எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்,
[intj]தேசியத்தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் அடிப்படையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் குவைத் மண்டலம் வீரியமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக,
மண்டல தலைமை அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு வெள்ளிக்கிழமை[ 03 -12 -2010] மாலை 6 மணியளவில் சிறப்புடன் நடைபெற்
[மீனா பஜார் அருகில்] மிர்காப் குவைத்.
தொடர்புக்கு; 97659759 ,65120393 ,65727633 , 97102763 ,97465872 ,55890813 ,65531023 ,65569054
Saturday, December 4, 2010
குவைத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மண்டல தலைமை அலுவலகம் திறப்பு; மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி !
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
குவைத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மண்டல தலைமை அலுவலகம் திறப்பு; மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...றது.
மண்டலத் துணைத் தலைவர் புகாரி ஹசன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்க, மண்டலசெயலாளர் சாதிக் சதாம் மற்றும் ஏனைய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மண்டல அழைப்பாளர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள், 'உறுதியான நம்பிக்கை' என்ற தலைப்பிலும், மண்டலத் தலைவர் முகவைஅப்பாஸ் அவர்கள், ' பெருமை தவிர்ப்போம்'என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
சகோதரர் முகவைஅப்பாஸ் தனது உரையில், சதிகாரர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் தவிடு பொடியாக்கும் வகையில், நமக்கு குறுகிய காலத்தில் மகத்தான வெற்றியை வழங்கியுள்ளான். இந்த வெற்றியின் புகழ் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. இதஜ வில் உள்ள எவருக்கும் பெருமையோ, தலைக்கனமோ வந்துவிடக்கூடாது. ஏனெனில் பெருமையடித்த பலம் பொருந்தியவர்கள் சிறுமையடைந்து நிற்பதை கண்கூடாக காண்கிறோம் என்று கூறியதோடு, பெருமையால் அழிந்த காரூன் போன்றவர்களின் சம்பவங்களை விவரித்தார்.
குறுகிய கால ஏற்பாட்டின் காரணமாக அலுவலக திறப்பு குறித்த செய்தியை பெரும்பாலான மக்களுக்கு கொண்டு சேர்க்க இயலாத நிலையிலும், கணிசமான சகோதரர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் பிரதி வெள்ளியன்று மண்டல அலுவலகத்தில் மாலை 7 மணி முதல் 8 மணிவரை பல்வேறு தவ்ஹீத் அறிஞர்கள் பங்குபெறும் சொற்பொழிவை வாரம் தோறும் நடத்தப்போவதாக மண்டல நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இறுதியாக மண்டல பொருளாளர் கண்டியூர் ராஜ் முஹம்மது அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!
மண்டல அலுவலகம்; அல்-ரூமி பில்டிங் கீழ்த்தளம், அலுவலக எண்;8
பணி நேரம்; காலை 10 முதல் இரவு 10 வரை [வெள்ளிக்கிழமை மட்டும்]
0 comments:
Post a Comment