Tuesday, February 1, 2011

விபச்சாரிக்கு வக்காலத்து வாங்கும் பி.ஜே. பின்னணியில் மர்மங்கள். SDPI vs TNTJ


விபச்சாரிக்கு வக்காலத்து வாங்கும் பி.ஜே.
பின்னணியில் மர்மங்கள். ததஜவில் கலக்கம்
[SDPI -TNTJ இடையே நடந்து வரும் மதுரை மகபுப் பாளைய
  மோதல் தொடர்பான இணையத்தில் வெளியான  செய்தி]
!
மதுரையில் மஹபூப் பாளையம் பகுதியில் புல்லட் ராணி என்று சொல்லக்கூடிய பெண் விபச்சாரத்தை தொழிலாக செய்து வருகிறாள். அப்படி செய்யும் தொழிலில் குணசுந்தரி என்ற பெண்ணும் உண்டு. அந்த பகுதியில் உள்ள பலர் எச்சரித்தும் அவள் அந்த தொழிலை செய்தே வந்திருக்கிறாள்.


கடந்த 12-01-2011 அன்று இவர்கள் இருவரும் பர்தா அணிந்து முஸ்லிம்கள் போல தோற்றத்துடன் அந்த பகுதியிலுள்ள இளைஞர்களை குறிவைத்து சைகை செய்து கொண்டிருந்தனர். இதனை அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் கண்டித்து அவர்கள் இருவரையும் காவல்நிலையம் அழைத்து செல்ல திட்டமிட்டனர்.


இதில் புல்லட்ராணி தப்பித்து ஓடிவிட்டார். குணசுந்தரியை அவர்கள் நால்வரும் சேரந்து காவல்நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.
இது நடந்த மற்றும் அனைவரும் அறிந்த செய்தி. ஆனால்பின்னணியில் உள்ள தகவல்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன.


பொதுவாககிரிமினர்களை போலீஸார் பிடித்தவுடன் அவர்கள் தங்களுக்கு நெருக்கமான,பிரபலமானவர்களின் பெயர்களை சொல்லி தப்பிப்பார்கள். அல்லது அவர்களுக்கு போண் போட்டு ரெகமன்ட் பண்ண சொல்வார்கள்.
இங்கேயும் அதுதான் நடந்திருப்பதாக தெரியவருகிறது. தன் தொழில் பெண்ணை முஸ்லிம் இளைஞர்கள் பிடித்து போலீஸிற்கு கொண்டு செல்கிறார்கள் என்பதை அறிந்த புல்லட் ராணி அவர்கள் ததஜவினராகத்தான் இருக்கும் என நினைத்து உடனடியாக தனது பழைய'பழக்கத்தைபயன்படுத்தி பி.ஜேக்கு போன் செய்து உங்கள் இளைஞர்கள் எங்கள் பெண்ணை பிடித்து செல்கின்றனர் எனவே அவர்களிடம் சொல்லி அந்த பெண்ணை விட்டுவிடச் சொல்லுங்கள் என பேசியிருக்கிறார்.


உடனே மஹபூப் பாளையம் பகுதிக்கு போன் செய்து விசாரித்த பி.ஜேக்கு அங்கிருந்த பொறுப்புதாரிகள் அந்த ஆட்டோ டிரைவர்கள் எஸ்டிபிஐ என சொல்லவும்,இதுதான் நல்ல சந்தர்பப்ம் என கருதிய பி.ஜே அந்த புல்லட்ராணியிடம் நீ உடனடியாக அவர்கள் அந்த பெண்ணை கடத்தியதாக புகார் மனு எழுத சொல்லியிருக்கிறார். மேலும் காவல்துறை மற்றும் உளவுத்துறையில் தனது நெருக்கத்தை பயன்படுத்தி அந்த புகார் மனுவை பெற்றுக்கொள்ளவும் பிடித்து வருபவர்கள் மீது வழக்கு பதியவும் பிரஸர் கொடுத்துள்ளார்.


ஆட்டோவில் அழைத்து சென்றவர்கள் காவல்நிலையத்திற்கு செல்லுமுன் அங்குள்ளள போலீஸ்காரர்களுக்கு தகவல் வரவே அவர்கள் அந்த இளைஞர்களையும் குணசுந்தரியையும் பிடித்து வைத்திருக்கின்றனர். இளைஞர்கள் சொன்னதை போலீஸ் கேட்கவே இல்லை. பின்னர் புல்லட் சுந்தரி வந்து புகார் மனு கொடுக்கவும்,போலீஸ் அதை வாங்கிக் கொண்டு இளைஞர்களை கைது செய்தனர்.


இந்த செய்தி மக்கள் மத்தியில் பரவவும் கொந்தளிப்பை அடக்க இதை சமூக பிரச்சனையாக மாற்றி காட்டுவதிலும் பி.ஜேயின் கை இருந்ததாக தெரியவருகிறது. அந்த போஸ்டர் அடிப்பதற்கும் அவர் உளவுத்துறையை நாடி அவர்கள் மூலம் இந்த போஸ்டரை ஒட்டி முஸ்லிம் சமூகத்தில் பிரச்சனை பெரிதாவதை தடுத்துள்ளார். இப்பொது அந்த இளைஞர்களுக்காக நாம் போராடினால் அது ஜாதிப்பிரச்சனையாக மாறி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தெரியப்படுத்தியிருக்கிறார்.


இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உணர்விலும் கட்டுரை எழுதினார். விஷயம் அத்தோடு நின்றால் பரவாயில்லை. ஆனால்எஸ்டிபிஐ செய்தி வெளியிட்டதையடுத்து வளைகுடா நாடுகளிலுள்ள தவ்ஹீது சகோதரர்கள் சிலர் மதுரை மக்களை தொடர்பு கொண்டு பேசியபோது எஸ்டிபிஐயின் செய்தி உண்மைதான் என தெரியவந்துள்ளது.


புல்லட் ராணிக்கும் பிஜேக்கும் என்ன தொடர்புஏன் புல்லட் ராணிக்கு பிஜே வக்காலத்து வாங்கினார்புல்லட் ராணி பிஜேக்கு போன் பண்ணியதற்கு பின்னணி என்னபோன்ற பல கேள்விகள் தவ்ஹீது வட்டாரத்தில் புயலாய் வீசுகிறது. வளைகுடாவில் உள்ள ததஜ கிளைகளின் பல நிர்வாகிகள் அதிருப்பதியில் இருப்பதாகவும்பிஜே விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.


முஸ்லிம் பகுதிகளில் விபச்சாரத்தை கட்டவிழ்த்து விடும் இந்து முன்னணியினரின் திட்டங்களுக்கு ஆதரவாக நாம் எப்படி செயல்படாலாம்பிறகு இவர்கள் முஸ்லிம் பெண்களையும் இந்த விஷயங்களுக்கு பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் போன்ற விஷயங்களை வளைகுடாவிலுள்ள ததஜ பொறுப்பாளிகள் விவாதித்து வருவதாக தெரியவருகிறது.
எனவேததஜ நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும்இவ்வாறு செய்தி வெளியிட்டதற்கு உணர்வில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் பல கிளைகளின் பொறுப்பாளிகள் நிர்பந்திப்பதாக தெரியவருகிறது.


விஷயம் பெரிதானால் அது பொதுக்குழுவிலும் பிரதிபலிக்கும் என்பதால் தற்போதைக்கு அவர்களை ஆசுவாசப்படுத்தி பொதுக்குழு முடிந்த பிறகு இந்த விஷயங்களை பேசிக் கொள்ளலாம் என கூறப்பட்டிரக்கிறது.
ததஜ-வில் விரைவில் ஒரு பெரிய பூகம்பம் வெடிக்கும் என வளைகுடா பொறுப்பாளிகள் தெரிவிக்கிறார்கள்.

0 comments:

Post a Comment