Wednesday, June 30, 2010

மறுமையை நம்பாத கலைஞரும் ! பெருமையடிக்கும் பீ.ஜே.அன் கோவும்



கலைஞர் செம்மொழி மாநாட்டின் இறுதி உரையின் போது குறிப்பிட்ட ஒரு விஷயம் நம்மை கவர்ந்தது. ஏனெனில் ஏகத்துவம் பேசும் அண்ணனிடம் இல்லாத பண்பு, கடவுள் இல்லை எனும் கலைஞரிடம் கண்டபோது, கலைஞரை விட இயக்க வெறி பிடித்து, ஏகத்துவ நெறி மறந்த இவர்களின் சமுதாய ஒற்றுமை அழைப்பு உண்மையிலேயே சந்தர்ப்பவாத அழைப்பு என்பதும், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளத்தான் தவ்ஹீத் முகமூடி என்பதும் புரிந்தது.
“செம்மொழி மாநாட்டின் போது திமுக கொடிகளை எங்கும் நான் காணக் கூடாது! ஏனெனில் இது ஒட்டு மொத்த தமிழினத்தின் நிகழ்ச்சி, இதில் கழகத்தின் இரு வண்ணக் கொடியை முன்னிறுத்தி, செம்மொழி மாநாட்டுக்கு வேறு வண்ணம் பூசி விடக் கூடாது! என நான் விடுத்தத கோரிக்கையை ஏற்று திமுக கொடிகளை தவிர்த்தமைக்கு கழக உடன் பிறப்புகளுக்கு நன்றி !” கலைஞர் உரையின் சாராம்சம் இதுதான்!
ஆனால் ஒட்டு மொத்த சமுதாயத்திற்குமான உரிமை மீட்பு போராட்டத்தில் கருத்து வேறுபாடை மறந்து களமிறங்க வேண்டும் ! என இவர்கள் விடுத்த அழைப்பை கேட்டு “நாங்கள் எங்கள் கொடியோடு வரலாமா? எனக்கேட்ட வேலூர் மாவட்ட சகோதரர் ஒருவரிடம், கண்டிப்பாக வரக் கூடாது.” என உங்கள் பொதுச் செயலாளரே கூறியுள்ளார்.அப்படியானால் எல்லோரும் வர வேண்டும் என அழைப்பு விடுக்கும் நீங்கள். கோரிக்கையை வெல்வதற்காக உங்கள் கொடியையும் தவிர்க்களாமே! மறுமையை நம்பாத கலைஞருக்கு இருக்கும் மனப்பான்மை, உங்களுக்கு ஏன் இல்லை? சிந்தியுங்கள் மற்றவர்கள் ஏன் தங்கள் கொடிகளோடு வரக்கூடாது ? உங்கள் கொடியின் கீழ் ஒட்டுமொத்த சமுதாயமும் ஏன் வரவேண்டும் என்பதற்கு உருப்படியான ஒரு காரணம் கூற முடியுமா ? கோரிக்கையை முன் வைத்து கூடும் கூட்டத்தை உங்கள் கூட்டமாக காட்டி தேர்தல் வரும் நேரத்தில் பேசுகின்ற பேரத்தை தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்.

0 comments:

Post a Comment