Friday, February 4, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான் [14]


                                 




பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்; நம் கட்சியில் தேர்தல் கூட்டணிகள் அனைத்தும் தேனிலவு போல முடிந்து விடுகிறது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்த போது மூன்று மாத காலத்தில் தேனிலவு போல கூட்டணி முடிந்து நான்கே முக்கால் வருடம் மக்கள் பிரச்னைக்காக போராடினோம். அது போல தி.மு.க., கூட்டணியில் தேர்தல் முடிந்த எட்டு மாத காலத்தில் வெளியேற்றப்பட்டோம். 

பஞ்ச் பட்டிக்காட்டான்; இப்படி தேனிலவு முடிந்தவுடன் நீங்கள் வெளியேறிய அல்லது வெளியேற்றிய இரு திராவிடக் கட்சிகளுடன்  இனி ஒருபோதும் 'தேனிலவு' கிடையாது என்று அறிவிச்சீங்கன்னா உங்களை தைரியமானவர்னு சொல்லலாம்.

தே.மு.தி.க., கட்சியின் இளைஞர் அணி தலைவர் சுதீஷ்;  "சென்னையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து, சேலத்தில் மாநாடு நடக்கும் இடம் வரை 350 கி.மீ., தூரத்திற்கு பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. மதுரையிலிருந்து, சேலம் வரை 310 கி.மீ., தூரத்திற்கு பேனர்கள் மற்றும் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இதேபோன்று, கோவை - சேலம் இடையே 165 கி.மீ., தூரத்திற்கும், விருத்தாசலம் - சேலம் இடையில் 210 கி.மீ., தூரத்திற்கும் பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 1,000 கி.மீ., தூரத்திற்கு பேனர்கள் கட்டப்பட்டன. இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டிய சாதனை. 
 
பஞ்ச் பட்டிக்காட்டான்ஒருவேளை உங்க கட்சி தமிழ்நாட்டுல ஆட்சியப் புடிச்சா அதை  வேணும்னா கின்னஸ் சாதனைன்னு சொல்லிக்கலாம். ஆனா கட்டவுட்டு வச்சது, பேனர் வைக்கிறது இதெல்லாம் கின்னஸ் சாதனைன்னு சொன்னா மக்கள் சிரிக்க மாட்டாங்களா..? 

அண்ணா திமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ; கழக ஆட்சி அமைந்தால், எல்லா வேலிகளும் தகர்த்தெறியப்படும்

பஞ்ச் பட்டிக்காட்டான்; எல்லா வேலியும்னா  உங்களை தொண்டர்கள் சந்திக்கிறதுக்கு தடையா இருக்கிற 'வேலியை'யுமா என்று அப்பாவி  தொண்டன் கேட்குறான்.

தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா; "வரும் சட்டசபை தேர்தலில் இலவசங்களை வாங்க மாட்டோம் என, வாக்காளர்கள் நினைத்தால் மட்டுமே நேர்மையான தேர்தல் நடக்கும்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; தீபாவளி-போங்கள்  போனஸை நம்பி அரசு ஊழியர்கள் சிலர் கடன் வாங்குறமாதிரி, தேர்தல் 'போனஸை' நம்பி பொதுஜனமும் கடன்வாங்கியிருக்கிற இந்த நேரத்துல, நீங்க  இப்பிடி குண்டை தூக்கி போடுறது நியாயமா?

செய்தி; பட  அதிபர்கள் கூட்டத்தில் அரசியல் பேசியதால் பட அதிபர் தாக்கப்பட்டார். 
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; தமிழ் நாட்டில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சரியில்லன்னு குற்றம் சாட்டும் எதிர்கட்சிகள், இனி அரசியல் கூட பேசமுடியாத அளவுக்கு அராஜக ஆட்சி நடக்குன்னு சொல்வதற்கு இந்த சம்பவம் போதுமே!

0 comments:

Post a Comment