comment