Tuesday, February 1, 2011

கலைஞரின் 5% அறிவிப்பால் ஆத்திரம் ! அண்ணா..தி.மு.க.வுக்கு தூது விட்ட அண்ணன்.

கலைஞரின் 5% அறிவிப்பால் ஆத்திரம் !
அண்ணா..தி.மு.க.வுக்கு தூது விட்ட அண்ணன்.

ஜனவரி   27 -ல் நடந்த சென்னை ,மதுரை போராட்டத்திற்கு பின் கலைஞர் நம்மை அழைப்பார் சந்தித்த பின் கண்காணிப்பு குழு, மற்றும் இட ஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்தும் அறிவிப்பு இரண்டும் தன்னால் தான் என தம்பட்டம் அடிக்கலாம் , ஏற்கனவே ஜூலை 4 கூட்டத்தை பார்த்து பிரதமரே அழைத்தார் என பில்டப் கொடுத்து பிலிம் காட்டியது போல் பண்ணலாம் என எண்ணியிருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது!  

அண்ணனுக்கு அரசியலில் சிவாஜி ராசி என்றும் இவர் ஆதரித்த கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததில்லை என்றும், இவரைப்பற்றி நன்கறிந்த கலைஞர் சந்திக்க தேதி கொடுக்காதது மட்டுமின்றி,   முன்னதாகவே முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கண்காணிப்பு குழுவை அறிவித்ததும், அதை இ.த.ஜ. கடிதம் மூலம் முன்னெடுத்து சென்றதையும், அறிந்து நொந்து போனார். 

சரி 5% அறிவிப்பையாவது நாம் முயற்சிக்கலாம் என நினைத்து கொண்டு இருக்கும் போது அதையும் எஸ்.எம்.இதயதுல்லாஹ் மற்றும் அலாவுதீன் IAS இல்லத் திருமணத்தில் கலைஞர் அறிவித்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கோபம் தலைக்கேறி ' இந்த வார உணர்வில் இதயதுல்லாஹ் வையும் கலைஞரை யும் திட்டித் தீர்த்துள்ளார். போராடும் எங்களை கூப்பிட்டு சொல்லாமல் நக்கிப் பிழைக்கும் இதயதுல்லாஹ் இல்லத் திருமணத்தில் சொல்வதா ?  என கொட்டித் தீர்த்துள்ளார். இதயதுல்லாஹ் வையும் கவிககோவையும் எத்தனை முஸ்லிம்களுக்கு தெரியும்? கலைஞரை விட்டேனா பார் என களத்தில் இறங்கி அன்வர் ராஜா மூலம் அதிமுக வுக்கு தூது விட்டார்.

நேற்று 1.2.11 மாலை மண்ணடியில் வைத்து பி.ஜே.வை சந்தித்த செங்கோட்டையன் , பன்னீர் செல்வம் ஆகியோரிடம் ம.ம.க.வை கழற்றினால் நாங்கள் முழு வீச்சில் பிரசாரம் செய்வோம். நீங்கள் இருக்கும் கூட்டணி சூழ்நிலையில் சீட்டு கேட்காத [ஆனால் நோட்டு கேட்கும் ] நாங்கள் தேவையா ? அல்லது சீட்டு கேட்கும் ம.ம.க.வா? சிந்தியுங்கள் ! என சொல்ல,  வந்தவர்கள் தலைமையை கேட்டு சொல்வதாக சொல்லி விட்டு சென்றுள்ளர்கள்.

இது இப்படியிருக்க, இவர்கள் பேச வரும் விஷயத்தை துறைமுகம் காஜா மூலம் தி.மு.க.வுக்கு இவர்களே தெரியப்படுத்த, மந்திரி மைதீன் கான் அவசரப் பட வேண்டாம்.தலைவர் டெல்லியில் இருந்து வந்தது நான் பேசுகிறேன் என அதிமுகவுக்கு வாலையும் திமுகவுக்கு தலையையும் காட்டிக் கொண்டு அரசியல்வாதிகளையே மிஞ்சும் அளவிற்கு அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறார். ராமதாஸ்  எல்லாம் அண்ணனிடத்தில் பிச்சை வாங்கணும் போங்க! அண்ணே ! பேசாம நீங்கள் கட்சி ஆரம்பிச்சு இருக்கணும் ! தப்பா தமுமுக ஆரம்பிச்சு இருக்காங்க!      

ஒரு முஸ்லிம் பேசிக் கொண்டிருக்கும் பெண் விசயத்திலோ , வியாபார விசயத்திலோ தலையிட்டு நீங்கள் முடிக்க வேண்டாம்! 
வாங்கும் நோக்கமின்றி பொருளின் விலையை ஏற்றி கேட்க வேண்டாம்!

என்ற நபி மொழி எல்லாம் நம்க்கிலையே ! மக்களுக்குத்தானே!  அந்த நபி மொழி எல்லாம் நாம கடைப்  பிடிக்கிறதா இருந்தா,  இரண்டு வருடம் பாக்கர் தலைமையில் செயல்படும்  இந்திய தவ்ஹீத் ஜமாத்தை நம்ம குடும்ப உறுப்பினர்களை கொண்டு அபகரிக்க நினைசிருப்போமா? அடுத்தவன் பள்ளிவாசலை ஆட்டயப் போடுவமா? ஏதோ தேர்தல் நேரம் நாலு காசு சம்பாதிக்கிறத விட்டுப் புட்டு குரான் ஹதிஸ் எல்லாம் இப்ப பேசிக்கிட்டு ! 
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா  !  

செய்தி;நமது அரண்மனைக்காரன் தெரு நிருபர். 
             
      

0 comments:

Post a Comment