Saturday, December 4, 2010

இதஜ குவைத் மண்டலம் சார்பாக பயணத்திற்கு உதவி!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இதஜ குவைத் மண்டலம் சார்பாக பயணத்திற்கு உதவி!
குவைத்தில் வீட்டுவேலை செய்துவந்த கேரளாவை சேர்ந்த முஹைதீன் என்ற சகோதரருக்கும்- அவரது ஒப்பந்தகாரருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் பயணச்சீட்டு எடுத்து வந்தால் தான் ஊருக்கு அனுப்புவேன் என்று ஒப்பந்தகாரர் கூறியதையடுத்து, வறிய நிலையில் இருந்த அந்த சகோதரர் இதஜ வை நாடி உதவி கோரினார். அவருக்கு குவைத் மண்டலம் சார்பாக விமான பயணச்சீட்டு வழங்கி அவரது இனிய பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பயணச்சீட்டை பெற்றுக்கொண்ட அந்த சகோதரர், எனக்கு தெரிந்தவர்கள் கூட உதவ முன்வராத நிலையில் முகம் தெரியா சகோதரர்களாகிய நீங்கள் உதவியுள்ளீர்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

0 comments:

Post a Comment