Wednesday, December 1, 2010

தாங்கள் பின்பற்றுவது பிஜெயின் 5வது மதஹபாக இருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்!


வ அலைக்கும் வஸ்ஸலாம்

சகோதரர் நசீருதீன் அவர்களே,

தாங்கள் சகோதரர் அப்துல் ஹமீதிடம் வம்புக்கு இழுத்தீர்கள். அவரும் ஆரம்பத்தில் பொறுமையாக பதில் அளித்து வந்தார், தாங்களின் வரம்பு மீறல் காரணமாக, மனிதன் என்ற ரீதியில் அவரும் வரம்பு மீறி தவறு இழைத்து விட்டார். அவர் வரம்பு மீறிய காரணத்தால் தாங்கள் எதிர்ப்பார்த்ததை அவரும் சொல்லி விட்டார். எதை எதிர்ப்பார்த்தீர்களோ, அது கிடைத்த சந்தோஷத்தில் அதை அப்படியே உங்கள் நவீன இமாமிடம் ஒப்படைத்தீர்கள். அது அவருடைய கள்ள வெப்சைட்டில் வெளியிட்டார். அதன் மூலம் தான் எது சொன்னாலும் சரி என்ற மனோ பாவம் கொண்ட அப்பாவி ததஜ சகோதரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியினை அளித்தது.

தான் செய்த தவறுக்கு சகோதரர் அப்துல் ஹமீது மன்னிப்பு கேட்டு, அதை அவர் பொறுப்பு ஏற்றுள்ள எங்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இணையதளத்தில் பதிவு செய்தார். அதை கண்ணுற்ற தாங்கள் அதற்கு மறுமொழி அளித்தீர்கள். அதையும் நாம் வெளியிட்டோம். ஆனால் அதை பார்த்து விட்டு கீழ் கண்டவாறு....

//நான் யாருக்கு கடிதம் எழுதினேனோ அவர் அதற்க்கு ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் அதற்க்கு பெயர் போடாத யாரோ பதில் எழுதியது வேடிக்கையாக இருக்கிறது.//

என தாங்கள் இப்போதும் நம் இணையதளத்திற்கே எழுதுகிறீர்கள். வேடிக்கை எது என்பதை தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் சகோதரர் அப்துல் ஹமீதின் அட்ரஸுக்கோ அல்லது அவரது தனிப்பட்ட இமெயிலுக்கோ பதில் எழுதாமல், எங்கள் இணையதளத்தில் மூலம் பகிர்ந்து கொண்ட கடித்திற்கு நாங்கள்தான் பதில் அளிக்க வேண்டும்.

//இவரா? பிஜெயை எதிர்கிறார்? என்று எழுதியிருந்தீர்கள். அது யார்? என்பதை ஏன் குருப்பிடவில்லை. அவருக்கு பெயர் இல்லையா?//

சகோதரரே ஒருவர் இருவராக இருந்தால் பட்டியல் போட்டு விடலாம். பல சகோதரர்கள் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு நீங்கள் கீழக்கரையை சேர்ந்தவர் என்பதால், எங்கள் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளாக இருக்கும் கீழக்கரையை சேர்ந்த சகோதரர்கள் அபூபக்கர், ஜமீல் ஆகியோரை குறிப்பிட்டு இருந்தோம்.

இருந்தப் போதிலும் தாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சில சகோதரர்களை குறிப்பிட்டு காட்டுகிறோம்.

பிஜெ மீது அளப்பரிய நட்பும் பாசமும் வைத்திருந்தவர் இன்றைய தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரியாய் அவர்கள். பிஜெயிக்காக திருச்சி ஜெயிலில் தண்டணையை அனுபவித்தவர் அதை பிஜெயே தன் வாயால் ஒத்துக் கொண்டு இருக்கிறார். யாரை மிகப் பரிசுத்தமானவர் என கருதி இருந்தாரோ அவரின் உண்மையான முகம் கண்டு அவரிடமிருந்து வெளியேறினார்.

அவ்வாறே பலுழுல் இலாஹி என்ற சகோதரர், ரெக்காடிங் செய்வதில் உங்களை எலலாம் மிஞ்சி விடுவார். பிஜெயின் தளபதியாக செயல்பட்டவர். யு.ஏ.ஈயில் பிஜெயின் பிரச்சாரத்தை எடுத்துச் சென்று பிஜெயை ஹீரோவாக ஆக்கியதில் இவரின் பங்களிப்பு அளப்பரியது. பிஜெயின் ஆணவப் போக்கை கண்டித்த காரணத்தால், பிஜெயால் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டார்.

அதுபோல் ஹாமீத் பக்ரியாகட்டும், பிஜெயின் வானாளவ புகழப்பட்ட தமுமுக தலைவர்கள் ஜவாஹிருல்லாஹ், ஹைதர்அலி முதல் பிஜெயுடன் நகமும் சதையுமாக இருந்த எத்தனையோ பேர்களை சொல்லிக் கொண்டே போகலாம். பிஜெக்காக ரெக்காடிங் செய்ய சகோதரர் நசீருதீன், தாங்கள் இறுதியாக வந்துள்ளீர்கள் போலும்.

அபூஅப்துல்லாஹ், கமாலுதீன் மதனி, ஹாமீத் பக்ரி முதல் பாக்கர், தொண்டியப்பா உள்ளிட்ட சகோதரர்கள் நெருங்கி பழகியதில் பத்தில் ஒரு பகுதி அளவாவது பிஜெயுடன் நெருக்கமாக இருந்தீர்ப்பீர்களா? என எங்களுக்கு தெரியவில்லை.

இவர்கள் எல்லாம் பிஜெயை தக்லீது செய்யாமல், மார்க்கத்தை தக்லீது செய்த காரணத்தால்தான் பிரிந்தார்கள். பிஜெக்கு தன்னை தக்லீது செய்பவர்களைதான் ரெம்ப பிடிக்கும். ஆரம்பத்தில் தன்னைதான் இவர்கள் தக்லீது செய்ய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வையும் ரஸுலையும் சேர்த்து நூல் போடுவார். அதன் பிறகு தான் சொல்வதை எவ்வித மறுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு உள்ளாரா என சோதிப்பார். அவர் சோதனையில் அவரை தக்லீது செய்யாமல், மார்க்கத்தை பின்பற்றக் கூடியவராக இருந்தால், குறை சொல்லி அமைப்பை விட்டே அனுப்பி விடுவார்.

சகோதரரே! நீங்கள் நுழைந்து இருப்பது இப்போது, அவர் அங்கம் வகித்த ஒவ்வொரு அமைப்பிலும் கலகம் செய்து கொண்டு இருந்தப் பொழுது அவருக்கு எதிராக எத்தனை அறிக்கைகள் விடப்பட்டுள்ளது என்று அபூஅப்துல்லாஹ் காலத்திலிருந்து பாருங்கள்.ஏன் தயவு செய்து தலைமை கழக நிர்வாகியாக 6 மாத காலத்திற்கு தாங்கள் இருந்து பாருங்களேள். உண்மை புலப்படும்.

உணர்ச்சி வசத்தில் உச்சத்தில் நிற்பவருக்கு நாம் சொல்லும் வார்த்தை நகைப்புக்கு உரியதாகத்தான் தெரியும். அதனால் ஒன்றும் இல்லை.

ஏனெனில் அபூஅப்துல்லாஹ் அவர்கள், இவர் குறித்து சொன்னப் பொழுது, கமாலுதீன் மதனி உட்பட ஜாக் நிர்வாகிகள் யாரும் நம்பவில்லை. அபூஅப்துல்லாஹ்வைதான் குறை கண்டார்கள். அதுப்போல் ஜாக் குறித்து இல்லாத பித்னாவை கிளப்பி தமுமுகவை உருவாக்கி, அதன் தலைவர்களை நம்ப வைத்து தன் கை பாவையாக வைத்திருந்தப் பொழுது, ஜாக் தலைமை நிர்வாகிகள் சொன்னதை தமுமுகவின் தலைமை நிர்வாகிகள் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் முதல் யாரும் கேட்கவில்லை. ஜாக்கைதான் குறை சொன்னார்கள்.

ஜவாஹிருல்லாஹ், ஹைதர் கை ஒங்கி விடக்கூடாது என்பதற்காக, தமுமுக சமுதாய பிரிவு, மார்க்க பிரிவிற்காக அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு என நைசாக பேசி உருவாக்கினார். அதில் தன் கைபாவையாக இருந்த ஹாமீத் பக்ரியை தலைவராக நியமித்தார். இவர்களை கொண்டு கமாலுதீன் மதனி, ஜாக் சொத்துக்களை தன் மனைவி பெயரில் எழுதி கொண்டார் என கள்ள வீடியோ எடுக்க வைத்து அதை அனைவருக்கும் போட்டுக் காட்டி கமாலுதீன் மதனி மீது அபாண்டத்தை சுமததினார்.

ஜவாஹிருல்லாஹ், ஹைதர் கை ஓங்கி விடும் என்பதற்காக உருவாக்கப்பட்ட அனைத்து ஜமாஅத் கூட்டமைப்புக்கும், தமுமுகவிற்கும் இடையில் சிண்டு முடிந்தார். அதற்கு ஆரம்பத்தில் சகோதரர் பழுலுல் இலாஹிதான் கருவியாக்கப்பட்டார். அதன் மூலமாக தமுமுகவை உடைத்தார். தமுமுகவை உடைக்கும் முன்பே பழுலுல் இலாஹியை தமுமுக தலைவர்களை கொண்டே வெளியேற்றினார் என்பது இவரின் சதி வேலைகளில் தனி முத்திரையாகும்.

இவரின் வஞ்சத்தனத்தால் அமைப்பு உடைக்கப்பட்டதை அறியாமல், அப்பாவி பிஜெயின் மீது அவதூறு கூறுகிறார்களே என என பாக்கர் மற்றும் இதஜவின் இன்றைய எங்களின் தலைவர்கள் வருத்தப்பட்டோம். தமுமுகவிற்கு எதிராகவே எங்களை வைத்து சிடி தயாரித்து எங்களை கருவருக்கும் இவரை புரிந்து கொள்ளவில்லை.

இவருடன் நாங்கள் அருகில் இருந்தப் பொழுதுதான் இவரின் ஒரிஜினல் முகம் கண்டு பதறிப் போனோம். தன் மனோ இச்சைக்காக எதையும் செய்யக்கூடியவர் என்று தெரிந்தது. ஏகத்துவப் பிரச்சாரம் நின்று விடக்கூடாதே என இவரின் எல்லா அடாவடித்தனத்தையும் பொறுத்துக் கொண்ட எங்கள் மீது அபாண்டங்களை சுமத்தி வெளியேற்றினார். அல்லாஹ்வை மட்டுமே ஈமான் கொண்டுள்ள எங்களுக்கு மறுமையில் உண்மையை விளங்க வைக்க போதுமானவன்.

சகோதரர் நசீருதீன், ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள். தாங்களை அவர்கள், இவர்கள் என கண்ணியத்துடன் அழைக்கும் இன்றைய பிஜெ, இதற்கு முன்பாக மிக அன்பொழுக அழைத்த அவருடைய முன்னாள் சகாக்களை, இன்று எப்படி அழைக்கிறார் என சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நீங்கள் கேட்கலாம், நீங்கள் சுட்டிக்காட்டும் அவருடைய முன்னாள் சகாக்கள் யாரும் எந்த தவறும் செய்யாதவரா?

மனிதன் என்ற முறையில் சிற்சில தவறுகள் எல்லோருடமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் பிஜெ விஷயத்தில் 1984 தொட்டு 2010 இதுவரை ஒன்றுக்கு பல முறை யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு உண்மை புரியும்.

ஒரு மனிதனுடன் ஒருவர் இருவர் குறை காணலாம், குற்றம் சுமத்தலாம். ஆனால் ஒரு மனிதனிடத்தில் எவ்வித காழ்புணர்ச்சியும் இன்றி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் குற்றம், குறைகளை கண்டால் யார் மீது தவறு இருக்கிறது?

தமிழ் மொழியில் தவ்ஹீத் அறிஞர்கள் ஏராளம் பேர்கள் இருக்கிறார்கள். கமாலுதீன் மதனி, இக்பால் மதனி, அப்துல் காதர் உமரி, ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, அலி அக்பர் உமரி, முஜிபுர் ரஹ்மான் உமரி, முப்தி உமர் ஷெரீஃப், ஷம்ஸுதீன் காஸிமி, அபூபக்கர் மன்பஈ, அப்துல் காதர் மன்பஈ, நிழாமுதீன் அஷ்ரஃபி, அலாவுதீன் பாகவி, அப்துல் மஜீது மஹ்லரி, பிஸ்மில்லாஹ்கான் பைஜி, ஜே.எஸ்.ரிபாய் என்று ஏராளமான அறிஞர் பெருமக்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவர்கள் யாரும் தப்லிக் ஜமாஅத்திலோ, சுன்னத் வல் ஜமாஅத்திலோ இல்லை. எந்த மதஹபிலும் இல்லை. அதிலும் குறிப்பாக பிஜெயின் 5வது மதஹப்பில் இல்லை. அல்லாஹ்வும் ரஸுலும் சொன்ன விஷயங்களை மட்டும் கை கொள்ளும் அருமையான மவ்லவிகள்.

புதியதாக உருவாகி வரும் பிஜெயின் 5வது மதஹபைதான் நான் ஏற்பேன் என தாங்கள் அடம் பிடித்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதுதான் உண்மையான இஸ்லாமிய வழி என தாங்கள் சொல்லிக் கொண்டு அதையேதான் பின்பற்றுவதால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை.

நேர்வழியையும் கூலி வழங்க தகுதி உள்ளவனும் அல்லாஹ் ஒருவனே!

வஸ்ஸலாம்.


0 comments:

Post a Comment