Wednesday, December 29, 2010

திருச்சியில் மிக எழுச்சியுடன் நடைபெற்ற வஃக்பு நில மீட்பு மாநாடு!

திருச்சியில் மிக எழுச்சியுடன் நடைபெற்ற வஃக்பு நில மீட்பு மாநாடு


சுமார் ஒரு கோடி முஸ்லிம்கள் வாழும் தமிழகத்தில், கோடிக்கணக்கான முஸ்லிம்களின் வஃக்பு சொத்துக்கள் களவாடப்பட்டு தனி நபர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அவை மீட்டு, வீடு இல்லாத ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கான முதல் முயற்சியை, ஏக இறைவனும் அவனது கண்ணியமிக்க தூதரும் காட்டிய வழியில் போராடும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எடுத்துள்ளது.
ஆம், அதன் முதல் மாவட்ட மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் மிகச் சிறப்பாக கடந்த 26.12.2010 அன்று நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
சுமார் 4 ஆயிரம் மக்கள் பங்கேற்ற இந்த மாநாட்டை மாநிலச் செயலாளர் அபூ ஆஸியா தொடங்கி தொகுத்து வழங்கினார்.

சமூக அறக்கட்டளையின் தலைவர் CMN சலீம் அவர்கள்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கொள்ளை போன வக்ஃபு சொத்துக்கள் என்ற  தலைப்பில் மிக சிறந்த விழிப்புணர்வு உரையை ஒன்றை ஆற்றினார்.

நம் உயிரைக் கொடுத்தாவது வஃக்பு நிலங்கள் மீட்கபட வேண்டும் என கோரிக்கையை அவர் வைத்தார்.

மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீது, களம் காணத் தேவை இறையச்சம் என்ற தலைப்பிலும், மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹைதீன்  கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும்  உரையாற்றினர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் நாசர், திருச்சி 34வது வார்டு உறுப்பினர் வெங்கட்ராஜ ஆகியோர் வாழ்ததுரை வழங்கினர்.

இறுதியாக தேசிய தலைவர் S.M.பாக்கர், உணர்வு பூர்வமான உரை ஒன்றை ஆற்றினார். அவர் இறையில்லாத்திற்காக வஃக்பு செய்யப்பட்ட நிலங்கள் கூட எவ்வாறெல்லாம் சூரையாடப்பட்டுள்ளது என பட்டியல் போட்டார்.
முன்னதாக மாநிலப் பொருளாளர் தொண்டியப்பா, வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜமீல், மாநில செயலாளர் செங்கிஸ்கான், மாநிலப் பேச்சாளர் அப்துல் காதர் மன்பஈ, தஞசை மாவட்ட தலைவர் ஜஃபர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்தனர்.
இறுதியாக துணைத் தலைவர் முஹம்மது முனீர், தீர்மானங்களை வாசித்தார்.
வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வக்ஃபு நிலத்தில் இலவச பட்டா வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடு இல்லாத ஏழை எளி மக்களுக்கு, வக்ஃபு வாரிய நிலத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் வாடகை வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும்,

இந்திய முழுவதும் உள்ள வக்ஃபு நிலங்கள் மீட்கப்படுவதற்கும், அது தொடர்பான வழக்குகள்  வழக்குகள் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கும் வக்ஃபு வாரியங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

வக்ஃபு வாரியத்திற்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தமிழகத்திலுள்ள வக்ஃபு சொத்து குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

பெரியபட்டிணத்தில் கடலில் முழ்கி இறந்த ஒவ்வொருவருக்கும் 5 இலட்சம் ரூபாய் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்ற தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

நிலம் இல்லாத ஏழைகளிடம் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்க இருக்கிறது.
இறுதியாக திருச்சி மாவட்டத் தலைவர் ரிஸ்வான் நன்றியுரை வழங்கினார். மிகச் சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

0 comments:

Post a Comment

0 comments:

Post a Comment