Tuesday, November 2, 2010

திருவிடைச்சேரி படுகொலை; அண்ணனுக்கு முரண்படும் ஏகத்துவம்!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

'உண்மை உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் ஒரே மாதிரி வரும்; பொய் பட்டப் பகலிலேயே பலவேஷம் கட்டும் என்பார்கள். அதுபோல திருவிடைச்சேரி படுபாதக படுகொலையில் இருந்து அமைப்பின் பெயர் அடிபடுவதை விட்டும் பாதுகாக்க, அண்ணனும் அவரை பின்பற்றுபவர்களும் இந்த சம்பவம் குறித்து நாளுக்கொரு வியாக்கியானம் தனது வருவதை நாம் ஏற்கனவே பட்டியலிட்டுள்ளோம். அதில் ஒன்றுக்குக்கூட இவர்களால் பதிலளிக்கமுடியவில்லை. அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிலையில் அதே திருவிடைச்சேரி குறித்து அண்ணனின் ஆரம்ப விளக்க வீடியோ கருத்துக்கு முரணாக ஏகத்துவம் அக்டோபர் இதழில் பல விஷயங்கள் வெளியாகியுள்ளன. அவைகளை நாம் தொடர்ந்து பார்ப்போம். முதலில், அண்ணனின் ஆரம்ப விளக்க வீடியோவில்,

உள்ளூர் கிளை நிர்வாகி அழைத்தவுடன் சும்மா நம்ம மர்கசுக்கு தொழுகைக்கு வருகிறார் குத்புதீன். அவரை ஜபருல்லாஹ் என்பவர் வழிமறித்து, இங்கே எப்படி நீ தொழ வரலாம் என்று கேட்க, அவ்விருவருக்கும் வாக்குவாதம் ஆகி, கை கலப்பு ஆகி, பின்பு ஒரு கூட்டமாக வந்து குத்புதீனை கடுமையாக தாக்கியவுடன் அவர் அவரது மச்சான் ஹாஜி முகம்மதுவிடம் சொன்னார். அவர் வந்து பள்ளிவாசலில் நியாயம் கேட்டபோது, அவரை தாக்க முற்பட்டதால் அவர் தற்காப்புக்காக சுட்டார் என்றுதானே சொல்லிவந்தார் அண்ணன்.

இதன் மூலம் பிரச்சினைக்கு காரணம் தொழ வந்த குத்புதீனை தாக்கியதுதான் என்கிறார் அண்ணன். இப்போது ஏகத்துவம் அக்டோபர் இதழில் பக்கம் 10 இல் இந்த பிரச்சினை எப்படி ஆரம்பித்தது என்று கூறுவதை படியுங்கள்;

'மாடியில் செயல்படும் மர்கசிற்கு நோன்பு திறக்க வந்த சலாவுதீன் என்பவரது தகப்பனாரை எதிர்வீட்டு ஜபருல்லாஹ், ஜமாஅத் தலைவர் இஸ்மாயில் மற்றும் சிலர் வழிமறித்து, இங்கு தொழுகைக்கு செல்லக்கூடாது என்று தடுத்துள்ளனர். அந்த தகவலை சலாவுத்தீன் தனது நண்பரான குத்புதீனுக்கு தெரிவிக்க, அவர் அந்த இடத்திற்கு வருகிறார். ஜபருல்லாஹ் ஜமாஅத் தலைவர் இஸ்மாயில் மற்றும் அவரது கூட்டத்தினரிடம் குத்புதீன் சமாதானமாக பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த கும்பல் குத்புதீனை உருட்டுக்கட்டையால் தாக்குகிறது.

என்ன சகோதரர்களே! வேறுபாடு புரிகிறதா?

பிரச்சினைக்கு காரணம் தொழ வந்த குத்புதீனை தாக்கியதுதான் என்கிறார் அண்ணன்.

ஆனால் ஏகத்துவமோ குத்புதீனை சமாதனம் பேசவந்தவராக, அதுவும் ததஜ உள்ளூர் கிளை துனைச்செயலாலரின் தந்தையிடம் தகராறு செய்பவர்களிடம் சமாதனம் செய்யவந்தவராக அடையாளம் காட்டுகிறது. வந்த இடத்தில்தான் குத்புதீன் தாக்கப்படுகிறார்.

நம்முடைய கேள்வி என்னவெனில், துணைச்செயலாளர் ஸலாவுத்தீன், தனது தந்தை ஜபருல்லாஹ் வகையறாக்களால் பிரச்சினைக்கு உள்ளாக்கப்படும்போது ஏனைய ததஜ உள்ளூர் நிர்வாகிகளை கூட அழைக்காமல், குத்புதீனுக்கு தகவல் தருகிறார் என்றால், நண்பர் எனபதால் மட்டுமா? அல்லது ததஜ உள்ளூர் கிளைக்கு குத்புதீன் அறங்காவலர் என்பதாலா?

இன்னும் சாட்டை சுழலும் இன்ஷா அல்லாஹ்.

--
11/01/2010 09:43:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

0 comments:

Post a Comment