Wednesday, February 9, 2011

நாகூரில் தர்கா வாதிகளுடன் கை கோர்த்த த.த.ஜ.


நாகூரில் தர்கா வாதிகளுடன் கை கோர்த்த த.த.ஜ.அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நாங்கள் மட்டும்தான் மக்கள் அமைப்பு, எதுவாக இருந்தாலும் நாங்கள் மட்டும்தான் போராடாடுவோம், நாங்கள் பிற அமைப்புகளை சேர்க்கவும் மாட்டோம், பிற அமைப்புகளுடன் சேரவும் மாட்டோம் என மொட்டை பெருமை பேசும்  ததஜ. (கூட்டம் சேரப்பதற்காக மட்டும் ஷிர்க்வாதிகள், பித்அத்வாதிகள் என வசைபாடும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களை அழைக்கவும், அவர்களது முஹல்லாகளுக்கு கடிதம் எழுதுவும் செய்வார்கள் என்பது தனி விஷயம்)
சென்ற வருடம் எங்கள் ஊர் அதிராம்பட்டிணம் செக்கடி பள்ளிவாசல் பிரச்னை சார்பாக ஊரே கூடி மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்திய பொழுது, அதில் ஆரம்பத்தில் கலந்து கொண்டு விட்டு, பின்பு கல்தா கொடுத்த ததஜ, தற்பொழுது நாகூரில் நிலக்கரி தூசியினால் மக்கள் படும் அவஸ்தையை கண்டித்து அனைத்து அமைப்பினருடன் களம் இறங்கிய உள்ளதாக அவர்களது வெப்சைட்டில் செய்தி வெளியிட்டுள்ளனர். இது குறித்து பீர் முஹம்மது என்ற சகோதரர் மிக அருமையான விமர்சன கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அவரின் மெயிலை தாங்களுக்கு ஃபார்வோடு செய்கின்றேன்.
எங்கள் ஊரில் இறை இல்லம் விஷயமாக ஒதுங்கிய இவர்களுக்கு, நாகூரில் சுகாதார பிரச்னை சம்பந்தமாக தனது ஒரே எதிரியான தமுமுகவும் பங்கு கொள்ளும்   கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா?
இவர்களின் பச்சையான சந்தர்ப்பவாத்தை தோல் உரிக்க கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
அஹமது ரஃபீக்,
அதிராம்பட்டிணம்.
சகோதரர் பீர் முஹம்மதின் விமர்சனம்:
அட இதப் பாருங்கப்பா...

ஒற்றுமை ஒற்றுமை எல்லாம் ஏகத்துவத்தின் அடிப்படையில் தான் இருக்கணும். வேறு எதன் அடிப்படையில் அமைந்தாலும் அது கூடாதுன்னு வாய்கிழிய வேதாந்தம் பேசிகிட்டு...

இப்ப என்னடான்னு பார்த்தா... நாகூர் தர்ஹா மேனேஜிங் டிரஸ்டி, நாகூர் இஸ்லாமிய பேரவை, தரஹாக்கள் ஒருங்கிணைப்பு பேரவை, நாகூர் முஸ்லிம் சங்கம், நாகூர் கௌதியா சங்கம், இஸ்லாமிய பேரவை... அட அட... என்னண்ணே இதெல்லாம்..

எப்ப இருந்து நாகூர் தர்ஹாவும், கொளதியா சங்கமும் தவ்ஹீது ஆச்சு? ஒரு வேளை புதிய தலைவர் வந்த உடனே தவுஹீதுக்கு புதிய வெளக்கம் கொடுத்துட்டாரோ?

என்ன மக்கள் எல்லாம் கேணயனுங்கனு நெனச்சீங்களா?

(ததஜதான் மெயின் மத்தவங்க சும்மானு சொல்லக்கூடாது. வரிசைல முதல்ல போட்ருக்காங்க. அவ்ளவ் தான். ஏன்னா, ததஜல ஒருவர் தான், தர்ஹா ஒருங்கிணைப்பு பேரவைல ரெண்டு பேர் இருங்காங்கல்ல..அதனால அப்டி எல்லாம் சொல்லகூடாது)

மற்றவர்கள் சமூக பிரச்சனைகளின் அடிப்படையில் ஒற்றுமையா போராடலாம்னு சொன்னா அதை எதுத்து ஆயிரம் வியாக்கியானமும் [கூட்டாஞ்சோறு எல்லாம் ஒத்துவராதும்மா! நாம தனித்துவம் போயிரும்மா!]  அதுக்கு  தப்ஸீர் ஜால்ராக்கு சில அடிபொடிகளும்.. ஆனா, இவங்களுக்கு எல்லாமே வேற...
ஊருக்குதான்டி உபதேசம் உனக்கில்லடி என் கண்ணேன்னு சொல்லது போல இருக்கு...

ஒரு வேளை தேர்தல் கிட்டக்க வரதுனால பெரிய பெட்டிக்கு வேண்டி தவ்ஹீத கொஞ்சம் ஓரமா வச்சு கறக்க வேண்டிய கறக்கவோ?
-பீர் முஹம்மது.



0 comments:

Post a Comment