Tuesday, December 14, 2010

பஞ்ச் பட்டிக்காட்டான்[11] just4jokes


முதல்வர் கருணாநிதி பேச்சு; இப்போது 1 ல ட் ச த் து 76 ஆ யி ர த் து 352 கோடி ரூபாய் ஊழல் என்கிறார்கள். அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் தனியாக ஊழல் செய்திருக்க முடியுமா? இவ்வளவு பெரிய கணக்கை ஒரு தாளில் எழுதிக் காட்டினால் நாம் நம்புகிறோம்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; தனி ஆளாக இவ்வளவு பெரிய தொகை ஊழல் செய்யமுடியாதுன்னா; சில பேர் கூட்டு சேர்ந்து செஞ்சிருப்பாங்கன்னு சொல்ல வர்றீகளா?

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்:தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள், அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை அமைப்புகளை பலப்படுத்தியுள்ளன. அந்தக் கட்சிகளைப் போலவே காங்கிரசை பலப்படுத்த, கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும். காங்கிரஸ் ஆட்சி அமையும் வரை தூங்க மாட்டேன்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; அவங்க அவங்க கோஷ்டியை பலப்படுத்துவதற்கே நேரம் போதாம கவலைப்படுறாங்க. இதுல தமிழகத்துல ஆட்சிய புடிச்சாத்தான் தூங்குவேன்னு நீங்க அடம்புடிச்சா இனிமே தூங்குவதை மறந்துறவேண்டியதுதான்.

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேச்சு; தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலித் சமுதாயத்துக்கு முதல்வர் பதவி அளிக்கப்படும்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; சாத்தியமே இல்லன்னு தெளிவா தெரிஞ்சதுனால தைரியமா சொல்றீங்களோ? இனிமே ஆட்சிக்கு வரப்போற மாநிலத்த விட்டுட்டு இப்ப ஆட்சில இருக்குற மாநிலத்துல ஒரு தலித்தை முதல்வராக்க வேண்டியதுதானே?

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன்; தேர்தல் நாங்கள் இருக்கும் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவது அவருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. வராவிட்டால் அவருக்கும் நாட்டுக்கும் கெட்டது.

பஞ்ச் பட்டிக்காட்டான்; நீங்க சொல்ற விதத்த பார்த்த விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்குற மாதிரி தெரியலையே. சாபம் விடுற மாதிரில இருக்கு.

இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன்; ராசா நியாயமானவராக இருந்ததும் தலித் என்பதற்காக பழிவாங்கப்பட்டதக கூறுவது உண்மையானால், இதை கண்டித்து மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கிக்கொண்டு அமைச்சரவையில் இருந்து திமுக விலகவேண்டியது தானே?

பஞ்ச் பட்டிக்காட்டான்; உடன்பிறப்பே! தலித்துகளும் நானும் இரண்டற கலந்தவர்கள் என்பதை அறியாமல் தமிழரசன் பேசுகிறார். ஆட்சியை இழப்பதைப் பற்றி பேசுகிறார். ஆனால் என் வீட்டு அடுக்களை வரை ஆட்சி செய்யும் அதிகாரத்தை தலித் சமுதாயத்திற்கு வழங்கியுள்ளதை ஒரு தலித்தை மருமகளாக்கியதன் மூலம் நிரூபித்துள்ளேன் என்று முதல்வர் கடிதம் எழுதக்கூடும்.

செய்தி; பாராளுமன்றம் 17 நாள் முடக்கத்தால் ரூ. 132 கோடி அரசுக்கு இழப்பு.

பஞ்ச் பட்டிக்காட்டான்; நல்லவேளை இன்னும் ரெண்டு மாசம் பாராளுமன்றம் நடந்திருந்தா '2 g அலைக்கற்று இழப்பை தாண்டி பாராளுமன்றம் முடக்கத்தால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் போல் தெரியுதே!

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பேச்சு; அடுத்த ஐந்து மாதங்களுக்கு பின், தி.மு.க., அரசு இருக்காது.

பஞ்ச் பட்டிக்காட்டான்; அரசியலோட இப்ப ஆரூடமும் நல்லா பேச ஆரம்பிச்சுட்டீங்களே!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: எனக்கும், போராட்டம் நடத்தி ஜெயிலுக்கு போக ஆசையாக உள்ளது. சட்டசபை தேர்தல் முடிந்ததும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடி ஜெயிலுக்கு போக வேண்டும்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; அது என்ன தேர்தல் முடிஞ்சப்புறம்? இப்பவே போகவேண்டியதுதானே யார் தடுத்தார்கள்.?

செய்தி; நடிகர் பிரகாஷ்ராஜ் தனது திருமணத்தை பதிவு செய்தார்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; சபாஷ்! வெவரமான ஆளுதான்!! மோசடிப் பதிவாளர்கள் சமீபகாலமாக குடும்பத்தோட அலையுறதை கேள்விப்பட்டுட்டாரோ என்னவோ?

முதல்வர் கருணாநிதி பேச்சு; இப்போது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடாக தி.மு. கழக ஆட்சியில் வழங்கப்பட்டிருப்பது 3.5 சதவிகிதம். பத்து சதவிகிதத்தை மத்திய அரசு கொடுக்குமேயானால், அந்த பத்து சதவிகிதத்துக்குள் இந்த 3.5 சதவிகிதமும் இருக்கும் என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆகவே பத்து சதவிகிதத்திற்காகவும் நாம் அணி வகுப்போம். அந்த அணி வகுப்பில் வெற்றி பெற்றால் பத்துக்குள் ஐந்து கிடைக்கும், அதையும் பெற்றுக் கொள்வோம். பத்து கிடைத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம், பெருமை அடைவோம்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; அய்யா! ஏற்கனவே நீங்க வழங்குன 3.5 சதவிகிதம் கணக்கே இன்னும் ரோஸ்டர்-பூஸ்டர்ன்னு ஒரே குழப்பமா இருக்கு; இதில மறுபடியும் பத்துக்குள்ள ஐஞ்சு, பத்துக்குள்ள ஏழுன்னு நீங்க சொல்ற கணக்கு ஒண்ணுமே புரியலைங்கோ!

0 comments:

Post a Comment