Wednesday, May 18, 2011

தமிழக தேர்தல் முடிவு; மண்ணைக் கவ்விய இரண்டு அண்ணன்கள்

மிழக தேர்தல் முடிவு; மண்ணைக் கவ்விய இரண்டு அண்ணன்கள்



ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவின் மூலம் இரண்டு அண்ணன்கள் மண்ணைக் கவ்வியுள்ளனர். அவர்களில் முதலாமவர் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருந்த மு.க. அழகிரி. இவர், ''இந்த தேர்தலுக்கு பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது' என்று ஆணவத்தோடு பேசினார். ஆனால் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் அட்டகாசமாக ஆட்சியில் அமர்ந்துள்ளது அதிமுக. ஆனால் ஐயோ பாவம்! இவரது ஆளுகையின் கீழ் அடங்கிக் கிடந்த மதுரை மாவட்டத்தில் இவரது கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றியை  ஈட்டித்தரமுடியாமல் இவரது கட்சி கானாமல் போனது போல் அஞ்சா நெஞ்சனான[?] இவரும் காணாமல் போய் விட்டார். காரணம் ஆணவத்திற்கு கிடைத்த அடி.
அடுத்து அழகிரிக்கு சற்றும் குறையாமல், இன்னும் சொல்லப்போனால் அழகிரியையும் தாண்டி ஆணவம் பேசினார் அண்ணன் பீ.ஜே., 'தேர்தல் நேரத்தில் எதை மறப்பாரோ மாட்டாரோ மமகவை மண்ணைக் கவ்வ வைப்பேன் என்ற சுலோகத்தை மறக்கமாட்டார் இந்த ஆணவக்காரர். அதிலும் இந்த தேர்தலில், 'திமுகவிற்கு ஏதே போனா போகுதுன்னு ஆதரவு தானே தவிர களமிறங்கி மாநில நிர்வாகிகள் பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்று கூறியவர், வடிவேலுவையும் மிஞ்சி அந்தர் பல்டியடித்து கலைஞரின் கொள்ளை[கொள்கை] பரப்பு செயலாளராக மேடையில் மைக்கை பி[க]டித்தார். மறக்காமல் ஒவ்வொரு மேடையிலும் 'மமகவை ஏன் ஆதரிக்க கூடாது? என்ற தலைப்பை வைத்து தனது வஞ்சத்தை எல்லாம் வாந்தியெடுத்து முஸ்லிம்களே! மமகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூவினார். ஆனால்  இவரின் ஆணவத்திற்கு அல்லாஹ் தந்த மரண அடி மமக இரண்டு இடங்களில் மகத்தான வெற்றி பெற்று சட்டமன்றத்தில் தடம் பதிக்கிறது.
மமகவின் வெற்றி மமதையாளரை மயக்கமுற செய்து விட்டது போலும். தேர்தல் தோல்வி குறித்து பேசிய இவர் வாய்க்கு வந்தபடி உளறுகிறார் பாவம். தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டார். எனவே கருணாநிதிக்கு வாக்களியுங்கள் என்று வாய்கிழிய கத்தியவர் இன்று 'யார் ஆட்சிக்கு வந்தாலும் நாம் தெருவில் நின்று கத்திதான் நம் தேவைகளை பெறமுடியும்' என்கிறார். அப்படியானால் தெருவில் நின்று போராடி பெறவேண்டியது தானே? பிறகு எதற்கு தேர்தல் ஆதரவு? எதற்கு பிரசாரம்? முஸ்லிமை தோற்கடித்தேனும் கருணாநிதியின் காலடியில் வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஊர் ஊராக கத்தியது ஏன்? அண்ணன் விளக்குவாரா?
இந்த நேரத்தில் இன்னொன்றும் சொல்லவேண்டியுள்ளது. ததஜ யாரை ஆதரிக்கிறதோ அவர்களுக்குத்தான் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்கு சிந்தாமல் சிதறாமல் விழும் என்று கீறல் விழுந்த ரிக்கார்டாய் புலம்பிய அண்ணன், இவர் சுட்டு விரல் காட்டிய திமுக அணிக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வாக்களித்தார்கள் என்று புள்ளி விபரத்தோடு நிரூபிக்கத் தயாரா? ஒட்டு மொத்தம் கூட வேண்டாம் ஒரு 75  சதவிகித முஸ்லிம்கள் வாக்களித்தார்கள் என்று காட்டத் தயாரா? அட! தீவுத்திடலில் குழுமிய 15  லட்சம்[?] முஸ்லிம்களாவது திமுக அணிக்கு வாக்களித்தார்கள் என்று நிரூபிக்கத் தயாரா?
இனியாவது ஆணவம் தொலைத்து அல்லாஹ்வுக்கு அஞ்சி, நல்லடியாராக மாற அண்ணன் முயற்சிக்கட்டும். அதை விடுத்து தனது சிஷ்ய கோடிகளை ஏவி விட்டு கள்ள பிளாக்கில் கண்டபடி அர்ச்சிக்க  செய்வாரானால், அவரிடம் 
அரைகுறையாக மிஞ்சி இருக்கும்  நன்மைகளையும்  இழந்து நிற்பார் என்று அன்புடன் கூறிக் கொள்கிறோம்.
-அப்துல் முஹைமீன்.

0 comments:

Post a Comment