Tuesday, May 17, 2011

ஜனாஸா தொழுகையும், ராமகோபாலனின் ஒப்பாரியும்

னாஸா தொழுகையும், ராமகோபாலனின் ஒப்பாரியும்



சென்னை மெளண்ட் ரோடு மக்கா மஸ்ஜிதில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் உஸாமா பின் லாடினுக்காக காயிப் ஜனாஸா (மறைவான மரணத்தொழுகை) நடத்தப்பட்டது. இந்நிகழ்வை பரப்பரப்பிற்காக காத்திருக்கும் சில பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன.

இச்செய்தி வெளியானதும், ஏற்கனவே சொந்தப்புத்தியை இழந்து மந்தப்புத்தியில் வாழ்க்கையை ஓட்டும் ஹிந்து முன்னணி என்ற பாசிச அமைப்பின் தலைவர் ராமகோபால அய்யருக்கு தேசபக்தி(?) எக்குதப்பாக எகிறவே காரசாரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அய்யரின் அரைவேக்காட்டு அறிக்கையை அக்குவேறு ஆணிவேறாக அலசுவது நமது நோக்கமல்ல. ஆனால், இச்சம்பவத்தை குறித்து வரும் நாட்களில் சில புலனாய்வு(?) பத்திரிகைகள் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிடலாம். முஸ்லிம்களின் தேசப்பக்தியை சோதிக்க இச்சம்பவத்தை பாசிஸ்டுகள் ஒரு அளவுகோலாக மாற்றலாம். ஆகவே இதனை குறித்த உண்மை நிலையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

உஸாமா அல்லது அவரது அல்காயிதா இயக்கத்தினால் இந்தியாவுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை, அல்காயிதாவின் செயல்பாடும் இந்தியாவில் இல்லை என ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதிபட தெரிவித்துவிட்டார். உஸாமா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்புஸ் சின்னமாகவே உலக முழுவதும் கருதப்படுகிறார். ஆகவே உஸாமாவை ஆதரித்து பேசுவதாலோ அல்லது அவருக்காக பிரார்த்தனை புரிவதாலோ இந்தியாவின் இறையாண்மைக்கு எவ்வித இழுக்கும் ஏற்படாது.

ஏகாதிபத்திய சக்திகளுக்கெதிரான போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சேகுவாராவையும், பிடல் காஸ்ட்ரோவையும் ஆதரித்து பேசுவதை எவரும் தேசவிரோத செயலாக கருதுவதில்லை. சேகுவாராவின் படத்தை பொறித்த டீ சர்ட்டுகளை அணிவதையும் எவரும் குற்ற செயலாக கருதுவதில்லை. இந்நிலையில் உஸாமாவை ஆதரித்து பேசுவதும், எழுதுவதும் எவ்வகையில் தவறாகும்? உஸாமாவை குறித்து வெளியாகும் செய்திகளில் பெரும்பாலானவை புனையப்பட்டவையாகும். செய்திகளின் உறைவிடமாக அமெரிக்கா திகழும் பொழுது அதன் உண்மை நிலைக்குறித்து சந்தேகமே மிஞ்சுகிறது!

உஸாமா பின் லாடின் உலகிற்கு அச்சுறுத்தலாக விளங்கினார் என்ற எண்ணமே தவறாகும். அவர் தக்க காரணங்களால் அமெரிக்காவிற்கும் அந்நாட்டின் ஆக்கிரமிப்பு கொள்கைகளுக்கும் மட்டுமே அச்சுறுத்தலாக விளங்கினார். இந்தியா தனது பாரம்பரிய அணிசேராக் கொள்கையை கைகழுகி விட்டு அமெரிக்காவின் ஆதிக்கக் கொள்கைகளுடன் சமரசம் செய்த போதும் உஸாமா இந்தியாவிடம் பகைமை பாராட்டவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் எதிரானக் கொள்கைகளை தத்தெடுத்து உருவாக்கப்பட்ட, ராமகோபால அய்யர் உள்ளிட்ட கயவர்களை உற்பத்தி செய்த ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் துணை அமைப்புகளும் இந்த தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன என்பதை எவராலும் மறுக்கமுடியாது.

ஆகவே உஸாமாவைக் குறித்து பேசுவது இந்தியாவிற்கு எவ்வித பங்கத்தையும் விளைவிக்காது. அதே வேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸைப் பற்றி பேசுவதும், அதன் கொள்கைகளை பரப்புவதும் தான் இந்தியாவிற்கு மிகப்பெரும் இழுக்கை தேடித்தரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!



0 comments:

Post a Comment