Thursday, June 24, 2010

கேட்கிறவன் கேனப்பயலா இருந்தால்....

15,000 பேரை தாங்காத தீவுத்திடலில் 15 லட்சம் பேரை கூட்டுவோம் என்பது சாத்தியமா? சவடலா ? என நாம் வைத்த கருத்து வாக்கெடுப்பிலிருந்து நமக்கு ஓர் உண்மை தெரிகிறது. நமது இணையத்தளத்தை டிஎன்டிஜே சகோதரர்கள் தான் நிறைய பார்க்கின்றார்கள் என்பது.
சாத்தியம் என்ற உங்கள் கருத்து உண்மையெனில் நாம் சவால் விடுகின்றோம் ! 50,000 சேர்களை தீவுத்திடலில் போட்டு அதில் மக்களை நிரப்பி காட்டட்டும் 10 லட்சம் வேண்டாம் 5 லட்சம் வேண்டாம். 50000 பேரை சேர்போட்டு அதில் உட்கார வைக்கட்டும் இல்லையென்றால் மார்க்கத்திற்கு மக்களை அழைப்பதற்காக கூட பொய் சொல்லக் கூடாது என்ற நிலைப்பாட்டை மறந்து, 15 லட்சம் பேர் என்று பொய் சொல்லி இம்மையில் பெறும் இட ஒதுக்கிட்டிற்காக மக்களை அழைப்பது தவறு என்பதை மக்களிடம் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளுங்கள். செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்திலேயே 60,000 பேர்தான் அமர முடியும் என்றால் தீவுத்திடலில் 15 லட்சம் பேர் என்பது “கேட்கிறவன் கேனப் பயலாயிருந்தால்.....” என்ற பழ மொழிதான் நினைவுக்கு வருகிறது.

0 comments:

Post a Comment