Friday, February 11, 2011

பயந்து பதுங்கிய பயங்கரவாதி..?


னித உரிமை மீறல்களின் உச்சம் என்று சொல்லக்கூடிய குவாண்டனாமோ சிறைச்சாலை, ஈராக்-ஆப்கான் போராளிகளைக்கொண்டு  பயங்கரவாதி புஷ்ஷால் நிரப்பப்பட்டது. அங்குள்ள கைதிகள் கடுமையாக கொடுமைப்படுத்தப் படுவதாக பல்வேறு காலகட்டங்களில் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. அமெரிக்கக் அதிபராக ஒபாமா பொறுப்பேற்ற பின், விரைவில் குவாண்டனாமோ சிறைச்சாலை மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
இதற்கிடையில், ."குவான்டனாமோ சிறையில் உள்ள, சில கைதிகளை சித்ரவதை செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவிட்டார்' என்று அமெரிக்காவில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், இம்மாதம் 12ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடக்க உள்ள, ஒரு ஆண்டு விழாவில் முக்கியப் பேச்சாளராக புஷ் கலந்து கொள்ள இருந்தார்.சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், அவர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அங்கு புஷ் வரும் போது அவரைக் கைது செய்யும் படி அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனால் தான் கைது செய்யப்படுவோம் என்று அச்சம் கொண்ட புஷ், தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.
 
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிகேற்ப, இந்த பயங்கரவாதி புஷ்ஷின் கையிலும் விளங்கேறும் நாள் வரும். அன்று ஏகாதிபத்தியம் வீழும் என்பது எதிர்கால வரலாறாகும் இறைவன் நாடினால்.
 
-முகவையார்.  

guantanamo-prison.jpgguantanamo-prison.jpg
18K   View   D

0 comments:

Post a Comment