Monday, June 21, 2010

மூன்று சம்பவங்களுக்கு மூடர்களின் ஒப்புதல் : மருத்துவமனை விவகாரம் !

அஸ்ஸலாமு அலைக்கும் !
இலங்கை முஸ்லீம் பெண் தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற விவகாரத்தில், சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு வந்த தக்லீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரியை சந்திப்பதை விடுத்து, மருத்துவருக்கு ஆதரவாக நடந்ததை குறிப்பிட்டு நாம் கூறியதற்கு, பதில் கூறிய மூடர்கள், நாம் கட்ட பஞ்சாயத்து செய்து, டாக்டரை மிரட்டியதாகவும், உடனே அவர்கள் “பிஜே மனைவிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் தங்களை தவறாக நினைத்துவிடக்கூடாது” என்பதற்காக வந்தார்களாம். இவர்கள் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்தால் உண்மையை அறிய சம்மந்தப்பட்ட பெண்ணின் உறவினர்களை சந்தித்து விசாரித்தார்களா? மேலும் அந்தப்பெண் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டு இருந்தால் நஷ்டஈடு வாங்கிக் கொடுத்தார்களா? என முட்டாள்தனமாக கேட்பதிலிருந்தே இவர்கள் காழ்ப்புணர்வை மட்டும் வைத்துதான் எதையும் பார்க்கிறார்கள். எதையும் ஆராய்ந்து பேசுவதில்லை (குர்ஆன், ஹதீஸ் உள்பட) என்பது தெரிகின்றது. நாங்கள் வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு எவ்வளவு என குறித்து கொள்ளுங்கள் தேவையென்றால் சம்மந்தப்பட்டவர்களிட்ம் விசாரித்து கொள்ளுங்கள்!
தன் மருத்துவமனையில் கட்டிய தொகையை
நோயாளிக்கு மருத்துவமனை திரும்ப கொடுத்தது 75,000
6 மாத காலம் பில்ராத் ஹாஸ்பிடல் பில் 18,00,000
நஷ்ட ஈட்டு தொகை ரொக்கம் 8,00,000
மொத்த தொகை 26,75,000
தவறு எதுவும் செய்யாமல் மொத்தம் 26 லட்சத்தி எழுபத்திஐந்தாயிரத்தை திரும்ப கொடுக்க முதல்வரின் சிறப்பு மருத்துவர் என்ன முட்டாளா ? பைத்தியக்காரரா ? இனியாவது எதையும் தீரவிசாரித்து முடிவெடுங்கள் இல்லையென்றால் தீர்ப்பு நாளில் உங்களோடு உங்களை நம்பி நீங்கள் சொன்ன பொய்யை பரப்பும் தக்லீது ஜமாத்தினரும் தண்டனைக்குறியவர்கள் ஆக நேரிடும்.

0 comments:

Post a Comment