Saturday, December 18, 2010

விவாதத்திற்கு அழைத்தவரையே விவாதப் பொருளாக்கும் வித்தகர்தான் இந்த பீஜே!








ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
மவ்லவி முஜாஹித் அவர்களை தவறு செய்யத் தூண்டி, அதை பதிவு செய்து வைத்துக்கொண்டு 'பிளாக்மெயில்' செய்து தாஃவா செய்யகூடாது என்று தாதாயிசம் செய்த அண்ணன் ஜமாஅத்தின் அழைப்புப்பணியை நேற்று நாம்  எழுதினோம். அந்த வரிசையில் அடுத்தப்படியாக, அண்ணனும் தன் பங்குக்கு முஜாஹிதை விவாதப் பொருளாக்கி அவர் மானத்தை வாங்கும் கீழ்நிலைக்கு சென்ற கதை பார்ப்போம்.

''பீஜேயுடன் விவாதத்திற்கு  தாயார் என்று முஜாஹித் கூறியதாக ஒரு தகவல் ரஷீத்  என்பவர் வாயிலாக, தனது இணையதள கருத்துரை பகுதியில் அறிகிறார் பீஜே. பீஜே உடனே முஜாஹிதுடன் விவாதத்திற்கு தயார்! என்று மட்டும் கூறியிருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பீஜே சொன்னதை கீழே படியுங்கள்;

''ஏற்கனவே முஜாஹிதிடம் விவாதம் செய்வது குறித்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட  பிறகும் அவர் ஒத்து வரவில்லை. [முஜாஹித் பீஜேயுடன் கலந்துரையாடுவதற்குதான் விரும்பினார் என்பது தனி விஷயம்] இப்போது அவர் மிகமிக அசிங்கமான செயலில் ஈடுபட்டு, இனிமேல் தாஃவா செய்யக்கூடாது என்ற நிபந்தனையின்  அடிப்படையில் அவர் குறித்த குறுந்தகடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதை உடைப்பதற்கே  இந்த விவாத அழைப்பு.

முஜாஹிதிடம் விவாதிப்பதற்கு  தவ்ஹீத்ஜமாத் தயராக  உள்ளது. அதற்கு முன் அவர் செய்த பாலியல் சேட்டைகள் குறித்து பொதுமேடையில் விவாதித்து, அதன் பின் அவர் மார்க்கத்தை  பேச தகுதியுள்ளவர் எனபது நிரூபிக்கப்பட்டால் விவாதிக்கலாம். அவர் விவாதிக்கவோ, மேடையில் பேசவோ தகுதியுள்ளவரா என்பதை அவர் நிரூபிக்கத் தயாரா?

“முஜாஹிதிற்கு நிகரான கேவலமான ஒருவர் இந்த உம்மத்திலேயே கிடையாது” என்பது எனது நிலை. அந்த குறுந்தகடைப் பார்க்கும் யாரும் இதே முடிவுக்குத்தான் வருவார்கள். என்கிறார் பீஜே.

என்ன சகோதரர்களே! புரிகிறதா? முஜாஹிதுடன் இந்த  விவாதப்புலி விவாதிக்க  வரவேண்டுமென்றால், முதலில் விவாதத்தின் கருப்பொருளாக முஜாஹித் இருக்கவேண்டும் என்கிறார். அதாவது முஜாஹித் செய்த பாலியல் சேட்டை குறித்து முதலில் விவாதிக்கவேண்டுமாம். இதை பீஜே எப்போது சொல்லலாம் என்றால், 

தான் செய்த தவறை முஜாஹித் மறுத்து, பீஜே மாதிரி தன்னை 'தான் மட்டுமேயோக்கியர்' என்று முஜாஹித் சொன்னால் பீஜே இந்த நிபந்தனையை  விதிக்கலாம். ஆனால் முஜாஹிதோ தான் செய்த தவறை பகிரங்கமாக ஒத்துக்கொண்டு, அல்லாஹ்விடம்  வ்பா செய்கிறேன் என்று சொன்ன பின்னால், அதைப்பற்றி விவாதிக்கவேண்டிய அவசியமென்ன? அவரது தீர்ப்பு அல்லாஹ்வின் கையிலல்லவா உள்ளது..? 

ஆக, முதலில் முஜாஹிதை பற்றி விவாதித்தால்தான் அடுத்து மார்க்கவிஷயத்திற்கு வருவேன் என்று  பீஜே அடம்பிடிப்பதன் மூலம், பீஜேயின் நோக்கம் மவ்லவி முஜாஹித் அவர்களோடு முரண்பட்ட மசாயில்களை விவாதிப்பது அல்ல. மாறாக முஜாஹிதின் தனிப்பட்ட விஷயத்தை மேடையில் அலசி அவரின் மானத்தை கடைபோட்டு சீடியாக்கி விற்பதுதான்  என்பது தெளிவாக புலப்படுகிறது.

சமீபத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச்செயலாளர் மூன்று விஷயங்கள் குறித்து முபாஹலாவுக்கு தயாரா? என்று பீஜேவுக்கு சவால் விட, அதை ஏற்காமல் உன்மீது ஒரு பட்டியல்  விஷயங்கள் இருக்கிறது என்று சொல்லி, அதற்கும் முபாஹலாவுக்கு தயாரா? என்று சால்சாப்பு சொல்லி ஓடியதைப் போல், முஜாஹித் விசயத்திலும்  உலகத்திலேயே [பீஜேயின் கூற்றுப்படி] விவாதத்திற்கு அழைத்தவரையே விவாதப் பொருளாக்கி, விரைந்து பதுங்கிய இந்த விவாதப்புலியை இன்னுமா மக்கள் நம்புகிறார்கள்? 

--அப்துல் முஹைமின் 

0 comments:

Post a Comment