Saturday, June 5, 2010

புரோகிதர் பீ.ஜே. கடைந்தெடுத்த பொய்யர்,

அறைகூவல் மன்னன் பீ.ஜே.க்கு!
அளவில்லா அருளாளன், இணையில்லா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்….அறைகூவல் மன்னன் பீ.ஜே.க்கு!அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)பாக்கருக்கு பீ.ஜே.யின் பகிரங்க அறைகூவல்!கைத்தடிகள் மூலம் வசை பாடாமல் பாக்கர் நேரடியாகப் பதில் தருவாரா?டாக்கர் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவதூறு என்றும், அவர்மீது கூறப்படும் பொருளாதாரக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவருடன் (பாக்கருடன்) சேர்ந்து கொண்ட முன்னாள் நிர்வாகிகள் பிரசுரம் வெளியிட்டுள்ளனரே இது சரியா? என்று பல சகோதரர்கள் கேட்கின்றனர். பாக்கரின் கைத்தடிகள் பெயரில் வெளியான பிரசுரத்தில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதாகவும் எடுத்துக்காட்டுகின்றனர்.…………………………………………………………………………………………………………………………………………………………………………………….……………………………………………………..(முழு விபரங்களுக்கு உணர்வு ஜனவரி 23/29,2009 இதழ் பக்கம் 13ஐ பார்க்கவும்)………………..……………………………………………………………………………………………………………………………………………………………………………………..மோசடி செய்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காதவரை அவரை ஆதரித்து மோசடியை மறைக்கத் துணை செய்பவர்கள் மறுமையைப் பயந்து தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கொள்கைச் சகோதரர்கள் இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். எந்த ஊருக்கு அவர் வந்தாலும் இந்த இரண்டு அறைகூவலுக்கும் பதில் கேட்டு வற்புறுத்த வேண்டும். தேவைப்பட்டால் பிரசுரமாகவும் இதை வெளியிடலாம். என் பெயரிலேயே இதை வெளியிட்டாலும் கிளை பெயரில் வெளியிட்டாலும் எனக்கு மறுப்பு இல்லை. அன்புடன், பீ.ஜைனுல் ஆபிதீன் (உணர்வு வார இதழ் உரிமை 13 குரல் 21 ஜனவரி 23-29,2009, பக்கம் 13)இது ததஜ புரோகிதர் பீ.ஜே.யின் அறைகூவல்! இது அவரது கடந்த 22 வருட வாழ்க்கையில் எத்தனையாவது அறை கூவல் எனக் கணக்கிட்டுக் கூற முடியாது. ததஜ புரோகிதரின் முதல் அறை கூவல் 29.7.1987-ல் நூருல் அமீன் மற்றும் இளைஞர் இயக்கத்தினருக்கு எழுதிய கடிதத்தில் பல அப்பட்டமான அவதூறுகளை எழுதிவிட்டு, கடித இறுதியில், “நான் எழுதியுள்ள மேற்கூறிய விபரங்களை நிரூபணம் செய்ய நான் தயார். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தயார்” என்று உறுதி அளித்திருந்தார். அடுத்து 26.12.1987-ல் ததஜ புரோகிதர் வெளியிட்ட பிரசுரத்தில்“அடுத்து நான் (ஒன்றுபட்டிருந்த ஜமாஅத்தை விட்டும்) வெளியேறியதற்கும் தவறான காரணம் கற்பித்துள்ளனர். அல்லாஹ்வின் மீது ஆணையாக “ஸலபி” (என்ற பிரிவு) பிரச்சனை காரணமே இல்லை. பல நண்பர்கள் ஒருவரை நிர்வாகியாக ஏற்படுத்தித் தொடங்கிய பத்திரிக்கைக்கு தன்னை உரிமையாளர் என சட்டப்படி பதிவு செய்து கொண்டதும் அதை நாம் தட்டிக் கேட்டும், மற்ற முன் வராததுமே காரணமாகும்.”“தன்மீது குற்றங்கள் நீரூபிக்கப்படுமானால் எந்தத் தண்டனைக்கும் தயார் என்று அவர்(அபூ அப்தில்லாஹ்) பகிரங்கமாகவே கூறிவிட்டதால் நான் (பீ.ஜே) அதை பகிரங்கமாகவே ஏற்றுக் கொள்கிறேன். ஆரம்பத்திலிருந்து எல்லாப் பிரச்சினையையும் பகிரங்கமாகவே அலசுவோம். அதற்கு நான் தயார்”. பீ.ஜைனுல் ஆபிதீன்அடுத்து புரட்சி மின்னல் பிப்ரவரி ஹ988 பக்கம் 120-ல் எப்படி அந்தர் பல்ட்டி அடித்துள்ளார் என்று பாருங்கள்!சென்ற இதழுடன் இணைத்திருந்த துண்டுப் பிரசுரம் கண்டிருப்பீர்கள். நான் அதில் குறிப்பிட்டிருந்த பிரகாரம் பல்வேறு உண்மைகளை பகிரங்கப்படுத்திடவே விரும்பினேன். நான் மிகவும் மதிக்கின்ற பெரியவர்களின் கோரிக்கைகள் என் கைகளைக் கட்டிவிட்டன……………….“பல தரப்பினரும் எதையும் எழுத வேண்டாம் என்றே என்னை வற்புறுத்தினார்கள்……………………………………………………………………….………………………………….. ஆனால் ஏற்கனவே எழுதியிருந்த அவ்வாசகத்தை மட்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கிறேன்.” “அடுத்தவருக்குச் சொந்தமானதை தன்னுடையதாக்கிக் கொண்டதும் அமானித மோசடியும்தான் பிளவு ஏற்பட முக்கிய காரணம். இதை எங்கேயும் நான் நிரூபிக்க முடியுமு் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். பீ.ஜைனல் ஆபிதீன்நீருபிக்கத் தயார். நிரூபிக்கத் தயார் என வாய்ச் சவடால் விட்டாரே அன்றி 22 வருடங்கள் ஆகியும் நாம் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தும், இன்று வரை வாக்களித்தபடி தனது அவதூறுகளை நிரூபிக்க முன் வரவேயில்லை ததஜ புரோகிதர். ஆம்! ததஜ புரோகிதர் பீ.ஜே. கடைந்தெடுத்த பொய்யர், அயோக்கியர், அல்லாஹ்மீதே ஆணையிட்டு அவதூறுகளைப் பரப்பும், அல்லாஹ்வையும், மறுமையையும் அஞ்சாத துன்மார்க்கர் என்பதை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்.நான் மிகவும் மதிக்கின்ற பெரியவர்களின் கோரிக்கைகள் என் கைகளைக் கட்டிவிட்டன. பல தரப்பினரும் எதையும் எழுத வேண்டாம் என்றே என்னை வற்பறுத்தினார்கள். அதனால் 26.12.1987 துண்டுப் பிரசுரத்தில் வாக்களித்தபடி அவற்றை பகிரங்கப்படுத்தவில்லை என்று பிப்ரவரி 1988 புரட்சி மின்னலில் எழுதினாரே அல்லாமல், கடந்த 22 வருடங்களாக அவதூறுகளை நிரூபிக்க முன்வராமல் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடிக்கொண்டிருப்பதோடு அவரும், அவரது கைத்தடிகளும், பக்தர்களும் அந்த அப்பட்டமான அவதூறுகளை உலகம் முழுவதும் இன்று வரை பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அல்குர்ஆன் அன்னிஸா 4:112, அல்அஹ்ஸாப் 33:58, அல்ஹுஜ்ரத் 49:12 போன்ற இறைக் கட்டளைகளை நிராகரித்துப் புறக்கணிக்கும் பெரும் பாவிகளாகவே ததஜ புரோகிதரும், அவரது கைத்தடிகளும் பக்தர்களும் இருக்கிறார்கள்.இப்படிப்பட்ட அப்பட்டமான அவதூறுகளை நம்மீது மட்டும் சுமத்தவில்லை. கடந்த 22 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 100ஐத் தாண்டும். ததஜ புரோகிதரின் வல்லம் மாநாட்டில் தடம் புரண்டவர்கள் என்று 65 பேர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது அனைவருக்கும் தெரியும். இப்போது பாக்கர் பிரிந்து இதஜ அமைத்த பின்னர் அந்த எண்ணிக்கை ததஜ புரோகிதரின் அகராதிப்படி 100ஐத் தாண்டும் என்பதில் சந்தேகம் உண்டா?இந்த 100 பேரும் யார் தெரியுமா? பீ.ஜே.யின் அறிமுகத்திற்கும், பிரபல்யத்திற்கும் தனி மனித வழிபாட்டிற்கும், அவரை தக்லீத் செய்யும் ஒரு கூட்டத்தை உருவாக்குவதற்கும் தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து உழைத்தவர்கள். ஆம்! ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் நன்றி கெட்டவன் என்பார்களே. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் பெரும் துரோகி என்பார்களே அப்படிப்பட்டதொரு கொடூர நெஞ்சம் படைத்த பெரும் பாவி ததஜ புரோகிதர் பீ.ஜே. நூற்றுக்கணக்கானோரைப் பற்றி நூற்றுக்கணக்கான அவதூறுகளை உலகம் முழுவதும் பரப்பி இருக்கிறாரே அவதூறு மன்னன் பீ.ஜே. நிரூபிக்கத் தயார், நீரூபிக்கத் தயார் என சவால் விட்டிருக்கிறாரே! அவர்களில் ஒரே ஒருவரைப் பற்றிய ஒரேயொரு அவதூறையாவது(மார்க்க விஷயமல்ல) உண்மை என்று நிரூபித்துள்ளாரா பீ.ஜே.? இல்லையே! உண்மைக் குற்றச்சாட்டாக இருந்தால் அல்லவா நிரூபிக்க முடியும். அவதூறுகளை நிரூபிக்க முடியுமா? முடியாதே!ஒவ்வொருவர்மீதும் பெண்கள் சம்பந்தமாகவும், பொருளாதாரம் சம்பந்தமாகவும் அப்பட்டமான அவதூறுகளை அவை அவதூறுகள்தான் என்று தன் கைத்தடிகளிடம் சொல்லிக் கொண்டே பரப்புவார். கைத்தடிகளைக் கொண்டும், பக்தர்களைக் கொண்டும் பரப்பச் செய்வார். விவாதத்திற்கு வா, விவாதத்திற்கு வா என விவாத மன்னன் பீ.ஜே.சவால் பிடுவார். குற்றச்சாட்டுக்களை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டுமேயல்லாது, அங்கு விவாதத்திற்கு இடமே இல்லை என்ற அடிப்படை அற்ப அறிவும் ததஜ புரோகிதருக்கு இல்லை என்பதுதான் வேதனை. சம்பந்தப்பட்டவர்கள் துணிந்து “வா! வந்து நிரூபி!” என அழைத்தால் பிடரியில் பின்னங்கால் அடிபட ஓடுவார். கடந்த 22 ஆண்டுகளாக இக்கூத்தாடியின் கூத்தை, அறிவை அவரிடம் அடகு வைக்காமல் சுயமாகச் சிந்திக்கும் மக்கள் அனைவரும் பார்த்துத்தான் வருகிறார்கள்.எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். அனைத்துக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ஒரே ஜமாஅத் எங்கள் ததஜ ஜமாஅத்துதான் என அகம்பாவத்துடன் பீற்றுவார் ததஜ புரோகிதர். ஆனால் நாம் கேட்டுள்ள மார்க்கச் சம்பந்தப்பட்ட எண்ணற்றக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல் வாய்க்கூசாமல் பொய் பேசித்திரிகிறார் என்றால் அவரது நாணயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். தான் ஒரு ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த அண்டப்புளுகன், ஆகாசப் பொய்யன் என்ற உண்மை அம்பலத்திற்கு வந்து விடுமே என்ற அச்சத்திலேயே அந்நஜாத் வெளி வருவதில்லை, நின்றுவிட்டது என்ற அப்பட்டமான பொய்கூறி தனது பக்தர்களை அந்நஜாத்தைப் படிக்க விடாமல் ஏமாற்றி வருகிறார் பக்தர்களில் யாருக்கும் அந்நஜாத் பற்றி தெரிய வந்த படிக்க ஆரம்பித்தால் அவர்களை படிக்க விடாமல் தடுக்கிறார். அவரது பக்தர்களும் அவரது கூற்றை இறைவாக்காக(?) ஏற்று அந்நஜாத்தை தொடுவது கூட பாவம் என்று எண்ணிப் பயப்படுகிறார்கள். 1993 மே அந்நஜாத் இதழிலேயே பீ.ஜே.யின் அவதூறுகள் அனைத்தும் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு அவர் மகா பொய்யர், அயோக்கியர் என்பதை நிலைநாட்டி பீ.ஜே. அடையாளம் காட்டப்பட்டுள்ளார். அவரது முகத்திரை 1993லேயே கிழித்தெறியப்பட்டுவிட்டது. 1993 மே அந்நஜாத் இதழை முழுமையாகப் படிக்காதவர்களே பீ.ஜேயின் வசீகர வலையில் இன்று வரை சிக்கிச் சீரழிகிறார்கள். பாவப்பட்டவர்கள், பரிதாபத்துக்குரியவர்கள், பெரும் நஷ்டத்துக்குரியவர்கள். (அந்நஜாத் பிரதிகள் ஆரம்பம் முதல் கிடைக்கும்)பீ.ஜே.யின் பேச்சுச் சூன்யத்தில் மயங்கிக் கிடந்த பக்தர்களில் அல்லாஹ் அருள் புரிந்த சில சகோதரர்கள், அவர் ஆக், ஜாக், தமுமுக, ஐதஜ, ததஜ போன்ற புதிய புதிய அமைப்புகளுக்கு, குரங்கு மரத்திற்கு மரம் தாவுவது போல் தாவுவதையும், பச்சோந்தி போல் நிறம் மாறிக் கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியுற்று, சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்ததின் விளைவாக, ததஜ வழிகெட்ட பிரிவை விட்டும் தெளபா செய்து மீண்டு வருகின்றனர். பீ.ஜே.யின் கைத்தடிகளும், பக்தர்களும் சுய சிந்தனைக்குத் திரும்பியவர்களை வலிய வம்புக்கிழுத்து, அண்ணன் பீ.ஜே.யுடன் ததஜ பற்றி விவாதம் செய்ய அபூ அப்தில்லாஹ்வை அழைத்து வர முடியுமா? என அறைகூவல் விடுகின்றனர்; வற்புறுத்துகின்றனர். பீ.ஜே. விவாதப் புலி என்பது அவர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கை.ததஜவை விட்டு விடுபட்டவர்கள் எம்மை அணுகி பீ.ஜே.யுடன் விவாதம் செய்யும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு நீங்கள் தயாரா என் கேட்கின்றனர். நாம் ஒப்புக் கொள்கிறோம். ததஜவினர் விவாதத்தில் நழுவிச் செல்லும் கெட்ட நோக்கத்துடன் நேரடியாகக் கடிதம் எழுதாமல், ததஜ கிளையினருக்கே, நம் ததஜமாஅத் விவாதிக்கத் தயார் என்று பீ.ஜே. நழுவும் விதமாகக் கடிதம் எழுதுவது போல், அல்லது பீ.ஜே. தனது கைத்தடிகளைக் கொண்டு எழுதச் செய்வது போல், நாம் நழுவிச் செல்லும் நோக்கமில்லாமல் பீ.ஜே.க்கும் ததஜ தலைவர், செயலர், பொருளாளருக்கும் நேரடியாக நாமே தயார் என்று கடிதம் எழுதிக்கொடுக்கிறோம். அதை ஏற்கும் பக்குவமோ, தைரியமோ, நாணயமோ அவரிடம் இல்லை. நேரடி விவாதத்தை தவிர்க்க, நழுவிச் செல்ல என்ன என்ன தந்திரங்கள் உண்டோ அவற்றை எல்லாம் கைத்தடிகளைக் கொண்டு எழுதச் செய்து பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடுகிறார் பீ.ஜே.பீ.ஜே. தான் விவாதப்புலி அல்ல; காகிதப் புலி என்பதை நிரூபிக்கிறார். அவரது கைத்தடிகளும், பக்தர்களும் பீ.ஜே. விவாதப்புலி அல்ல; காகிதப்புலி மட்டுமே என்பதை உணர முடியவில்லையா? உணரும் காலம் வெகுவிரைவில் வரும். இன்ஷா அல்லாஹ்.விடுகிவாய்ச் சவடால் பேர்வழி ததஜ புரோகிதர் பீ.ஜே.க்கு இப்போது மீண்டும் பகிரங்கமாக நாம் அறை கூவல் ததஜ புரோகிதர் 26.12.87 துண்டுப்பிரசுரத்திலும், 1988 பிப்ரவரி புரட்சி மின்னல் மாத இதழ் பக்கம் 120லும் முதன்முதலில் சவால் விட்டு கடந்த 22 ஆண்டுகளாக பீ.ஜே.யும், அவரது கைத்தடிகளும், பக்தகோடிகளும் உலகெங்கும் பரப்பித் திரியும். “அடுத்தவருக்குச் சொந்தமானதை தன்னுடையதாக்கிக் கொண்டதும், அமானித மோசடியும்தான் பிளவு ஏற்பட முக்கிய காரணம். “ஸலபி என்ற பிரிவுக் கொள்கை” காரணமில்லை; இதை எங்கேயும் நான் நிரூபிக்க முடியும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்” என்று வாக்களித்தபடி வந்து நிரூபிப்பது ததஜ புரோகிதரின் கட்டாயக் கடமையாகும். அதன் பின்னரே மற்றவை; பின்னர் ஏற்பட்ட விவகாரங்களை எல்லாம் இத்துடன் இழுத்து பக்தர்களை தடுமாற்றத்தில் விட முற்படக்கூடாது. இது பீ.ஜே.க்கு கைவந்த கலை என்பதை நாம் மட்டுமல்ல பலரும் அறிவார்கள்.ததஜ புரோகிதர் பீ.ஜே. முன்வந்து, தான் 1987, 88களில் வாக்களித்தபடி அவரது அவதூறுகளை நிரூபிக்கத் தவறினால் அவர் அண்டப் புளூகர், ஆகாசப் பொய்யர், அல்லாஹ்மீது ஆணையிட்டு அப்பட்டமான அவதூறுகளை வாரி இறைக்கும் அயோக்கியர், அல்குர்ஆன் 7:175,176 கூறுவதுபோல் அவரை விட ஒரு கேடுகெட்ட ஜன்மம் இந்த வானத்தின் கீழ் இல்லை என்றெல்லாம் நாம் கூறி வருவதை அவரும் ஒப்புக் கொண்டு விட்டார் என்றே சுய சிந்தனையுள்ள மக்கள் முடிவுக்கு வருவார்கள். ததஜ புரோகிதர் உண்மையாளர் என்றால் 1987,88களில் கூறிய அவதூறுகளை முன்வந்து நிரூபித்துக் காட்டட்டும் பார்ப்போம். அல்லது பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கட்டும். “மோசடியை மறைக்கத் துணை செய்பவர்கள் மறுமையைப் பயந்து தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றும், ஏகத்துவம் பிப்ரவரி 2009 இதழில் இடம் பெற்றுள்ள பாக்கர் பற்றி அனைத்து உபதேசங்களும் பீ.ஜேக்கும் முதலில் மிகமிகப் பொருந்தும் நிலையிலும், அல்குர்ஆன் பகரா 2:44 கூறுவது போல் தன்னை மறந்து பிறருக்கு உபதேசம் செய்வதை விட்டு, ததஜ புரோகிதர் மறுமையைப் பயந்து, பொய்களையும், அவதூறுகளையும் பரப்பும் இழிசெயலை – கேடுகெட்ட செயலையும் மற்றும் அனைத்து கேடுகெட்ட இழி குணங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவே அவருக்கு மறுமையில் வெற்றியைத் தரும். பீ.ஜே. க்கு அல்லாஹ் மீதும் மறுமையின் மீதும் உறுதியான நம்பிக்கை இருந்தால் இதைத் தவிர வேறு வழி அவருக்கு இல்லை என்பதை அவர் உணர வேண்டுமே! ததஜ நிறவனர் பீ.ஜே. அவரது தவறை உணர்ந்து பாவமன்னிப்புக் கேட்டு மீள முன்வராவிட்டால், அவர் “தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்(ததஜ)” என்ற இயக்கத்தை உரமிட்டு, நீர்ப்பாய்ச்சிக் செழிப்பாக வளர்த்து வருகிறார் என்றே அல்லாஹ்வையும், மறுமையையும் அஞ்சி நடப்பவர்கள் முடிவுக்கு வரநேரிடும். வஸ்ஸலாம்.இடம் : திருச்சி – 620 008. தேதி : 18.02.2009இவண் உண்மையுடன்அபூ அப்தில்லாஹ், அந்நஜாத் ஆசிரியர்.5 1/1, ஜாஃபர்ஷா திருச்சி-8.

0 comments:

Post a Comment