Thursday, July 29, 2010

பீஜே அவர்களின் தொழுகை

அன்பிற்கினிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரர் பீஜே அவர்கள் தொழுவது இல்லை என்பதைப் பற்றி நாம் மண்ணடி பொதுக் கூட்டத்தில் பேசியதை சில சகோதரர்கள் விமர்சித்துள்ளார்கள். அவர்களின் விமர்சனத்திற்கான விளக்கங்களை கீழே தந்துள்ளோம்.

முதலாவதாக,

பீஜே அவர்களின் தொழுகை பற்றி நாம் முதன் முதலாக விமர்சிக்கவில்லை! அபு அப்துல்லா தொடங்கி பாக்கர் வரை அவரோடு நெருங்கிப் பழகிய, அவரோடு பல பயணங்களில் பங்கேற்ற அனைத்து சகோதரர்களுக்கும் இது தெரியும். ஒரு முஃமின் தொழுகைக்கான நேரத்தை, வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும். ஆனால் சகோதரர் பீஜே வாய்ப்பு கிடைத்தால், தொழுவாரே தவிர வலிந்து தொழ மாட்டார் என்பதும் மக்கள் நிறைந்திருக்கும் சபைகளில் வேறு வழியின்றி தொழுவாரேயன்றி விரும்பித் தொழ மாட்டார் என்பதையும் பிரயாணங்களில் பெரும்பாலும் தொழமாட்டார் என்பதையும் அவருடன் பல நேரங்களில் பயணித்த ஒளிப் பதிவுக் குழுவினரான யூசுப் கான், யாஸிர், ரஃபிக் போன்றோர் கூறுகின்றனர்.

மற்றவர்கள் சொல்வதை வைத்து மட்டும் நாம் கூறவில்லை!



கடந்த 2008-2009ல் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்தில் ஷரீயத் பஞ்சாயத்து பிரிவில் பணியாற்றியதால் பெரும்பாலான நேரங்களை தலைமையகத்தில் தான் கழிப்பேன். காலையில் என் மனை வியை களஞ்சியம் மதரஸôவிற்கு ஆலிமா கோர்ஸ் படிப்பதற்காக அழைத்து வரும் நான், மாலை திரும்ப அழைத்துச் செல்லும் வரையிலும், பின்னர் மஃரீபுக்கு பிறகு ஷரீயத் அமர்வு என பெரும்பாலான நேரம் தலைமையகத்தில் தான் இருப்பேன். இந்த ஓராண்டு காலமும் பீஜே அவர்களை ஒருமுறை கூட தலைமையகத்தில் தொழுது நான் பார்த்ததில்லை.



மற்ற பள்ளிகளில் தொழுவது கூடாது என்பவர், மற்ற இமாம்களை பின்பற்றித் தொழக் கூடாது என்பவர், மண்ணடியில் வேறு எந்த தௌகீத் பள்ளியும் இல்லாத நிலையில் எங்கே தொழுகிறார் என்பது எனக்குள் மிகப் பெரிய கேள்வியாக இருந்து வந்தது. இவ்வளவுக்கும் கூப்பிடு தூரத்தில்தான் அவருடைய எடிட்டிங் அலுவலகம் உள்ளது. காலையில் 10 மணியளவிற்கு அங்கே வரும் அவர் இரவு தான் வீடு திரும்புவார்

.> இவ்வளவு அருகில் இருந்தும் ஏன் தலைமையகத்திற்கு தொழ வருவதில்லை என்ற கேள்விக்கு விடை தேடிய போது அவரின் தொழுகை நிலை புரிந்தது. மாநில நிர்வாகிகளிடம் கேட்டபோது, பதில் மழுப்பலாகவே இருந்தது. ""அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ளது'' என்று சப்பைக் கட்டு கட்டினார்களே தவிர, அவர் எங்களோடு தொழுகின்றார் என சாட்சி சொல்ல முன்னாள் மாநில நிர்வாகிகளும சரி, இன்றைய மாநில நிர்வாகிகளும் சரி. உள்பட யாரும் சொல்லத் தயாரில்லை என்பதில் இருந்தே உண்மை நிலையை புரிந்து கொள்ளலாம்.



""அவர் தனித்து தொழுதிருக்கக் கூடும்'' என்ற கேள்வி எழலாம். அப் படி தனித்துத் தொழுவதையும் யாரும் பார்த்ததாகத் தெரிய வில்லை. பலர் முன்னிலையிலேயே பஜ்ருக்கு எழுப்பியும் தொழாதவர், தொழுகையில் பொடுபோக்கு உடையவர் தனியாக தொழுவார் என்ற வாதமும் அடிபட்டுப் போகிறது.

அப்படியே தனித்துத் தொழுகின் றார் என்பதை வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் மார்க்க அடிப்படையில் அது மாபெரும் தவறு என்பதையும், நய வஞ்சகத் தனத்தின் அடையாளம் என்பதையும் முஸ்லிம் 651, 654 ஹதீஸ்கள் மூலமாக அறிகின்றோம்.



கண் தெரியாத சஹாபிக்குக் கூட தனியே தொழ அனுமதி இல்லை! பாங்கு சத்தம் கேட்டால் பள்ளி சென்று தொழுவது கடமை என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையை முஸ்லிம் 653ன் மூலமாக அறிகின்றோம். மேலும் அயராத எழுத்துப் பணி, வந்தால் சுற்றி நின்று கேள்வி கேட்கின்றார்கள், பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளால் பள்ளிக்கு வருவதில்லை என்ற வாதமும் சரியானதல்ல.



அண்ணனை விட அதிகம் ஆட்சிப் பணி, குடும்பப் பணி, மார்க்கப் பணி கொண்ட அண்ணனிடம் கேள்வி கேட்பதை விட அதிகமதிகம் கேள்வி கேட்கும் தோழர்களைக் கொண்ட, அண்ணனுக்கு உள்ள அச்சுறுத்தலை விட அதிகமதிகம் எதிரிகளின் அச்சுறுத்தலை உடைய அண்ணல் நபி (ஸல்) அவர்களே கடைசி மூச்சு வரை கால் இழுபட ஜமாஅத் தொழுகைக்கு வந்து கலந்து கொண்டு நடைமுறைப்படுத்தியுள்ளதால் நபி வழியைப் பின்பற்றுவதில் நாங்கள் தான் சிறந்தவர்கள் என்று கூறும் நம்மிடம் இருக்க கூடாத பண்பாடு அல்லவா?



மேலும் ரமளான் சொற்பொழிவு நேரங்களில் பயானுக்கு வருவாரே தவிர தொழுகைக்கு வர மாட்டார். மேலே அலுவலகத்தில் இருந்து கொண்டும் தொழ மாட்டார்! இது மற்றவருக்கு தெரியக் கூடாது என்பதற்காக அறையின் உள்ளே வைத்து பீஜேவை பூட்டி விட்டு சாவியை கையில் வைத்திருந்த பணியாளரை கதவிடுக்கில் கசியும் ஏசியை வைத்து கண்டுபிடித்து கண்டித்த சம்பவங்கள் உண்டு.



எல்லாவற்றுக்கும் மேலாக ஜும்மா அன்று தொழாத முஸ்லிமை நாம் பார்க்க முடியுமா? ஆனால் அலுவலகத்தில் இருந்து கொண்டு பீஜே ஜும்மா தொழாமல் இருந்ததாக ரஃபீக் கூறுகின்றார். எவ்வளவு கைசேதத்திற்குரிய நிலைமை?



மார்க்கத்தை அறிந்தவர், புரிந்தவர் அதை மக்களுக்கு போதிக்கக் கூடியவர் இந்த நிலையில் இருந்தால் சாதாரண மக்களின் நிலை என்ன? மற்றவர்களுக்கு போதித்து விட்டு தான் கடைபிடிக்காமல், தன் குடலை கையிலேந்தும் (புகாரி) ஹதீஸ் பற்றியும், மக்களுக்கு நன்மையை ஏவி விட்டு உங்களை மறந்து விடுகின்றீர்களா? வேதத்தைப் படித்துக் கொண்டே இதை செய்கின்றீர்களா? என்ற குர்ஆன் (2:44) வசனத்தையும் நமக்கு எடுத்துச் சொல்லிவிட்டு அவரே அதை மறந்து நடப்பது நியாயமா?










மறுமையின் முதல் கேள்வி தொழுகை பற்றியது தானே? (திர்மிதி 413) ஈமானுக்கும், ஷிர்க்கிற்கும் உள்ள வேறுபாடு தொழுகையல்லவா? (முஸ்லிம்-82), முஸ்லிமுக்கும் காபிருக்கும் உள்ள வேறுபாடு தொழுகையல்லவா? (திர்மிதி 2621) தொழுகையை விடுவது குப்ர் (திர்மிதி 2622) என்ற நபிமொழிகள் எல்லாம் நமக்கு சொல்லிவிட்டு நமக்கு நேர்வழி காட்டி விட்டு சகோதரர் பீஜே வழிகேட்டில் சென்று விடக் கூடாது என்பது தான் நம் கவலை.

இதை நாம் சுட்டிக் காட்டும்போது சிலர் தவறு என்று கூறுகின்றனர். தொழுகையில் ஏற்படும் தவறுகளையே சுட்டிக்காட்ட மார்க்கம் அனுமதிக்கும்போது தொழுகையையே தவற விடுபவரை சுட்டிக்காட்டக் கூடாதா? ""ருகூவையும், சுஜுதையும் சரியாகப் பேணாதவர் தொழுகைத் திருடர்'' என நபி (ஸல்) சுட்டிக் காட்டும்போது முழுத் தொழுகையையும் திருடுபவரை சுட்டிக் காட்டக் கூடாதா?


நீங்கள் அதை தனிப்பட்ட முறையில் தான் சுட்டிக்காட்ட வேண்டும். பொது மேடையில் சுட்டிக்காட்டி புண்படுத்தலாமா என்று கேட்கின்றனர். மவ்லீது, ஹத்தம், பாத்திஹா, தகடு, தட்டு, தாயத்து போன்ற ஷிர்க், பித்அத்தில் உள்ளவர்களை நாம் தனிப்பட்ட முறையில் தான் சுட்டிக் காட்டினோமா? மேலும் சமுதாயத் தலைவர்களின் இயக்க சகோதரர்களின் குற்றங் குறைகளை பீஜே அவர்கள் தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டினாரா? பொது மேடைகளில் விமர்சித்தாரா? மற்றவர்களின் தவறுகளை எல்லாம் "சுட்டிக் காட்டும்போது, சத்தியத்தை போட்டு உடைக்க வேண்டும்' எனக் கூறி பொது மேடைகளில் மட்டுமின்றி, தொலைக்காட்சி, பத்திரிகை, இணைய தளம் என நாறடிக்கும் இவர்கள் இதைப் பற்றி பேசலாமா? மீலாது விழா கொண்டாடும் தலைவர்களை பற்றி பேசும்போது ""அஸர் போகும், மஃரிப் போகும் ஆனால் மீலாது ஊர்வலம் போய்க் கொண்டே இருக்கும் ஒரு பயலும் தொழ மாட்டான். இவர்கள் நபிகளாரை புகழ்கிறார்க ளாம்'' என பீஜே மற்ற தலைவர் தொழுகை நிலையை சுட்டிக்காட்டி பேசியது சரியென்றால், நாங்கள் பேசியது எவ்வாறு தவறாகும்?



இப்போது சொல்லும் நீங்கள் அங்கிருக்கும் வரை ஏன் சொல்லவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இதற்கு தமுமுக பிரிவின் போது பீஜேவே பதில் சொல்லியிருக்கிறார். உள்ளே இருந்து சொல்வதெற்கென்று ஒரு நிலை உள்ளது! அது முடியாத போது வெளியே வந்து சொல்லும் நிலை ஏற்படுகிறது என்ற நிலைதான் நமக்கும்! நாம் நம்முடைய அளவிலே, நாம் பேசக் கூடிய தலைவர்களிடத்திலே சொல்லி காட்டியிருக்கிறோம். இயக்க கட்டுப்பாடு கருதி வெளியில் பேச முடியாது! இப்போது அந்த கட்டுப்பாடு இல்லையென்பதால் வெளியே பேசுகிறோம்.

மேலும் இப்போது ஏன் சொல்கின்றீர்கள்? என்ற கேள்வியே தவறாகும். எப்போது சொன்னால் என்ன? தவறு என்று தெரிந்தால் சுட்டிக் காட்டலாமா கூடாதா? என்பதுதான் நமது கேள்வி! நாம் ஷிர்க் பித்அத்தில் இருந்தோம் தவறு எனத் தெரிந்த பின் ஷிர்க், பித்அத் பற்றி பேசினால் நீ ஏன் அப்போது பேசவில்லை என்ற கேள்வி சரியா? மவ்லீத் தவறு என்று சங்கரன் பந்தல் மதரஸôவில் பணியாற்றிய போது பேசத் தெரியவில்லையா? மவ்லீது ஓதிய நீங்கள் மவ்லீது பற்றி இப்போது பேசலாமா? என்று பீஜேவிடம் கேட்டால் அது அறிவுடைமையா?
வரதட்சணை தவறு என்று இப்போது புரிந்து அதை வாங்கு பவரிடம் போய் சொன்னால், நீ வாங்கும் போது தெரியவில்லையா? என்பது போலத்தான் இதுவும்! பிரிந்த பின் பேசலாமா? என்ற கேள்விக்கு சத்தியம் தெரிந்த பின் பேசலாமா? கூடாதா? என்பது தான் பதிலாக இருக்க முடியும்.

ஆக அன்பிற்குரிய சகோதரர் களே மற்ற மார்க்க கடமைகளை சுட்டிக்
காட்டுவது போல தொழுகையையும் சுட்டிக்காட்டி, அண்ணனை தொழச் செய்வோம்! அவருக்கு சப்பைக் கட்டு கட்டினால் அவரை நாமே வழி கெடுக்கிறோம். அதன் மூலம் ""இஸ்லாம் எளிய மார்க்க அல்ல'' அது பின்பற்றுபவராலேயே கடைபிடிக்க முடியாத சிரம மார்க்கம் என உலகத்திற்கு எடுத்துச் சொல்வது போன்றதாகும் என்பதை கூறிக் கொள்கிறேன்.

அல்லாஹ் மிக அறிந்தவன். நாம் அனைவரும் நேர்வழி பெற போதுமானவன்!

'ஜுலை 4 சினிமா' முடிந்ததும் மீண்டும் "மனம் திறந்த மடல்"

'ஜுலை 4 சினிமா' முடிந்ததும் மீண்டும் "மனம் திறந்த மடல்" எழுதி விட்டு ரஜினி பாணியில் 'மலையேறி' ஒய்வெடுக்க சென்றார்! 6 மாதம் என்னை யாரும் தொட்ர்பு கொள்ள வேண்டாம் என்ற onlinepj அறிவிப்பால் இம்முறை என்ன நிகழுமோ? யென ததஜ தொண்டர்கள் கலக்கம்! 

Monday, July 19, 2010

தர்காவாதி ஹாருனும், தடம் மாறிய பி ஜெ வும்! அண்ணனின் தளத்தில் காணாமல் போன வீடியோ

தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் கூட
தன் நிலையில் இருந்து மாறாத தர்கா வாதி !  


தடம் புரண்டு நான்கு நாட்களில் மாறி பேசும் பி.ஜே.
தவ்ஹீத் கூட்டங்களில் பிற இயக்கத்தை  அழைக்க மறுப்பது ஏன் ?
என்பது பற்றி விளக்கமளிக்கும் வீடியோ காட்சி.

ஜூலை 4 லின் போது   பிற இயக்கக தலைவர்களை அழைப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது , பிற இயக்க தலைவர்களை அழைத்தால் அவர்கள் நம்முடைய மேடையில் வந்து தன்னுடைய கொள்கையை சொல்லி நம்முடைய மக்களை வழி கெடுத்து விடுவார்கள்! [ஆனால் அந்த மேடையில்ஜே.எம்.ஹாருன் தனது கொள்கை தர்கா வழிபாடுதான் எனக் கூறினார்] மேலும்  விட்டு தங்கள் கட்சி தலைவர்களின் புகழை பாடுவார்கள் !உதாரணதிற்கு ஒரு காங்கிரஸ் காரரை அழைக்கிரோம்னு வச்சுக்கங்க ! அவர் வந்து அன்னை சோனியா காந்தி எப்படிப் பட்டவர் தெரியுமா? பிரதமர் மன்மோகன் சிங் எப்படிப் பட்டவர் தெரியுமா? அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்துள்ளார்கள் தெரியுமா ? என்றெல்லாம் பேசுவார்கள்.[ உண்மையில் இதைத்தான் ஜே.எம்.ஹாரூன் ஜூலை 4 மேடையில் பேசினார்] அதனால் தான் அவர்களை எல்லாம் அழைப்தில்லை' என மாநாட்டிற்கு சில நாள் முன்னர் பேசியது இமயம் தொலைக் காட்சியிலும், அவரது இணையதளத்திலும் வெளியாகி இருந்தது!நாம் இதை தர்கவாதி ஹாருனும் தடம் புரண்ட பி.ஜே.வும் என செய்தி வெளியிட்டு அவர்களது இணையத் தளத்திற்கே நேரடி லிங்க் கொடுத்து இருந்தோம். ஆனால் தற்போது அந்த லிங்கை சொடுக்கினால் அந்த வீடியோவை தற்போது காணவில்லை ! நமது இணையத்தளத்தில் அதிகமானோர் பார்த்த அந்த காட்சி பதிவை யாராவது கண்டு பிடித்து தந்தால்தேவலை. ஏன் எனில் மற்றவர்கள் இதை செயதால் பார்த்தீங்களா பைலாவை காணவில்லை ! தூக்கிட்டாங்க !பொய்யனுங்கம்மா  ! என கூப்பாடு போடும் பொய்.ஜே. என்ன சொல்லப் போகிறார்?    
  
  

            

Saturday, July 17, 2010

காணவில்லை !!!காணவில்லை !!!

அடுத்தவர் காசில் ,தன் பெயரில்ஆன்லைன்
நடத்தும் வலைத்தளத்தில் ,"எடுபடாத வாதங்கள் ."என்ற
கட்டுரை சில நாட்களுக்கு முன் வெளிவந்தது .
என்ன மாயமோ ,காணவில்லை .பார்ப்பவர்கள் கண்டு
பிடித்து தாருங்கள் .......

பள்ளி செல்ல மனமில்லையோ !!! படைத்தவன் நினைவில்லையோ ???

டெல்லி சென்று பிரதமரை சந்திக்க விரும்பும் அண்ணன் பள்ளி சென்று தொழ மறந்தது ஏன்?
ஆள்வோரின் சந்திப்பை விரும்பிய அண்ணன் அல்லாஹ்வின் சந்திப்பை மற‌ந்தது ஏன்?
இம்மையில் இட ஒதுக்கீடு பெற போராடும் நாம் மறுமையில் சொர்க்கத்தில் இட ஒதுக்கீடு பெற விரும்பாதது ஏன்?
அரசியல்வாதிகளின் அழைப்பை ஏற்கும் நாம் அதான் (பாங்கு) அழைப்பை ஏற்காதது ஏன்?

பீ.ஜே .பத்வா

25 லட்சம் என்று மிகைப்படுத்தி சொல்ல மார்க்கத்தில் அனுமதிஉண்டா?என்று நாம் கேட்டதற்கு போர்க்களத்தில் பொய் அனுமதி உண்டு என்று மார்க்கத்தை தன் மனோ இச்சை படி வளைக்கும் பெரும் பொய்யன் பி. ஜேஉங்கள் வாதப்படி போர்க்களம் என்றே வைத்து கொண்டாலும் எதிரியிடம் பூச்சென்டும் போஸும் கொடுத்து கோரிக்கை மனு கொடுப்பதும்தான் உங்கள் பானியில் போரிடும் முறையா?யாரை எதிர்த்து போரோ அந்த மத்திய அரசின் எம்.பி.யை மேடையில் வைத்துக் கொன்டு அவர் தயவாலே டெல்லி சென்று அந்த காங்கிரஸ் அரசின் பிரதமரிடமே கோரிக்கை மனு கொடுப்பது எப்படி போர் ஆகும்?

அமெரிக்காவில் கூபிட்டாக !! ஐநா வில் கூபிட்டாக !!

ராஜஸ்தான் பற்றி எரிந்த போது குஜ்ஜார் இனத் தலைவர்களை அழைக்காத ,தெலுங்கனா தீப்பற்றறி எரிந்த போது அதன் தலைவர்களை அழைக்காத பிரதமர்,6 மாநிலங்களை அடக்கி ஆளும்மாவோயிஸ்ட் தலைவர்களை அழைத்து பேசாத பிரதமர்,10 நாட்களாக பற்றி எரியும் காஷ்மீர் போராட்டகாரர்களை அழைத்து பேசாத பிரதமர் ,பெட்ரோல் விலை உயர்வுக்காக நாடு தழுவிய பாரத் பந்த் நடத்தி பல மாநிலங்களை ஸ்தம்பிக்க செய்த எதிர்கட்சி தலைவர்களை அழைத்து பேசாத பிரதமர், தீவுத்திடலில் மாநாடு போட்டதும் இவர்களை பார்த்து மிரண்டு போய் உட்னே அழைத்தாராம் விட்டால் அமெரிக்கவிலிருந்து ஒபாமா அழைத்தார்கள். ஜ.நா விலிருந்து பாங்கிமோன் அழைத்தாங்க என கரகாட்டகாரன் பாணியில் கதை அளபாங்க போலிருக்கிறது............................

Friday, July 16, 2010

மாறியது கொள்கை மாற்றியது எதுவோ ?

அன்பிற்கினிய சகோதரர்களே! அனைத்து இஸ்லாமிய அறிஞர்களையும், சமுதாயத் தலைவர்களையும் பொய்யர்கள் என தான்தோன்றித்தனமாக வசைப்பாடும் உண்மையிலே பொய்யர் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரும், பொய்ஜெ என அழைக்கப்படும் பிஜேயின் தேர்தல் உரையை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.
http://www.intjonline.in/649.do
http://www.intjonline.in/video-common
  அதில் என்ன சொல்கிறார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பார்க்க அழைத்தும், நாங்கள் பார்க்க மறுத்தோம். நம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீட்டு ஆணை போட்டால்தான் நாம் ஜெயலலிதாவை சந்திப்போம்.  அதற்கு முன்பு சந்தித்தால் நமக்கு அல்வா தந்து விடுவார்கள்.ஆகவே நாங்கள் ஜெயலலிதவை சந்திக்க மறுத்தோம். இடஒதுக்கீட்டிற்கான ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகு தான் நாங்கள் நன்றி சொல்ல அவரிடம் சென்றோம் என சொல்லும் இவர், ஜுலை 4, 2010 அன்று மாநாடு நடத்தி, அவசர அவசமாக டில்லி சென்று பிரதமரை சந்தித்தாரே ஏன்?
இவர் முந்தைய வாதப்படி...
  • பிரதமர் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கான ஆணையை பிறப்பித்து விட்டு, இவர்களை அழைத்தாரா? அல்லது ஆணையை பிரதமர் போட்டு விட்டதால், நன்றி சொல்ல சென்றார்களா?
  • முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க சென்றால், “பஷீர்பாய்க்கு சீட்டு”, “தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நோட்”  என சொல்லி விடுவார்கள் என்பதால், தேசியலீக் பஷீர், கான்பாகவி, தர்வேஸ் ரஷாதி, பிரசிடென்ட் ஹோட்டல் அபூபக்கர் மற்றும் ஷம்ஸுதீன் காஸிமி போன்றவர்களை அழைத்து சென்றோம் என சொல்லும் இவர்,  கடந்த ஜுலை 5 அன்று அவசர, அவசரமாக டில்லிக்கு போகும் பொழுது மேலே பட்டியல் போட்ட பொதுவான நபர்களை அழைக்காமல் வரும் தேர்தலில் சீட்டுக்கு நிற்கும் காங்கிரஸ் எம்.பி ஹாரூனையும், தேசியலீக் பஷீரையும் அழைத்து சென்றதன் காரணம் என்ன?

Thursday, July 15, 2010

மதுரையில் போலீஸ் அராஜகம்! பாக்கர் கடும் கண்டனம்!

மதுரையில் காவல்துறையின் அட்டகாசமும் அராஜாகமும் கடுமையாக இருக்கிறது.

சென்ற ஜுலை 5ஆம் தேதி எதிர்கட்சிகள் பெட்ரோல், டீஸல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் நடத்தின. அன்று எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. அன்று கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையாகி வெளிவந்த தென்காசி சகோரர்கள் மதுரை நீதிமன்றத்திற்கு வந்தனர். அங்கு ஏற்கனவே வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகி உள்ள போலீஸ் பக்ருதீன் என்ற சகோதரரும் சென்றுள்ளார். தென்காசி சகோதரர்களும், பக்ரூதீனும் பேசிக் கொண்டனர்.

அவர்கள் நாங்கள் தென்காசியிலிருந்து காலையிலேயே மதுரை வந்து விட்டோம். எந்த ஹோட்டலும் இல்லை. எங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்து தாருங்கள் என கேட்டுள்ளனர். அவரும் என்னுடன் என் ஏரியா நெல்பேட்டைக்கு வாருங்கள் என அழைத்து சென்றுள்ளார்.

இதை அறிந்த மதுரை துணை கமிஷனர் எண்கவுண்டர் வெள்ளதுரை, பக்ரூதீனை பார்த்து நீனே என்கவுண்டர் லிஸ்டில் இருக்கிறாய், இவங்களை ஏன்டா கூட்டி வந்தாய் என துப்பாகியை எடுத்து இருக்கிறார். ஏன் சார், நான் கடந்த வாரம்தான் வெளியே வந்தேன். என்ன தப்புசார் செஞ்சேன், என் மீது ஏன் அநியாயமாக கேஸ் போடுகிறீர்கள் என சொல்லி துப்பாகியை தட்டி விட்டுள்ளார். வெள்ளதுரையுடன் இருந்த மற்ற போலீஸ்மார்கள் பக்ருதீனை மடக்கி பிடித்து கடுமையாக அடித்துள்ளனர். அவர், நம்மை மீண்டும் ஜெயிலில் தள்ளி விடுவார்கள் என பயந்து போலிஸ்காரர்களிடமிருந்து ஒரு வகையாக தப்பி சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் கொண்ட வெள்ளை துரை தன் காவல்படைகளை அழைத்துக் கொண்டு நெற்பேட்டையை முற்றுகையிட்டுள்ளார். அவர் ஜீப்பில் இருந்து கொண்டு ஸ்பீக்கர் மூலம் அங்கிருந்த முஸ்லிம் மக்களுக்கு பீதி கலந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் தனது எச்சரிக்கையில், “நீங்க தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் இருப்பீங்க, உங்களை எல்லோரையும் எண்கவுண்டரில் போட எனக்கு தெரியாதா?! என திமிர்தனமாக பேசியுள்ளார். அவருடன் வந்த மற்றொரு போலீஸ் அதிகாரி தேன்மொழி இந்த இடத்தை மயானமாக்க எவ்வளவு நேரம் ஆகிவிடும்” என எச்சரிக்கை செய்துள்ளார்.

இதனால் எந்த நேரமும் போலிஸ் சுட்டு விடுமோ என்ற பயத்தில் நெற்பேட்டை முஸ்லிம்கள் உள்ளனர்.

இந்த அராஜகத்தை கண்டித்து கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அராஜகத்திற்கு எதிரான கூட்டமைப்பு என்ற பெயரில் தமுமுக, இதஜ, PFI, விடுதலை சிறுத்தைகள் உட்பட ஏராளமான சிறுபான்மை சமுதாய அமைப்புகள் ஒன்று சேர்ந்து பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அத்தனை பேர்களை ரிமாண்ட செய்த போலீஸ் அதன் பிறகு விடுதலை செய்தது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M..பாக்கர் மதுரை வந்தார். பாதிக்கப்பட்ட நெற்பேட்டைக்கு சென்று காவல்துறைக்கு பயந்து தலைமறைவாகி உள்ள போலிஸ் பக்ருதீன் தயாருக்கு ஆறுதல் கூறினார். துணை கமிஷனர் வெள்ளைதுரையின் அராஜக போக்கை கடுமையாக கண்டித்தார். இவருக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்கும் வரை போராடுவோம் என்றார். அவருடன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகிகள் S.S.T.அப்துல் காதர், ரஃபீக் ஜமான், பரக்கத் அலி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

மதுரையிலிருந்து பரக்கத் அலி.

Wednesday, July 14, 2010

அரசியல் வாதிகளை மிஞ்சிய அண்ணன்


கோவை யில் நடந்தபிரமாண்ட ADMK
பொது கூட்டத்தில் கலந்து கொண்டோர் 80000 பேர்
விருதுந‌கர் மாவட்ட செயளாலர் அறிவிப்பு
சமீபத்தில் நடந்த ஜுலை 4 தீவுத் திடலில் கலந்து கொண்டோர்
எண்ணிக்கை ????????
அபூந்பீலா


பக்தி உங்களின் புத்தியை பேதலிக்கச் செய்துள்ளதே!

ஹி. 28.06.1431ஈ.: 11.06.2010
அன்புச் சகோதரர் S. இப்றாஹீமுக்கு அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் எழுதியது,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)நம் அனைவருக்கும் நேர்வழி கிடைக்க துஆ செய்கிறேன்!
பழனி உமர் உங்களுக்கு வீம்பர் போல் தெரிகிறது. ஆனால் பீ.ஜை. பக்தராகிய உங்களுக்கு உங்களின் வீம்பு நிலை தெரியவில்லையே. பரிதாபம்! நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் அந்நஜாத்தில் 2500 தடவை எழுதியும் பீ.ஜை. பக்தர்களின் பித்தம் தெளியவில்லையே! உங்களுக்கே இன்னும் பித்தம் தெளியவில்லையே! இன்னும் 2500 தடவை எழுத வேண்டியிருக்கிறதே. ஈ.வே.ரா. சொன்னது போல் பீ.ஜை.பக்தி உங்களின் புத்தியை பேதலிக்கச் செய்துள்ளதே.
இல்லை என்றால் 1987லிருந்து 2010 வரை பீ.ஜை. எத்தனை புதிய இயக்க மத்ஹபுகளை உண்டாக்கி இருக்கிறார். குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று தெளிவு பெற்று வந்த வாலிபர்களை எந்த அளவு வழிகெடுத்துள்ளார் என்பதை ஒரு நடுநிலை பாமரன் விளங்குவதை உங்களால் விளங்க முடியாமல் இருக்குமா?
பித்தம் தெளிந்தவர்கள் பொய்யன் பீ.ஜை.யை அதிகமாக அடையாளம் காட்டச் சொல்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக அவர் பலரைப் பற்றிப் பரப்பி வரும் அவதூறுகள், குற்றச்சாட்டுக்களை பொது மக்கள் முன்னிலையில் நிரூபித்துக்காட்ட முன் வரும்படி நாம் அழைத்தும் முன்வராத அவர், உங்கள் பார்வையில் யோக்கியர்.
சுமார் 100 பேருக்கு முன்னால் பாக்கர் பற்றி பகிரங்கமாகக் கூறியவற்றை நான் கூறவில்லை என்று முபாஹலா செய்தவர் உங்கள் பார்வையில் யோக்கியர்.
ஒரு வருடத்திலேயே பல்ட்டி அடித்து “நான் அவ்வாறு கூறவில்லை” என்று முபாஹலா செய்ததற்கு முரணாக அதே குற்றச் சாட்டுகளை இப்போது கூறி வருகிறவர் உங்கள் பார்வையில் யோக்கியர்.
அல்லாஹ் மீது ஆணையிட்டு அவதூறு பரப்புகிறவர் உங்கள் பார்வையில் யோக்கியர்; நேரடியாக வாருங்கள் உரிய ஆதாரம் தருகிறோம்.
1987லிலிருந்து இன்று 2010 வரை அவரது வளர்ச்சிக்கும் பேர் புகழுக்கும் காரணமாக இருந்தவர்களை எப்படி எல்லாம் இழிவு படுத்தியுள்ளார். எந்த அளவு அவதூறு பரப்பி இருக்கிறார் என்பதை நேரடியான உரிய ஆதாரங்களுடன் காட்டுகிறோம். நேரில் வாருங்கள்.
எந்த அளவு பீ.ஜை. பக்தி உங்களை மயக்கி இருந்தால் 90க்கு முன்பே முடிந்துவிட்ட ஒரு பிரச்சினை என அப்பட்டமான பொய்யை எழுதியிருப்பீர்கள். பீ.ஜை. அது பற்றி ஏதும் எழுதவில்லை என்றும் ஓர் அப்பட்டமான பொய்யை எழுதியிருப்பீர்கள். 1999ல் கோவை வெடிகுண்டு வழக்கில் அரசு தரப்பு சாட்சியாகி அப்பட்டமான பொய்யைக் கூறிவிட்டு, நாம் தொடுத்த வழக்கிலிருந்து விடுபட லஞ்சம் கொடுத்து எனது வக்கீலையும் சரி செய்து குறுக்கு விசாரணை இல்லாத நிலையில் “நான் அப்படிச் சொல்லவில்லை” என பொய் வாக்குமூலம் கொடுத்ததையும், சமீபத்தில் திருப்பூர் P. நாசருக்காக வசூலித்து அவர் குடும்பத்திற்குக் கொடுக்காமல் நான் மோசடி செய்து விட்டதாக பகிரங்கமான பொய்யை உணர்வில் எழுதியதையும் பீ.ஜை. பக்தி உங்கள் கண்ணை விட்டு மறைத்துவிட்டது.
அவரது வலைதளங்களில் போய் பாருங்கள். எப்படி எல்லாம் அவதூறு பரப்புகிறார் என்பது விளங்கும். அப்படிப் பார்த்தாலும் நீங்கள் உணரப் போவதில்லை. அந்த அளவு பீ.ஜை. பக்தியில் மூழ்கி இருக்கிறீர்கள். நீங்கள் அவரோடு சில நாட்களாவது தங்கி இருக்கிறீர்களா? பிரயாணம் செய்திருக்கிறீர்களா? கொடுக்கல் வாங்கல் செய்து பார்த்திருக்கிறீர்களா? இதில் எது ஒன்றையும் செய்யாத நீங்கள் எதை வைத்து பீ.ஜை. பக்தியில் இருக்கிறீர்கள்? அவரது பேச்சு நடிப்பில் – பயான் சூன்யத்தில் மயங்கி அவரது பக்தராக இருக்கிறீர்கள். அப்படித்தானே?நாம் அவரோடு 15 மாதங்கள் தங்கி பழகி இருக்கிறோம். பல நாட்கள் பிரயாணம் செய்திருக்கிறோம். கொடுக்கல் வாங்கல் செய்திருக்கிறோம். ஐங்காலக் கட்டாயத் தொழுகைகளைப் பாழ்படுத்துவதை கண்கூடாகப் பார்த்துக் கண்டித்திருக்கிறோம். நம்மை விட்டு அவர் வெளியேறியதற்கு அதுவும் ஒரு காரணம்.
தர்கா, தரீக்கா, மத்ஹபுகளை விட்டு விடுபட்டு வந்த இளைஞர்களை இயக்க மத்ஹபுகளில் சிக்க வைத்து, அதிலும், ஆக், ஜாக், முஸ்லிம் முன்னணி, முஸ்லிம் பேரவை, ஒருங்கிணைந்த தவ்ஹீத் ஜமாஅத், ததஜ என பல இயக்க மத்ஹபுகளை உண்டாக்கி, இப்போது இதஜ உருவாகக் காரணமாக இருந்தவர் உங்கள் பார்வையில் நேர்மையாளர், சீர்திருத்தவாதி, நபிமார்களின் தாவா பணி செய்கிறார்; அப்படித்தானே?பீ.ஜை. பக்தி எந்த அளவு உங்களது புத்தியை மழுங்கச் செய்துள்ளது என்பதை நடுநிலையோடு சிந்தியுங்கள்.
சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ் ரீன் போன்றவர்களையும் பல நாடுகள் தங்கள் நாடுகளில் நுழைய விடாமல் திருப்பி அனுப்புகின்றன. வெட்டு, குத்து, அடி, உதை என விரட்டி அடிக்கப்படுகிறார்கள். அவர்களது பக்தர்கள் இப்போது நீங்கள் சொல்வது போல்தான் சொல்கிறார்கள். அதையும் ஏற்கிறீர்களா? சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ் ரீன் போன்றோராவது ஏற்கனவே வழிகேட்டில் இருப்பவர்களைத்தான் மேலும் வழிகெடுக்கிறார்கள். ஆனால் உங்களது பக்திக்குரிய பீ.ஜை. குர்ஆன், ஹதீஸை பற்றிப் பிடித்து அதன்படி நடக்க முன்வந்தவர்களை இயக்க மத்ஹபுகள் என்ற வழிகேட்டில் இட்டுச் செல்கிறார். பெருத்த வழிகேட்டில் இருப்பது யார்? சொல்லுங்கள்!
அல்குர்ஆன் 3:7 வசனத்தில் பல பொருள் தரும் முத்தஷாபிஹாத் வசனங்களை ஒரே பொருளான முஹ்க்கமாத் வசனங்களாக மாற்றும் வல்லமை அல்லாஹ்வுக்கு இருப்பது போல் அறிவில் சிறந்தவர்களுக்கும் இருக்கிறது என்றும், “தஃவீல்” என்ற அரபி பதத்திற்கு அந்த இடத்தில் முடிவு என்ற பொருளை எடுக்காமல் விளக்கம் என்ற பொருளை எடுத்து அல்லாஹ்வையும் விளங்கும் மனித கீழ் நிலைக்கும், மனிதனை அல்லாஹ்வின் உயர் நிலைக்கும் உயர்த்தி மிக மோசமான கொடிய ஷிர்க்கை ஏற்படுத்தும் செயலை செய்துள்ள மாபாவி பீ.ஜை. உங்கள் பார்வையில் நபிமார்களின் பிரசார பணியைச் செய்கிறார்.
அல்குர்ஆன் 2:102லுள்ள பாபிலில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகள் என அல்லாஹ் நேரடியாகச் சொல்லியிருப்பதை மறுத்து ஹாரூத், மாரூத் இரண்டு ஷைத்தான்கள் என எழுதி 49:16ல் அல்லாஹ் சொல்வது போல், அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கத் துணிந்த மாபாவி உங்கள் பார்வையில் நபிமார்களின் பிரசார பணியைச் செய்கிறார். இதுபோல் பல குர்ஆன் வசனங்களை 2:159-162 கூறுவதுபோல் திரித்து வளைக்கிறார். இளைஞர்களை வழிகேட்டில் இட்டுச் செல்கிறார்.
உண்மை என்ன தெரியுமா? ஷைத்தானின் நேரடி ஏஜண்டாக இருந்து, குர்ஆன், ஹதீஸ் என்று சொல்லியே வாலிபர்களையும், இளைஞிகளையும், நரகில் தள்ளும் கேடுகெட்ட புரோகிதராகச் செயல்படுகிறார் நீங்கள் பக்தி செலுத்தும் உங்கள் அபிமான பீ.ஜை. இன்றைய நிலையில் அவரைவிட ஒரு கேடுகெட்ட புரோகிதர் இப்புவியில் இல்லை. அதனால்தான் தொடர்ந்து அவரை அடையாளம் காட்டி வருகிறோம்.பீ.ஜை. பக்தி உங்களுக்கு முற்றிப் போய் அவர் வாந்தி எடுத்ததையே வாந்தி எடுக்கிறீர்கள். நீங்கள் பழுதான பழைய சகோதரன் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே அவர் 1987ல் உங்களை விட அதிகமாக பீ.ஜை. மீது பக்தி வெறி கொண்டு என்னை மிகக் கடுமையாக விமர்சித்துக் கடிதங்கள் உங்களைப் போல் எழுதியவர்தான்.
1987ல் பீ.ஜை. அந்நஜாத்தை விட்டு வெளியேறியவுடன் அரபு நாடுகளின் பட்டி தொட்டி எல்லாம் பீ.ஜை. பேசி வெளியிட்ட ஆடியோ கேஸட்டுகளை எல்லாம் பரப்பி பீ.ஜை.யை அறிமுகப்படுத்த பெரும் கடின முயற்சிகள் எடுத்தவர்தான். பீ.ஜை.யை பிரபலப்படுத்தியவர்தான். இப்போது பீ.ஜை. பக்தி தெளிந்து உண்மை நிலையை வெளியிடுகிறார். தற்போதைய பீ.ஜை. பக்தராகிய நீங்கள் அதை ஜீரணிக்க முடியாமல் அது யாருடையது என்று நன்கு தெரிந்திருந்தும் மொட்டைக் கடுதாசி என பிதற்றி இருக்கிறீர்கள். யார் எழுதியது என்று தெரியாமல் மறைத்து வெளியிடுவதுதான் மொட்டைக் கடுதாசி என்பதை அறிந்து கொள்ளுங்கள். பீ.ஜை. பக்திதான் உங்களை இப்படி எல்லாம் தடுமாற வைக்கிறது. பிதற்ற வைக்கிறது.
ததஜ மட்டும்தான் நேர்வழியில் இருக்கிறது. ததஜ பள்ளிகள் மட்டும்தான் ஓறிறைவனை வணங்கும் பள்ளி. இதர பள்ளிகள் அனைத்தம் மஸ்ஜிதுர்ழிரார், மற்றவர்கள் பின்னால் தொழக்கூடாது. ததஜ மேடைகளில் மட்டும்தான் நாங்கள் ஏறுவோம். மற்றவர்களின் மேடைகளில் நாங்கள் ஏறமாட்டோம். வேறு யாரையும் எங்கள் ததஜ மேடையில் ஏற்றமாட்டோம், இப்படி எல்லாம் யாருடைய வாயிலிருந்து வெளிவரும். அப்படியும் நபி என்று கூறிவிடுவாரோ என்றுதான் நாம் எழுதியிருக்கிறோம்.ஃபத்வா கொடுக்கவில்லை.
இதை, அவதூறு கூறுவது நபி வழியா? என்று கேட்டிருக்கிறீர்கள். அவர் மரணிக்கும் வரை அவ்வாறு கூறாவிட்டால் உங்கள் பாவத்தை, பீ.ஜை. மன்னிக்காதவரை அல்லாஹ் எவ்வாறு மன்னிப்பான்? என்று எழுதியிருக்கிறீர்கள் பக்தியால் புத்தி பேதலித்து. உங்கள் அபிமான பீ.ஜை. இதுவரை எத்தனை பேர் மீது எப்படிப்பட்ட கடுமையான அவதூறுகளைப் பரப்பி இருக்கிறார். வல்லம் மாநாட்டில் “நம்மோடிருந்து தடம் புரண்டவர்கள்” என 65 நபர்களைக் குறிப்பிட்டிருந்தாரே. இதஜ தோன்றியபின் அந்த, எண்ணிக்கை 100 ஐத் தாண்டியிருக்குமே!
நபி என்று கூறிவிடுவாரோ என்று கூறுவது அவதூறு கூறுவது நபி வழியா? என்று கேட்கும் நீங்கள், உங்கள் அபிமான பீ.ஜை. பலரை பெயர் குறிப்பிட்டுத் தடம் புரண்டுவிட்டார்கள் என்று உறுதிப்படுத்தியும், பலரை காஃபிர்-முஷ்ரிக் என்றும் அவர்கள் பின்னால் நின்று தொழுவது கூடாது என்றும் ஃபத்வாவே கொடுக்கிறாரே, அல்லாஹ் மீது ஆணையிட்டுப் பலர் மீது அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருகிறாரே? அவரிடம் இவை எல்லாம் அவதூறு; நபிவழியல்ல; 42:21, 49:16படி ஷிர்க்-குஃப்ர் ஏற்படுத்தும் செயல்கள் என்று சொல்லும் துணிச்சல் உங்களுக்கு உண்டா? சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பீ.ஜை.யை மன்னிக்காதவரை அல்லாஹ் எவ்வாறு மன்னிப்பான்? என்று பீ.ஜை.யிடம் கேட்டிருக்கிறீர்களா? நபி என்று கூறிவிடுவாரோ? என்று சந்தேக அடிப்படையில் நாம் கூறுவது பெருங்குற்றம். பீ.ஜை. 65 நபர்களைக் குறிப்பிட்டுத் தடம் புரண்டுவிட்டார்கள் என்று (ஃபத்வா) தீர்ப்பளித்ததோடு, மாநாட்டில் பகிரங்கப்படுத்தியது, 42:21, 49:16ல் அல்லாஹ் கண்டித்துக் கூறுவது உங்களுக்குப் பெருங்குற்றமாகத் தெரியவில்லை. எந்த அளவு பீ.ஜ. பக்தியில் மூழ்கித் தடுமாறுகிறீர்கள் என்பதை உங்களால் உணர முடியாது.
அந்நஜாத்தில் ஆசிரியராக இருக்கும்போது மாதாமாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு “நான் சம்பளம் வாங்கவில்லை, வாங்குவதாகவும் இல்லை” என்று பகிரங்கமான பொய்யை எழுதினாரே இது அவர் புரோகிதர் என்பதற்கு ஆதாரமில்லையா?
அரபி மொழி கற்றவர்களுக்கு மட்டுமே மார்க்கம் சரியாக விளங்கும் அதை நான் நிரூபிப்பேன் என்று எனக்குக் கடிதம் எழுதினாரே இது அவர் புரோகிதர்தான் என்பதற்கு ஆதாரமில்லையா?
இன்று பல புரோகித மதரஸாக்களை ஆரம்பித்து, நாங்கள் புரோகிதர்களை சப்ளை செய்வதில்லை என்று 1986ல் அந்நஜாத்தில் எழுதியதற்கு முரணாக இன்று பல்ட்டி அடித்து புரோகிதர்களை சப்ளை செய்வது அவர் புரோகிதர் என்பதற்கு ஆதாரமில்லையா?
நபி(ஸல்) அவர்களது காலத்தில் இன்றைய முஸ்லிம்களைவிட கேடுகெட்ட முஸ்லிம்கள் (முனாஃபிக்குகள்) இருந்தார்கள் என்று உங்கள் அபிமான பீ.ஜை.யைப் போல் சுய கருத்துக்களை எழுதவில்லை. குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் கொடுத்தே எழுதி இருந்தோம். அந்த முனாஃபிக்குகள் இமாமத் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா? என்று கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்று நாம் கூறியதாக எழுதியுள்ளீர்கள். ஆம்! அப்படிக் கூறினோம். ஏன் தெரியுமா? பீ.ஜை.யின் மூடத்தனமான கேள்வியை அவரது பக்தராகிய நீங்கள் அப்படியே வாந்தி எடுத்ததால்தான் அப்படிக் கூறினோம். எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்பதற்குத்தான் ஆதாரம் கேட்கவேண்டும்; எதையெல்லாம் சாப்பிடலாம் என்பதற்கு ஆதாரம் கேட்பவன் மூடன், எதை எல்லாம் உடுத்தக் கூடாது என்பதற்கு ஆதாரம் கேட்கலாம், எதை எல்லாம் உடுத்தலாம் என்பதற்கு ஆதாரம் கேட்பவன் அறிவிலி. அதேபோல் அன்று நபி(ஸல்) காலத்தில் இணை வைக்கும் நிலை இருந்ததில்லை என்று உங்கள் அபிமான பீ.ஜை. எழுதியதற்கு மறுப்பாக நபி(ஸல்) காலத்தில் கொடிய இணை வைக்கும் முனாஃபிக்குகள் இருந்தார்கள் என்று குர்ஆன் வசனங்களைக் கொண்டு எடுத்துக் காட்டியதை உங்களால் உணர முடியவில்லை. அந்த அளவு பீ.ஜை. பக்தி உங்களின் மூளையை மழுங்கச் செய்துள்ளது. பீ.ஜை. எழுதியதே வேத வாக்காக(?) உங்களுக்குத் தெரிகிறது. தொழக்கூடாது என்று கூறும் பீ.ஜை.தான் அதற்குரிய ஹதீஸ் ஆதாத்தைக் காட்ட வேண்டும். சுய கருத்தை அல்ல. இந்த அற்பமான அறிவும் உங்களுக்கு இல்லை என்பதை நீங்களே வெளிப்படுத்துகிறீர்கள்.
நபி(ஸல்) காலத்தில் இணை வைக்கும் முனாஃபிக்குகள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தது குர்ஆனைக் கொண்டு (2:8-20) உறுதிப்படுகிறது. அப்படியானால் அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று தெளிவுபடுத்தக் கடமைப்பட்ட நபி(ஸல்) அப்படித் தெளிவுபடுத்தத் தவறிவிட்டார்கள். ததஜ மத்ஹபு நவீன இமாம் தான் அப்படியொரு சட்டம் சொல்லி தெளிவுபடுத்த வேண்டும் என்று எண்ணும் நீங்கள் எந்த அளவு அறியாமையில் இருக்கிறீர்கள் என்பதைச் சிந்திக்கவும்.
உங்கள் அபிமான பீ.ஜை. சொல்லுவது போல், நாங்கள்தான் நேர்வழியில் இருக்கிறோம், நாங்கள் சொல்வதுதான் நேர்வழி என்று 1986லிருந்து இன்றுவரை எப்போதாவது சொல்லி இருக்கிறோமா? ஒருபோதும் சொன்னதில்லையே! அல்லாஹ்வும், அவனது தூதரும் சொன்னதுதான் நேர்வழி. அந்நஜாத்தில் வருவதை குர்ஆன், ஹதீஸில் பார்த்து விளங்கிச் செயல்படுங்கள்; அந்நஜாத்தில் வருவதை வேதவாக்காக(?) எடுக்காதீர்கள். அந்நஜாத்தை ஒருபோதும் தக்லீது செய்யாதீர்கள் என்றல்லவா தொடர்ந்து எழுதி வருகிறோம். “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்பது பேச்சில் மட்டுமல்ல; அந்நஜாத்திலும் அந்தக் கருத்தையே எழுதுகிறோம். அதுவும் எங்கள் சுயவிருப்பப்படி அல்ல. அல்லாஹ் அல்குர்ஆன் 25:63, 28:55, 39:64 இறைக் கட்டளைக்கு அடிபணிந்தே அவ்வாறு கூறுகிறோம்.
சொந்த உபயோகத்திற்காக உள்ள கட்டிடமாக இருந்தால் மட்டுமே ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. வாடகை வருமானம் நோக்கமாக இருந்தால், வருமானம் கருதி கடையில் முதலீடு செய்யும் பொருள்களுக்கு ஒரு வருடம் பூர்த்தியான பின்னர் அப்போதிருக்கும் பொருள்களின் மதிப்பிற்கும், அந்த வருடம் வந்த வருமானத்தில் செலவுகள் போக எஞ்சியிருக்கும் பணத்திற்கும் வருடா வருடம் ஜகாத் கடமையாவது போல், வருமானத்தை நோக்கமாகக் கொண்ட கட்டிடங்களுக்கும் வருடா வருடம் ஜகாத் கடமை என்பதையே குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் பார்க்க முடிகிறது. இதுபற்றி அந்நஜாத்தில் தெளிவாக ஆதாரங்களுடன் எழுதியுள்ளோம்.
வரும் வாடகை குறைவாக இருக்கிறது. செலவுக்கே போதவில்லை. இந்த நிலையில் எப்படி வருடாவருடம் ஜகாத் கொடுப்பது என்ற கேள்விக்கு பதிலாக ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும். வருடா வருடம் கொடுக்கத் தேவை இல்லை என்று தீர்ப்பு அளிப்பதற்கு மனிதர்களில் யாரும் எந்த அல்லாமாவும் அதிகாரம் பெறமாட்டார். 42:21 எச்சரிக்கைக்கு முரணாக நாம் ஒருபோதும் தீர்ப்பு அளிக்க மாட்டோம்.
வீம்பர் கேட்ட கேள்வி என சகோ. பழனி உமரின் கேள்வியை விமர்சித்து விட்டு அதைவிட வீம்புத்தனமாக கேள்விகளை நீங்கள் கேட்டுள்ளதால் இந்தப் பதில் தரப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் அந்நஜாத்திலும், வலைதளத்திலும் இடம் பெறச் செய்ய எமக்கு மறுப்பு இல்லை. கேள்விகள் தொடரும் என்றும் எழுதியுள்ளீர்கள். தொடருங்கள். பதில் அளிக்கிறோம்.
வஸ்ஸலாம்.

மக்கள் மன்றம் (எடுபடாத எரிச்சல்கள்....)

அல்லாஹ்வின் திருப்பெயரால்!!!!
சமீபத்தில் இராஜபாளையத்தில் குவைத் ராஜா என்பவரும், திருச்சியில் பாரிவேந்தன் என்பவரும் தன் பெயரை நிலை நிறுத்த விளம்பரத்திற்கு மேல் விளம்பரம் செய்து மக்களை கூட்டியதை சில மாதங்களுக்கு முன்பு பேப்பரில் கண்டேன். அவ்வாறான ஒரு காரியத்தை தன் ஆதிக்கதி்ல் செயல்படும் ஒரு இயக்கத்தின் பெயரால் நடத்த நினைத்து தான் சொன்னபடி கூட்டம் வராமல் போனதன் ஆத்திரத்தை டெல்லி விமானத்தை பிடிக்கும் அவசரத்தில் சேம்சைடு கோல்போட பல உண்மைகள் ஊரறிய நாறிப்போச்சு.
நான் 15 லட்சம்னு சொன்னா 15 ஆயிரம் பேருக்கு சமம் என பஞ்ச் டயலாக் அடிக்கும் கணக்குப் புலியின் கணக்குப்படி நாடு முழுவதும் சுமார் 300 பேர் உள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினரின் பிரச்சாரம் சென்றடைந்து மாநாடு டமால் ஆனதால் கணக்குப் புரியாமல் தவிப்பதையே அவரது எரிச்சல் எழுத்துக்கள் காட்டுகின்றன. இதஜவினரை எண்ணிப் பார்த்தவர் தங்களுடைய தீவுத்திடல் பொதுக்கூட்டதிற்கு அழைத்து வரப்பட்ட பொதுமக்களையும், ஹாருன், பஷீர் ஆதரவாளர்கள்; மற்றும் இன்ன பிறரையும் கழித்துவிட்டால் ததஜவில் இப்போது எத்தனை பேர் உள்ளார்கள் என்ற கணக்கும் தெரிந்திருக்குமே. வெளிநாட்டு ததஜகாரர்களை எல்லாம் வரவழைத்து மேடையை நிரப்பி காட்டினாலும் திடலின் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களையும் நேரடி ஒளிபரப்பில் காட்டி மகிழ்ந்த போது தெரிந்து கொண்டோம் இதஜ வாதங்களை மக்கள் உள்வாங்கி உணர்ந்ததை. டம்மி பீஸை ஒரங்கட்டிவிட்டு காமெடி பீஸ கொலுவில வச்சிக்கிட்டு மாங்காய்களுக்கு ரியல் தலைவனாகவும் ஹாருனுக்கு தொண்டனாகவும் split personality கேரக்டரில் கலக்கியது சூப்பர்.
அதிகாரிகளிடம் 15 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று உண்மையை ஒப்புக்கொண்டவர். சமுதாய மக்களிடம் 15 லட்சம் என்று பொய் சொன்னது. ரோட்டில் போனவன் வந்தவன், கடற்கரையில் போட்டுக்கு அருகில் ஒதுங்கியவன், இன்னும் அன்றைய தினம் மதராசபட்டணத்தில் இருந்தவன் அனைவரையும் தீவுத்திடல் கணக்கில் சேர்த்தது என்னவோ மதீனாவில் யூதர்கள் நபியை எதிர்பார்த்து இருந்தது போல் தீவுத்திடல் கூட்டத்திற்காகவே பிறப்பெடுத்த மாதிரி.. திஸ் ஈஸ் டூ மச்.
இதஜாவினர் வராவிட்டால் பெண்களுக்கு பாதுகாப்பு, பெண்கள் கூட்டம் அலைமோதும் என்றீரே இப்போது பாக்கரும் வரவில்லை அவருடைய ஆட்களும் வரவில்லை என்ற நிலையில் எப்போதும் ஆர்ப்பரிக்கும் பெண்கள் பகுதி வறண்டு காணப்பட்டதே ஏன்? பெண்கள் யாரை நம்பவில்லை என்று இப்போது புரிந்திருக்குமே!
இல்லாத அதிகாரி சொல்லாத 6 லட்சத்தை சொன்னதாக பழியை காவல்துறை மீது போட்டு மக்களுக்கு படங்காட்ட நினைத்தது. கும்பகோணம், வல்லம் பத்து லட்சம் எல்லாம் நானும் பாக்கரும் சும்மா அடிச்சிவிட்டது என்ற ஒப்புதல் ஓகே, அப்ப வல்லத்தில் அழுது காட்டினீர்களே அதுவும் அப்படித்தானா?
மக்கள் இலவச வாகனமும் சாப்பாடும் கொடுத்துத் தான் இதுவரை நடத்தப்பட்ட மாநில மாநாடு, பேரணிகளுக்கு அழைத்து வரப்பட்டார்கள் இதில் எந்த இயக்கமும் விதிவிலக்கல்ல எல்லோரும் அப்படித்தான் செய்கிறார்கள் நாங்களும் அப்படித்தான் செய்தோம் என்ற உண்மையையும் சேர்த்து சொல்ல மறந்தது ஏன்?
இந்த மாநாட்டின் உண்மையான நோக்கம் எதுவோ அதனடிப்படையிலேயே ஹாருன் எம்பியை பிடித்து பிரதமரையும், சோனியாவையும் பார்த்து விட்டு ஏதோ பிரதமர் இவர் கும்பலை ஸாரி கூட்டத்தை பார்த்து அழைத்ததாக செய்தி பரப்பி விட்டு அதிகாரபூர்வ அறிக்கையில் நாங்களாக தான் அப்பாயின்மெண்ட் வாங்கி போனோம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டது ஏன்?
ஆளுங்கட்சியின் தூதர் ஹாருன் எம்பி தன் கடமையை செய்து விட்டார் இனி வருகின்ற தேர்தலில் தங்களுக்கு கிடைத்த 10, 15 நிமிட அப்பாயிண்மெண்டின் பலனிற்காக காங்கிரஸ் கூட்டணிக்கு ஒட்டுப்போட ஏமாளி சமுதாயம் இப்போதே ரெடி.
அடுத்து எங்கவூரு மேட்டர்...
பாக்கர் நல்லவரா கெட்டவரா நாளை மறுமையில் தெரியப்போகின்றது ஆனால் பஸ்ஸில் அன்னிய பெண்ணோடு போனாலும் பாக்கர் நல்லவருதான்னு தீர்ப்ப மாத்தி சொன்னது எந்த நாட்டாம? இப்ப ததஜ பசங்கள ஏவி அதே விஷயத்திற்காக பொதுக்கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க தூண்டியது ஏன்? சஹாபுதீன், அப்துல் ரஹ்மான் என்ற 2 ததஜ முரீதுகள் பொதுமக்களா? உங்கள் பாணியில் இதே பதிலடியை நாளை இதே அதிரையில் இதஜகாரர்கள் நடத்திக் காட்ட மாட்டார்களா என்ன? இன்னொரு எஸ்பி பட்டிணம் நிகழ்ச்சியை அதிரை பொதுமக்கள் நடத்த ரொம்ப நேரமாகாது அப்பு. இதஜ மீட்டிங் எபக்ட் தான் அதிரையிலிருந்து ஒரே ஒரு பஸ் தீவுத்திடலுக்கு வந்தது. அடுத்த முறை அப்படி ஏதாவது நடந்த இந்த ஒரு பஸ்ஸூம் வராது ஆமா.
கேள்வி மேல் கேள்வி கேட்ட செங்கிஸ்கானை விட்டு விட்டு உம்மை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளாத பாக்கர் பின்னாடி பதில் சொல்ல முடியாமல் போய் ஒளிவதேன்? மூஞ்சிக்கு நேரா கேள்வி கேட்கனுமாம் அதிரையில் அடிச்சதே தீவுத்திடல்ல நெரி கட்டுதுன்னா மேட போட்டு மண்ணடியில கேட்டது, மதுரையில கேட்டது, டிவியில ஒளிபரப்பியது என்ன முதுகிற்கு பின்னாலயா? ஒரு மேடைய போட்டு பதில சொல்ற வழிய பாருங்க பாய் சும்மா மூஞ்சி மொகரன்னு காலத்த கடத்தாதீங்க. பாக்கர் கேட்காமல் விட்ட கேள்விய நான் கேட்கிறேன்...? ஸாரி, கேள்வி கேட்டாத்தான் இப்போ உங்களுக்கு புடிக்காதுல, மறந்துட்டேன்.
நேத்து வரை நாங்களும் ததஜவுல உங்களிடம் அரசியல் பாடம் படித்தவர்கள் தான் உங்களுடைய அடித்த மூவ் எப்படி இருக்கும்னு அனுமானிக்கிற நாங்க, அத எப்படி சமாளிக்கிறதுன்ன கூடவா தெரியாம இருப்போம். மத்திய, மாநில ஆளுங்கட்சிகளின் பலத்தை நம்புற நீங்களே இப்படின்ன அல்லாஹ்வின் பலத்த நம்புற நாங்க எப்படி திருப்பி கொடுப்போம்னு கொஞ்சம் குர்ஆன் ஹதீஸை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆத்திரத்துல நீங்க ஆட ஆட தான் உங்களோட சுயரூபமும் சேர்ந்து தெரியும், தெரியணும். இன்னும் இப்படியே உங்கள் எரிச்சல் விளையாட்ட தொடர்ந்தீங்கன்ன மெஸ்மரிஸம் செய்யப்பட்டுள்ள ததஜ முரீதுகள் கூட பீஜே ன்னு சொல்லமாட்டான், ப்பீ ச்சே ன்னு அசிங்கமா நினைத்து ஒதுங்கி போற நெலம வந்துரும் சொல்லிப்புட்டேன்.
அதிரையில் நடந்த இதஜ பொதுக்கூட்ட அதிர்வின் அலைகளை இன்று வரை உலகளலாவில் பரவச்செய்து கொண்டிருக்கும் தலைக்கும் தலைகால் புரியாத வால்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
அதிரை பொதுமக்கள் சார்பாகஅப்துல் வஹாப்.

எடுபடாத வாதங்கள் - எடுத்து வைக்கும் உண்மைகள்!

எடுபடாத வாதங்கள் என்ற தலைப்பில் பொய்ஜெ நம்மை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது நடுநிலையாளர்கள் மத்தியில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இவருக்கு நாம் பதில் கொடுப்பதை விட நடுநிலை பேணும் சகோதரர்கள் நல்ல பதில் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் அப்துல் காதர் என்ற சகோதரரின் கடிதம் இதோ....
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ!
அன்பு ததஜச் சகோதரர்களுக்கு!
வழக்கம் போல் உங்களின் குரு மாநாடு முடிந்ததும் வசை மாரி பொழிய ஆரம்பித்துள்ளார். அதற்கு நடுவில் குறிப்பிட்டுள்ள பல உண்மைகளை வழமைப் போல் உங்களைப் போன்றோர் கவனிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கை அவருக்கு பலமாக உண்டு. அவரால் குற்றஞ்சாட்டப்படும் நபர் அல்லது இயக்கம் குறித்து உங்களிடையே ஒரு வெறுப்புணர்வை விதைத்ததன் பின்னர் அவர் எடுத்து வைக்கும் வாதங்களில் அவரே (பொய்ஜே) முன்னின்று செய்தவைகளும் அடங்கும்.
ஆனாலும் ஒரு தனி நபர் அல்லது கூட்டத்தினர் மீது வெறுப்பு ஏற்படுத்தியதன் பின் அவர்களை நோக்கியே உங்களது கவனம் எல்லாம் திருப்பப்பட்டதனால், நிச்சயமாக அவரது பங்களிப்புப் பற்றி நீங்கள் ஒருவரும் கண், வாய் திறக்க மாட்டீர்கள் என்பது அவரது திடமான நம்பிக்கை. நீங்களனைவரும் இதுவரை அப்படித்தான் நடந்துக் கொண்டுள்ளீர்கள்.
எனவே, உங்களின் சிந்தனைக்கு 'எடுபடாத வாதங்களில்' ஒளிந்து கிடக்கும் உண்மைகளை இங்கே பட்டியலிடுகிறேன். ஏற்றுக் கொள்வதும், புறந்தள்ளுவதும் உங்களின் ஏகோபித்த உரிமை. உண்மையை எடுத்துக் கூறுவது மட்டுமே என் கடமை.
'இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் பல மாநாடுகளை நடத்தி விட்டோம். எனவே, மக்கள் செல்ல வேண்டாம் என PFI வீடு வீடாக பிரச்சாரம் செய்தனர்'
இது ஓர் அப்பட்டமான இட்டுக்கட்டப்பட்ட பொய் என்பதனை அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருசகோதரர் ஆணித்தரமாக TMB குழுமத்தில் தெரிவித்து விட்டார்.
ஒரு சகோதரனைப் பொய்யன் என்று நிறுவதற்காக, உங்கனைவரையும் தயார்படுத்தும் நோக்கில் எடுத்து வைக்கப்படும் முதல் அடியிலேயே மரண சறுக்கல். மற்றவனைப் பொய்யன் என்று தீர்ப்பு வழங்க பொய்ஜே எடுத்து வைக்கும் முதல் (சம்பந்தமில்லாத) செய்தியே பொய் எனில் பொய்யன் யார்?
'அந்நியப் பெண்ணுடன் தனியாக பயணம் செய்யலாம் என ஃபத்வா கொடுக்கும் கூட்டம்..'
ரதிமீனா பேருந்து பயணத்தில் தவறு நடக்கவில்லை அல்லது நடந்திருக்க வாய்ப்பும் இல்லை. எனவே அவரை மீண்டும் பொதுச்செயலாளராக்குவோம் எனப் பரிந்துரைத்தது யார்?
அதற்கு முன்னால் பேருந்து பயணத்தில் எப்படியெல்லாம் நிகழ்ந்திருக்கும் என ஊர் ஊராக நடித்துக் காட்டியது யார்?
அதற்குப் பின்னால், அவருக்கு (பாக்கருக்கு) பாவமீட்சி அளித்து அமிர்தசரஸ் குருத்துவார குருக்கள் போல, 'அவரை (பாக்கரை) இடை நிறுத்தம் செய்த பின்பும் 'தொடர்ந்து மர்க்கஸூக்கு வர்றாரு.. படியெல்லாம் கூட்டி சுத்தம் செய்றாரு' என்று சப்பைக்கட்டு கட்டி அதனால் அவரை மீண்டும் பொதுச் செயலாளராக்குவது பொருத்தமே எனபரிந்துரைத்தது யார்?
ஆக, அந்நியப் பெண்ணுடன் தனியான பயணம் தவறில்லை என தீர்ப்பளித்து தனது முந்தைய தீர்ப்பை மாற்றிச் சொன்ன பஞ்சாயத்துத் தலைவர் யார்?
இவ்வளவிற்கும் பிறகு ஏன் தனி மனிதனை மட்டும் சுட்டிக்காட்ட வேண்டும்? அச்சம்பவத்தில் தனக்குள்ள பங்கை மறைத்தது ஏன்?எனில் பொய்யன் யார்?

இதைவிட முக்கியமானதொரு விஷயம்..
'தீவுத்திடலை விட பல மடங்கு குறைவான இடம் கொண்ட கும்பகோணத்தில் பத்து லட்சம் பேர் கூடியதாக இதே பொய்யன் அடித்தொண்டையில் கூறியது...'
'மேலும் தீவுத்திடலை விட பல மடங்கு சிறிய இடம் கொண்ட வல்லத்தில் பத்து லட்சம் பேர் கூடியதாக பொய்யன் பாக்கர் கத்தியதும்...'
அன்புச் சகோதரர்களே!.. சற்று பின்னோக்கிச் சென்று சிந்தித்துப் பாருங்கள்..
இதே கும்பகோணம் மற்றும் வல்லம் மாநாடுகள் பற்றி பாக்கர் மட்டுமா பேசினார்? பொய்ஜே பேசவில்லையா? ஏன் நீங்களும் உங்களைப் போன்றோரும் வலைத்தளத்தில் எப்படியெல்லாம்அலப்பறை செய்தீர்கள்!
மாநாடு துவக்கத்திலேயே எண்ணிக்கையைத் துவக்கி இஷ்டம்போல 10 லட்சம், 20 லட்சம் என தத்தமது விருப்பம் போல் சமுதாய மக்களை ஏலம் விட்டுக் கொண்டிருந்தீர்களே..நினைவுக்கு வருகின்றதா? இறுதியில் 18 முதல் 20 லட்சம் என உறுதியாக நம்பினீர்களே.. அதையே பிரச்சாரமும் செய்தீர்களே.. ஒருவேளை 20 ஆயிரத்தைத்தான் இப்படிச்சொல்கிறார்களோ என்ற நியாயமான சந்தேகம் எழுப்பியவர்களை சமுதாய விரோதி என கூட்டம் கூடி கும்மியடித்தீர்களே.. நினைவுக்கு வருகின்றதா?
ஆனால் இன்றைய 'எடுபடாத வாதங்கள்' எடுத்தியம்பும் உண்மை என்ன?
1. கும்பகோணம் மற்றும் வல்லம் மாநாட்டு இடங்கள் மிகவும் சிறியவை.
2. இவைகளில் 10 லட்சம் பேர் கூட முடியாது.
3. எவன், எவர்கள் இவ்வாறு கூறினார்களோ அவர்கள் பொய்யர்கள்.
எனில் பொய்ஜே முதல் பொய்யர். இதனை எதிரொலித்து நேரிலும், போனிலும், வலைத்தளத்திலும், குழுமத்திலும் பேசியும் எழுதியும் வந்த அனைத்து ததஜ வினரும் பொய்யர்கள். நிலைமையைப் பார்த்தீர்களா. உடல், பொருள், நேரத்தை செலவிடும் உங்களைப் போன்ற தூய சமுதாய சிந்தனைக் கொண்ட அனைவருமே பொய்யர்கள் என எளிதாக பட்டம் சூட்டி விட்டார். அவரும் அதேதான் என ஒப்புக் கொண்டும் விட்டார்.
ஆனால் இது தன்னை மட்டுமே ஏகத்துவவாதியாக விசுவசிக்கும் தனது சீடர்களுக்கு கண்டிப்பாக புரியாது, எவரும் எம்மை நோக்கி கேள்வி கேட்க துணிய மாட்டார்கள், எனது (பொய்ஜே) வழிமுறைக்கு எதிராக எவர்கள் கேள்வி எழுப்புகிறார்களோ அவர்களுக்கு இம்மையில் நான் தரும் டார்ச்சர் எந்த அளவுக்கு என்பது ததஜ வினருக்குத் தெரியும் என்ற அபார நம்பிக்கை.
'இப்போது இவர்கள் காட்டும் நீள அகல கணக்குகள் தவ்ஹீது ஜமாஅத்திலிருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடு...'
அன்புச் சகோதரர்களே.. சற்று சிந்தித்துப் பாருங்கள்..
கும்பகோண மாநாட்டின் போது, அங்கு 5 லட்சம் பேர் கூட வாய்ப்பில்லை என எடுத்துச் சொல்லப்பட்ட போது கும்பகோண வரப்பு மேடுகளின் நீள அகலங்களை பட்டியலிட்டது யார்? நினைவுக்கு வரவில்லையெனில் அன்றைய தேதி உணர்வு பத்திரிக்கையை புரட்டிப் பாருங்கள்.
இப்பொழுது நீள அகல கணக்குகள் ஆத்திரத்தின் வெளிப்பாடு எனில், கும்பகோண நீள அகல கணக்குகள் யார் மீதுள்ள ஆத்திரத்தின் வெளிப்பாடு?
ஒருவன் பொய்யன் என்பதற்கு இந்த கணக்குகள் ஆதாரம் எனில், முதல் பொய்யன் பொய்ஜே அல்லவா? பத்திரிக்கையில் வெளியானதும் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்த (பொய்ஜேபாஷையில் வாந்தியெடுத்த) அனைத்து ததஜ வினரும் பொய்யர்கள் அல்லவா?
'திடலின் நீள அகலத்தை அளப்பவர் யாராக இருந்தாலும்... சமுதாயத்திற்கு துரோகம் செய்தவர்களே'
அப்படியானால் கும்பகோண விஷயத்தில் பொய்ஜே சமுதாயத்திற்கு துரோகம் இழைத்ததாக ஒப்புக் கொள்கிறாரா?
'தீவுத்திடலுக்குள் மக்கள் நிரம்பிய பின் இரண்டு கிலோ மீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலை முழுவதும் மக்கள் அடர்த்தியாக நின்றனர்'
இது ஒரு பச்சைப் பொய் என்பது குறைந்த பட்சம் சென்னைவாசிகளுக்குத் தெரியுமே என்ற வெட்க உணர்வின்றி எழுதப்பட்ட வாசகம்.
மற்றவர்களை பொய்யன் எனக் குறிப்பிடும் இக்கட்டுரையில் எத்தனை பொய்களை சர்வ சாதாரணமாக குறிப்பிட்டுள்ளார். சிந்திப்பீர்களா?
தீவுத்திடலுக்கு இருபுறம் உள்ள வாசல் வழியாகவும் வெளயேறினால் 3 வழிப்பாதைகள் தான் உண்டு. 4 வழிப்பாதைகள் அல்ல. அவற்றில் மக்கள் அடர்த்தியாக நின்றனர் எனில் போக்குவரத்து ஸ்தம்பித்திருக்க வேண்டும். அவ்வாறான படங்களோ, செய்திகளோ உண்டா?
'15 ஆயிரம் என்று சொல்லி 6 லட்சம் பேரை அழைத்து வந்து விட்டீர்கள்..' இதுவும் ஒரு பச்சைப் பொய்தான். 15 ஆயிரம் பேர் என்று காவல்துறையிடம் சொல்லி அனுமதி பெற்றிருந்தால்; ஏன் 15 லட்சம் என போஸ்டர், பேனர், ஸ்டிக்கர் அடிக்க வேண்டும்?
தீவுத்திடலின் கொள்ளளவே 1.5 லட்சம்தான். அதிலும் பல ஏரியாக்கள் காலியாக இருந்ததை மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் உறுதிப்படுத்தியிருக்கும் வேளையில், 6 லட்சம் எனப்பதிவு செய்வது ஏன்? பொய் சொல்வது ஏன்?
இதையே 15 லட்சம் என்றும் அதற்கு மேலும் என்றும் உங்களைப் போன்றோர் கூவித்திரிவது மிகப்பெரிய பொய் என்பதனை உணர்வீர்களா?
'தீவுத்திடல் அவ்வளவு சிறியதும் அல்ல. தீவுத்திடலைப் போல் 4 மடங்கு மக்கள் வெளியேஇருந்தனர்..' இது ஒரு முரண்பாட்டு வாக்கியம். முரண்பட்டுப் பேசுவது பொய்யன் என்பதற்கான ஆதாரம் - ஹதீஸ்.
'தீவுத்திடல் அவ்வளவு சிறியதும் அல்ல' அப்படியானால் பெரியது. 'தீவுத்திடலைப் போல் 4 மடங்கு மக்கள் வெயியே இருந்தனர்'
அப்படியானால் தீவுத்திடலுக்கு வெளியே 4 மடங்கு பெரிய இடம் இருந்திருக்க வேண்டும். இதனை ஏற்றுக் கொண்டால், தீவுத்திடலுக்குள் இருந்தவர்கள் 20 பேர் எனில் வெளியே இருந்தவர்கள் 80 பேர். இதன்படி தீவுத்திடலைச் சுற்றியுள்ள சாலை எங்கும்நடைபாதைகளில் மக்கள் அமர்ந்திருந்தாலும் மொத்தமாக 4 ஆயிரம் பேர் கூட இருக்க முடியாது. அப்படியானால் மொத்தக் கூட்டமே 5 ஆயிரம் பேர் தானா?
அதிர்ச்சி அளிக்கவில்லையா சகோதரர்களே?
'எடுபடாத வாதங்களில்' குறிப்பிட்டுள்ளதை உண்மை என ஒப்புக்கொண்டால், 5 ஆயிரம் பேர்தான் கலந்துக் கொண்டனர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனை நிராகரித்தால் 'எடுபடாத வாதங்களில்' குறிப்பிட்டுள்ளது அனைத்தும் பச்சைப்பொய் எனஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவ்வகையில் பொய்யன் யார்?
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படி உண்மைக்குப் புறம்பாக மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கையை காட்டி என்ன சாதிக்க முயற்சி செய்கிறீர்கள்? கூட்ட எண்ணிக்கையின் அடிப்படையில்தான் அந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிலைநாட்ட முடியும் என்றால், குர்ஆன் அதை மறுத்து பெரும்பான்மைக்கு மதிப்பில்லை என்கிறதே.
மேலும், மிக மிக சின்னஞ்சிறிய விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய சகோதரர்களோடு மஞ்சள் பைசகிதம் தவ்ஹீது பிரச்சாரத்தில் இன்று பொய்ஜே வாகிப்போன அன்றைய பீ. ஜைனுல் ஆபிதீன் உலவி மேடைகளில் முழங்கியபோது கூறியவை இன்னும் எமது காதுகளில் எதிரொலிக்கிறது..
கூட்டம் நமக்கு பெரிசில்லம்மா.. பத்ரு போரில் வெறும் 313 சஹாபாக்களுக்கு 10,000 பேர் கொண்ட எதிரிப்படையை வெல்லும் ஆற்றலை அல்லாஹ் கொடுத்தாம்மா.. என்றும், பெரும் கூட்டமாக உள்ளதினால் அவர்கள் சத்தியத்தின் பக்கம் நிற்கிறார்கள் என்பது அர்த்தமல்ல.. ஏனென்றால் பெரும்பான்மையான மக்கள் நிராகரிப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள். பள்ளிவாயில்களைவிட சினிமாக் கொட்டகைகளில்தான் அதிகம் கூட்டத்தினை பார்க்க முடியும் என்றும் மக்கள் எண்ணிக்கையை துச்சமாக மதித்த காலம் போய் இன்று தனது பொய் பிரச்சாரத்தினால் கூட்டப்படுகின்ற கூட்டத்தின் எண்ணிக்கையை கொஞ்சம் கூட கூச்ச உணர்வின்றி பன்மடங்காக்கி ஆரம்பம் முதல் கடைசி வரை அந்த பொய் கணக்கை நிலைநாட்டி வரும் காலம்தான் இது. போர் தந்திர உதாரணம் காட்டி அதை நியாயப்படுத்தவும் செய்வது அதைவிடக் கேவலம். ஏனென்றால் கண்காணாமல் இருக்கும் எதிரிப்படைக்குத்தான் நம் படையின் எண்ணிக்கையை பற்றி மிகைப்படுத்திக் கூறி அச்சமூட்ட முடியும். இன்றைய விஞ்ஞான உலகத்தில் இது சாத்தியமா? அதிலும் நம்மைச் சுற்றியுள்ள மக்களும், காவல்துறையும், உளவுத்துறையும், அரசும், ஊடகங்களும் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கும்போது யாரிடம் இந்த தந்திரம் வெல்லும்? சரியான நகைச்சுவை.
உண்மையில் சொல்லப்போனால், நம் சமுதாய அமைப்புகளின் கூட்டங்களுக்கு 50,000 பேரோ அல்லது 1 லட்சமோ மக்கள் கூடினாலே அது பெரிய கூட்டம்தான். இந்தக் கூட்டத்தை வைத்தும் நம்மால் நமது கோரிக்கைகளை வென்று எடுக்க முடியும். ஒரு கூட்டத்தில் கூடும் மக்களின் எண்ணிக்கையை அப்படியே வாக்குகளாக மாற்றி விட முடியாது என்ற அரசியல் சூட்சுமம் புரியதாவர்களா நமது அரசியல்வாதிகள்.
அன்பான சகோதரர்களே!
குறிப்பிட்ட சில விஷயங்களில் உள்ள முரண்பாடுகளை அவற்றை நிறுவதற்காக எடுத்தாளப்படும் பொய்யுரைகளை மட்டுமே இதில் குறிப்பிட்டுள்ளேன். தங்களின் வேலை பளுவிற்கு நடுவில் நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி. கண்மூடித்தனமாக ஒருவரைப் பின்பற்றுவதால் ஏற்படும் கையறு நிலை இது.
குர்ஆன் மற்றும் ஹதீஸில் போதிய ஞானமுள்ள சகோதரர்களாகிய நீங்கள் புரிந்துக் கொள்வீர்களென நம்புகிறேன். நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன். நாமும் அதற்காக முயற்சிப்போமாக.
வஸ்ஸலாம்.
அப்துல் காதர்

Saturday, July 10, 2010

பொய்ஜெயின் கடைந்தெடுத்த பொய்களுக்கான பதில்கள்!

கீழ்காணும் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.
http://www.intjonline.in/video-common
கண்ணியமிக்க திருக்குர்ஆன் கூறுகிறது: (24 அத்தியாயம் சூரத்துன் நூர்)
24:4 எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
24:6 எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:
24:7 ஐந்தாவது முறை, '(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாகஅல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்' என்றும் (அவன் கூற வேண்டும்).
24:8 இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க,'நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி:
24:9 ஐந்தாவது முறை, 'அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).

24:11 எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும்.(பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை)இருக்கிறது. மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக்கடினமான வேதனையுண்டு.
24:12 முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக்கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு,'இது பகிரங்கமான வீண் பழியேயாகும்' என்று கூறியிருக்க வேண்டாமா?
24:13 அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே, அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில்பொய்யர்களாக இருக்கிறார்கள்.
24:14 இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச்சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.
24:15 இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க்கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித்திரிகின்றீர்கள். இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்
.
24:16 இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, 'இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த்தகுதி) இல்லை. (நாயனே!) நீயே தூயவன். இது பெரும் பழியாகும்' என்று நீங்கள்கூறியிருக்கலாகாதா?
24:17 நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின்பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.
24:23 எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.

மக்கள் மன்றம் (மேடை ஏற துணிவுண்டா..?)

பொதுவாக ஒரு பொய்யை திரும்ப திரும்ப மக்கள் மத்தியில் பரப்பும்போது, அதை நம்புவது மக்களின் இயல்பு. இந்த கலையை தனது தற்காப்புக் கலையாக கொண்டு அன்று முதல் இன்று வரை வெற்றிகரமாக இயங்கிவரும் அந்த அவதூறு மன்னன் சமீபத்தில் ஒரு அறைகூவல் விடுத்துள்ளார்.
தங்களைப் பற்றி விமர்சனம் செய்தால் அந்த மேடையில் ஏறி நிரூபிக்க சொல்வோம். மாறாக இனி இணையதளம் பயன்படுத்தப்படாது என்று.
அவமானத்தாலும், மக்களிடம் தனக்கு செல்வாக்கு சரிந்ததை கண்டும் குபீரென்று ரோஷம் பொங்கிவரும் இவருக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறோம். முதலில் இதஜ நிர்வாகிகள் மீது சுமத்திய புளுகு மூட்டைகளை தகுந்த சான்றுகளை கொண்டு இஸ்லாத்தின் அடிப்படையில் நிரூபியுங்கள். பிறகு மேடை ஏறுங்கள்.
மேடை ஏறுமுன் உங்களின் மந்த புத்தியால் வழங்கப்பட்ட டவுசர் போட்டு தொழலாம் என்பது உள்ளிட்ட சில பத்வாக்களை விமர்சித்து சவால்விட்ட ஒரு அறிஞரின் சவாலை ஏற்க துப்பில்லாமல் காவல்துறை நாடி, உங்களின் பலத்தை பயன்படுத்தி அந்த அறிஞரின் நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தீர்களே! அந்த மாதிரி இல்லாமல் ரோஷம் வந்த வேகத்திலேயே நேரடியாக மேடை ஏற துணிவுண்டா..?
நீங்கள் செய்யும் உள்குத்து வேலை எல்லாம் உங்களின் ரசிகர்களுக்கு தெரியாமல் இருப்பதுதான் உங்களின் பலம். உங்களின் கிரிமினல் வேலைகளை பார்த்தவர் வந்து சொன்னாலும், சொன்னவர் மீதே பழிபோடும் உங்கள் விவகாரத்திற்கு படைத்தவன்தான் பாடம் புகட்டவேண்டும். எதிலும் தூய்மை இல்லை என்று அவ்வப்போது நிரூபித்து வரும் நீங்கள் இனி எதிராளிகளுக்கு எதிராக பயன்படுத்த மாட்டோம் என்று சொன்னதிலாவது தூய்மையையும், வாய்மையையும் கட்ட முயற்ச்சி செய்யுங்கள்.
-அபூஸனா.
குவைத்.

அவதூறு ஜமாஅத்தின் லேட்டஸ்ட் அவதூறு

அஸ்ஸலாமு அலைக்கும்...
பெரிய விஷயத்தை சிறிதாக்கிக் காட்டுவதும், சிறிய விஷயத்தை ஊதிக் காட்டுவதும் எப்போதும் அண்ணன் செய்யும் வாடிக்கையான வேலை தான். வெளியேற்றப்பட்டவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் களம் கண்டதும், அந்த இயக்கத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பையும் கண்டு முழி பிதுங்கிப் போயிருக்கிறார்.
ஒரு தலைவரை அதிகாரப்பூர்வமாக மாற்றி சேலத்திற்கும், இன்னொரு தலைவரை அன்-அபிஷியலாக திருச்சிக்கு அனுப்பிய பிறகும் வீரியம் பெறாததால் மாநாட்டு அஸ்திரத்தை கையிலெடுத்தார்.
வீரியம் பெறாததால் என்று குறிப்பிட்ட காரணத்தால் தனி நபர் ஜமாஅத்தினரே கோபம் கொள்ளாதீர்கள். தற்போதைய தலைவர் பதவி விலகுவதாக கூறியபோது இப்படி சொன்னதாக மேலாண்மைக் குழு தலைவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுவரை நடத்திய மாநாடுகளின் போது செலவழித்ததை
விட அதிக தொகைகளை விளம்பரத்திற்காக செலவழித்த பின்பும், பிரபல டிவிக்களில் தொடர்ந்து விளம்பரம் செய்த பின்பும் வந்த கூட்டம் என்னவோ வல்லம் மற்றும் கும்பகோணத்தில் நடத்தப்பட்ட மாநாடுகளில் கலந்து கொண்டதை விட குறைவுதான்.
தனி நபர் ஜமாஅத் தலைவர் இயக்கங்களை உடைப்பதும், உடைத்த பின் மாநாடு நடத்துவதும், மாநாடு முடித்த பின் வெற்றி.. வெற்றி, மக்கள் என் பக்கம் என்று மார்தட்டுவதும் தமிழகம் ஏற்கனவே சந்தித்த நிகழ்வுகள்.
ஆனால் இந்த மாநாட்டின் தோல்வி அவர்களை சித்தம் கலங்க வைத்திருப்பது மட்டுமல்லாமல் கூட்டம் வராததற்கு காரணம் இவர்களின் குறைபாடுகள் என்பதை உணராமல் அடுத்தவர்கள் மீது பாய்ந்து பிறாண்டுகிறார்கள்.
முதல் அவதூறு :
மாநாட்டிற்கு யாரும் போதீர்கள் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர் சொன்னார்களாம்.அடுத்தவர்கள் நடத்தும் மாநாட்டிற்கு போகாதீர்கள் என்று பிரச்சாரம் செய்வது தனி நபர் ஜமாஅத் செய்யும் வேலை. பீஸ் மாநாட்டிற்கு யாரும் போகாதீர்கள் என பேசியவர்கள் யார் என மக்கள் அறிவார்கள். எங்கேயும், எப்போதும் மாநாட்டிற்குப் போகாதீர்கள் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர் யாரும் பேசவில்லை.
பொய்களைச் சொல்லி மாநாடு நடத்தாதீர்கள் என்று தான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர் சொன்னார்கள். மாநாட்டைக் காட்டி தனி நபர் ஜமாஅத்தினர் கட்டவிழ்த்து விட்ட பொய்களைத் தான் மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டிக் காட்டினார்கள்.
பொதுப் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தும் போது கலந்து கொண்டவர்களை குறைத்துச் சொல்வது துரோகம் என்று இப்போது சொல்லும் இவர்கள், டிசம்பர் 6 போராட்டத்தின் போது காவல் துறையினரால் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினரின் எண்ணிக்கையை குறைத்துப் பேசியது யார்? பள்ளிக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தது கூட தெரியாமல், மண்டபத்தின் சதுர அடி எவ்வளவு? எத்தனை பேர் உட்காரலாம்? என்று நீட்டி, முழக்கி கேள்விகள் எழுப்பி மேதாவித் தனத்தை காட்டினார்கள் அல்லவா?
அந்த கேள்வி விதைகள் தான் இப்போது விருட்சமாக அவர்களை நோக்கித் திரும்புகிறது. தீவுத் திடலின் பரப்பளவு எவ்வளவு? எத்தனை பேர் உட்கார முடியும்? எத்தனை பேர் நிற்க முடியும்? என்று கேள்விகளை கிளப்பியுள்ளது.
எய்த அம்புகள் பூமராங் போல திரும்பியவுடன் குத்துது, குடையுது என்று எகிறிக் குதிக்கிறார்கள்.மாநாட்டுக் கூட்டத்தை வைத்து பில்டப் செய் நினைத்து முடியாமல் போனதால், பிரதமர் சந்திப்பை பூஸ்ட் செய்து ஈடுகட்ட நினைத்தார்கள்.
அடுத்த பில்டப் ஸ்டார்ட் ஆனது. கூட்டத்தைக் கண்டு பிரதமர் அழைத்தார் என்று எஸ்.எம்.எஸ்.கள் பறக்க விட்டவர்களை நோக்கி சின்ன கேள்விதான் கேட்கப்பட்டது. அழைத்தது பிரதமரா? கடிதம் கொடுத்து நேரம் வாங்கி சந்தித்தீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
ஆப்பு அசைத்த குரங்கு போல வகையாக மாட்டியவுடன் ஆமாம் ஹாரூண் மூலம் கடிதம் கொடுத்து சந்தித்ததாக முணுமுணுப்புடன் இப்போது ஒத்துக் கொள்கிறார்கள்.மாநாடு, பிரதமர் சந்திப்பு ஆகிய இரண்டு விஷயத்திலும் பில்டப் செய்ய முயன்று தோற்றவர்கள், இரண்டாவது அவதூறை இந்திய தவ்ஹீத்தினர் மீது வீசியிருக்கிறார்கள்.
நானும் எனது மனைவியும் இவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டோமாம். மாநாட்டுப் பந்தலில் நான் உட்கார்ந்து இருந்திருந்தால் சுற்றி வளைத்து வீடியோ எடுத்து அண்ணனுக்கு அடுத்தபடியாக என் முகத்தை அல்லவா அதிகளவு போட்டுக் காட்டியிருப்பார்கள். (வல்லம் மாநாட்டு ஒளிபரப்பில் விஞ்ஞானி ஜலீலை காட்டியதைப் போல) மாநாட்டுக்கு வந்திருந்த என்னுடைய உறவினரின் மகள் (திருமணம் தடை செய்யப்பட்ட உறவு) வீட்டுக்கு அழைத்துப் போகுமாறு போன் மூலம் தெரிவித்ததால் தீவுத் திடல் வாசலில் நின்றிருந்த அவரை அழைத்து வந்தேன்.
உண்மை நிலவரம் இப்படி இருக்க, இக்பால் மாநாட்டில் கலந்து கொண்டதாக பில்டப் காட்டுகிறார்கள். இதில் மனைவியோடு கலந்து கொண்டதாக கற்பனை கலந்த பில்டப் வேறு.ஜெயலலிதாவும், கருணாநிதியும் அந்தப் பக்கமாக காரில் போயிருந்தால் மாநாட்டிற்கு தான் வந்தார்கள் என்று சொல்லித் தீர்த்திருப்பார்கள்.
தனி நபர் ஜமாஅத் சகோதரர்களே!
உழைப்பின் மூலமும், தியாகத்தின் மூலமும், இறையச்சத்தின் மூலமும் வளர முயற்சி செய்யுங்கள். பொய்கள் மூலமாகவும், பில்டப்புகள் மூலமாகவும் மற்றும் அடுத்தவர்கள் மீது அவதூறு சொல்லி இயக்கத்தை வளர்ப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.
இப்படிக்கு
(எஸ்.எம். சையது இக்பால்)

!மக்கள் மன்றம் (அன்புள்ள அண்ணனுக்கு...)


அன்புள்ள அண்ணனுக்கு....
தாங்கள் எந்த பதவியில் இல்லாவிட்டாலும்,
CM அழைத்தால் போவீர்கள்! !PM அழைத்தால் போவீர்கள்! !மேடம் அழைத்தால் போவீர்கள்! ! ரியல் தலைவரை ஓரம் கட்டிவிட்டு ஓடோடி போகிறீர்கள்...அண்ணே!
ஆனால் முஸ்லிம் என்ற பதவி உள்ளவன்அனு தினமும் ஐவேளை "ஹய்யா அலல் ஸலாஹ்" என அல்லாஹ்வின் இல்லத்தில் இருந்து அழைப்பு வந்தால் போக வேண்டும் அண்ணே...
உங்க வீட்டுக்கு அருகில் இருக்கும் தலைமையக தொழுகைப் பள்ளியிலிருந்து வந்தால்கூட.. போக வேண்டும் அண்ணே...
ஆனால் தாங்கள் மட்டும் தொழ போக மாட்டேன் என்கிறீர்கள்.....!? என் அண்ணே...
மண்ணடியில் இருந்து தொழ போகாத நீங்கள் நாளை அல்லாஹ் அழைத்தால்..... என்ன செய்வீர்கள் அண்ணே
...!?
இப்படிக்கு அன்பு தம்பி அபூ நபீலா.

Thursday, July 8, 2010

IMAIYAM TVல் பி ஜெ சொன்னதுக்கு பி ஜெ சொன்ன முரண்பாடு!














அவர் தலைவர் மாதிரி.......(

ஆஹா..சூப்பர்ப்பா ..
அரசியல் சாணக்கியன் கலைஞரை ... மி (வி)ஞ்சிய அண்ணன் பீ.ஜே...
"நான் தர்காவாதிதான்" இருந்தாலும் சமுதாய மக்களுக்காக இந்த மாநாட்டிற்கு வந்துள்ளேன் என்று அறிவித்த பெரியகுளம் ஜே .எம்.ஆரூண் எம்.பி. யின் தயவால் டெல்லி சென்றுள்ள பீ.ஜே..ஜே .எம்.ஆரூண் எம்.பியுடன் நடத்திய டீல் என்னவோ ..?
டீலா? நோ டீலா?
இன்ஷா அல்லாஹ் .. வெட்ட வெளிச்சம் ஆகும்..!
சரிங்க..பிரதமர் ,சோனியாவை பார்க்க சென்ற டீமில் மாநில தலைவர் தம்பி அல்தாஃபி இல்லயோ....? அய்யோ பாவம்...என்ன செய்ய... அவர் இருக்க வேண்டியதுதான்.
சரி..சரி.. அவர் தலைவர் இல்லை தலைவர் மாதிரி..
-இறை நேசன்

அதிரை கூட்டமும் - அதிர்ந்த பொய்யர்களும்

அதிராம்பட்டினத்தில் நாம் பேசிய பொதுக் கூட்டத்தில் திரளான மக்களை பார்த்து அதிர்ந்து போன பொய்யர்கள் கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க முயன்று, தோற்று அதிரை மக்களிடம் செருப்படி வாங்காத குறையாக விரட்டியடிக்கப்பட்ட உண்மையை மறைத்து, எப்படி இப்படியெல்லாம் பொய் புளுக முடிகிறது.
அதிரையில் நாம் பெண்களை மாநாட்டுக்கு போக வேண்டாம் என்று கூறினோமாம்! மக்கள் மைக் பிடித்து கேள்வி கேட்டார்களாம். துண்டுச் சீட்டெழுதி கேள்வி கேட்பவரிடம் இது கேள்வி - பதில் நிகழ்ச்சி அல்ல! பஸ்ஸில் தனியாக பெண்ணோடு பயணம் செய்யலாமா? என்று நீங்கள் எழுதிக் கேட்பது போல் நாங்களும் உங்கள் கூட்டங்களுக்கு வந்து தொழுகை இல்லாத பீஜே தலைமை தாங்கலாமா? எனக் கேட்டால் என்னாகும் என்று கூறியதும் அருகில் நின்ற சகோதரர்கள் அவரை அப்புறப்படுத்தினர். இதற்கு நூற்றுக் கணக்கான அதிரை மக்கள் சாட்சி இருக்கும்போதே இப்படி பொய் சொல்பவர்கள் எதையும் சொல்வார்கள் எனப் புரிகிறது. இதற்கு அதிரை மக்களின் மொபைல் நம்பர் தருகிறோம். (சர்புதீன் - 9944450965, அப்துர் ரஹ்மான் - 9788204696, தய்யிப் - 9952131334,  சுஹைப் - 9629017305, சம்சுதுன் - 94438629950)

ஒடுக்கப்பட்டோர் மாநாடும் - ஒளிக்கப்பட்ட உண்மைகளும்!

கடந்த காலங்களில் குடந்தை குலுங்கியது, தஞ்சை திணறியது. ஆனால் தற்போது தீவுடத்திடல் திணறவும் இல்லை, சென்னை சிணுங்கக் கூடவுமில்லை என்பதுதான் உண்மை!
கடந்த காலங்களில் கும்பகோணத்துக்குள்ளேயும், தஞ்சைக்குள்ளும் நுழைய முடியாமல் வாகனங்கள் திணறிய நிலை காணப்படவில்லை. பிரதான சாலைகளில் மக்கள் கடைசி வரை ஃப்ரீயாக சென்றதைக் காண முடிந்தது. சென்னையில் சின்ன டிராஃபிக் ஜாம் கூட ஏற்படவில்லை.
பல்லவன் இல்லத்தில் தொடங்கிய பேரணி(?!) அரைமணி நேரத்தில் முடிந்து போனது. 600க்கும் குறைவான வாகனத்தில் வந்தவர்கள், 18,000 பேர் என்றால் அண்ணன் கணக்குப்படி மீதி 148200 பேர் சென்ûனையச் சேர்ந்தவர்களா? சென்னையில் அத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்களா?
உணர்வில் போட்ட மண்டபம், மர்க்கஸ் உள்ளிட்ட 69 இடங்களில் 15 லட்சம் பேரும் காலைக்கடன் முடித்த அதிசயமும் நிகழ்ந்ததேறியது.
கமல் மனைவி சரிகா படத்தைப் போட்டும், வடிவேலு காமெடிக்கிடையில் விளம்பரம் செய்தும், கோடிக்கணக்கில் செலவழித்து அனைத்து தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தும், வல்லத்தில் பாதி கூட கூட்ட முடியாததன் அவலத்தை பேட்டி கொடுத்த அண்ணன் முகத்தில் காண முடிந்தது. ஆனாலும் கொஞ்சமும் கூச்சமின்றி, இறையச்சமுமின்றி 15 லட்சம் பேர் நாங்கள் கூடியிருக்கிறோம் என்று நா கூசாமல் பொய் சொல்ல அண்ணனால் மட்டுமே முடியும்.
உள்ளே மேடையில் உள்ளவர்கள் அதையும் தாண்டி 22 லட்சம் பேர் வந்துள்ளதாக கூறியதுதான் ஹைலைட் காமெடி. வல்லத்தில் வந்த பஸ் எண்ணிக்கையில் கால்வாசி கூட பல ஊர்களில் புறப்படவில்லை. பின் எங்கிருந்து வருவார்கள் 22 லட்சம் பேர்!
கலைஞரே வியக்கும் அளவுக்கு இவர்களின் பொய் இருக்கிறது. ஒரு ஆண்டு முழுவதும், ஒரு அரசு தான் மொத்த இயந்திரத்தையும் முடுக்கிவிட்டு, உலகம் முழுவதும் இருந்து தமிழர்களை வரவழைத்து, பள்ளி கல்லூரிகளுக்கெல்லாம் 5 நாள் அரசு விடுமுறை அளித்து, வாகன வசதி செய்து கொடுத்து, 400 கோடி செலவழித்து, 4.75 லட்சம் சதுர அடி பந்தலில் 60 ஆயிரம் பேரை கூட்ட முடியவில்லை. 5 நாள் மாநாட்டில் மொத்தம் கலந்து கொண்டவர்கள் 5 லட்சத்தைத் தாண்டவில்லை என உளவுத்துறை சொல்கிறது! ஆனால் பீஜேவிடம் ஜூலை-4ல் 6லட்சம் மக்கள் கூடியதாக உளவுத்துறை சொன்னதாம்!
மாநாட்டின் தோல்வி அவரை விரக்தியில் தள்ளி இருக்கிறது. சகோதரர்களே! தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்! தோல்வியை மூடி மறைத்தால் அது பின்னாளில் மிகப் பெரும் தோல்விக்கு வழிவகுக்கும்!
பாக்கரைப் பிரிந்ததால் பலம் குன்றிவிடவில்லை என்பதைக் காண்பிப்பதற்கு இத்தனை கோடி செலவா? அதற்கு இத்தனை பொய்களா?
சென்னை மண்ணடியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த மாநாட்டிற்கு வருவத்றகு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என சொன்ன பாக்கரை தரம் தாழ்ந்து விமர்சித்தீர்கள். அந்த பாக்கர் குறித்து 2 வருடத்திற்கு முன்பு என்ன சொன்னீர்கள். அந்த நற்சான்றிதழ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


செங்கிஸ்கான்.






















எடுபடாத வாதங்களும் - எதிர்வாதங்களும்!

சென்னை மாநாடு முடிந்ததும் அண்ணன் இணைய தளத்தில் ஆக்ரோஷத்தோடு நம் மீது பாய்ந்திருக்கிறார். எந்த அளவுக்கென்றால் மற்ற அனைவரையும் விட நாம் தான் மிக மோசமானவர்கள், தமுமுகவை விட ஆயிரம் மடங்கு மோசமானவர்கள் என்கின்ற அளவுக்கு ஆத்திரம் கொண்டு, நம் மீது அள்ளி எறிந்திருக்கிறார். அந்த எடுபடாத வாதங்களுக்கு நாம் சில எதிர்வாதங்களை முன் வைக்கிறோம்.
1. மாநாட்டுக்கு பெண்கள் போகக் கூடாது என எங்கே பாக்கர் பேசினார் என்று பொய்ஜெ ஆதாரத்துடன் கூற வேண்டும்.
2. அன்னியப் பெண்ணுடன் தனியாகப் பயணம் செய்தால் குர்ஆன் ஹதீஸ்படி ஒருவரை தண்டிக்க முடியாது என பத்வா கொடுத்தது யார்? இதற்காக கடலூரில் முபாஹலா செய்தது யார்? அப்படிப்பட்ட ஒருவரை பரிசுத்தமான இயக்கத்தின் பொதுச் செயலாளர் பதவியில் அமர்த்தியது ஏன்? இப்போது அதை திரும்பத் திரும்ப பேசுவதேன்? பாக்கரை பேச வேறு எதுவும் இல்லாததாலா? என்று கேட்போருக்கு பொய்ஜெ பதிலளிக்க வேண்டும்.
3. அதிராம்பாட்டினத்தில் மக்கள் மைக் பிடித்து கேள்வி கேட்பதாக நேரில் பார்த்ததை போல் கூறும் பொய்யர் ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும்.
4. தேர்தல் நேரம் என்ற வாதம் சரி என்றால் தேர்தல் நடக்க இருப்பது சட்டசபைக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கை நாடாளுமன்றத்தினால் செயல்படுத்த வேண்டியது என்பதை மறந்து விட்டு கலைஞர் கையில் உள்ள சிறைவாசிகள் விடுதலை பற்றிய கோரிக்கைû விட்டுவிட்டு மத்திய அரசு சட்டசபை தேர்தல் நேரத்தில் நிர்ப்பந்திக்க வேண்டிய அவசியம் என்ன?
5. டிசம்பர்-6ல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கைதுசெய்யப்பட்டபோது "நீள அகலம் பற்றி பேசி தலையை எண்ணும் வேலையை'' செய்தது யார்? இந்தச் செயல் கேவலம் என அப்போது புரியவில்லையா?
6. மிகைப்படுத்திக் கூறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது! போராட்டத்தில் சொல்லாம் என கூறுவது உண்மையானால் டிசம்பர்-6 அன்று ஆயிரக்கணக்கானோர் எனக் கூறியதாக மட்டும் எப்படி பொய்யாகும். வெறும் 30,000 என்ற உளவுத்துறை கணக்கை மேடையில் 22 லட்சம் என ஜூலை 4ல் சொல்வது மட்டும் சரியாகுமா?
7. கடற்கரை வரை நாலா பக்கமும் பதுங்கி நின்றது என்றால் சென்னையில் ஏன் கும்பகோணத்தைப் போல், தஞ்சையைப் போல் ஒரு சிறு போக்குவரத்து நெரிசல் கூட ஏற்படவில்லை?
8.சமுதாயத்தின் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக போராட்டம் நடத்துவோரின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவோர் துரோகிகள் என்றால் வீடியோவை ஓட விட்டு தலையை எண்ணி விடலாம் என டிசம்பர் -6ல் இதஜ தொண்டர்கள் கைதாகி உள்ளே இருந்தபோது சொன்ன நீங்கள் மாபெரும் துரோகிதானே?
9. வசூலுக்காக மாநாடு நடக்கவில்லை என்றால் இந்த மாநாட்டிற்கான மொத்த வரவு செலவை முஸ்லிம்களின் பார்வைக்க வைக்கத் தயாரா? (ஏனென்றால் இதஜ சகோதரர்களும், பொதுவான முஸ்லிம்களும் பணம் கொடுத்துள்ளனர்)
10. இதஜ, எஸ்டிபி, தமுமுக, காஸிமி, ஜமாலி போன்றோரின் வாதம் எடுபடவில்லை என்றால் வல்லத்தை விட கூட்டம் குறைந்ததேன்? ஒவ்வோர் ஊரிலும் (நீங்களே வாகனத்தை கணக்கெடுங்கள்! வல்லம் மாநாட்டு வாகனக் கணக்கை நாங்களும் வைக்கிறோம்)
11. பொய்யன் கூட்டத்தினர் முன்னூறு பேர் கூட இல்லை என்று கூறும் நீங்கள் கணக்கெடுத்தீர்களா? முன்னூறு பேர் கொண்ட கூட்டம் வெற்றி பெற முடியாதா? நீங்கள் இயக்கம் துவங்கிய போது முந்நூறு பேர் இருந்தனரா? சிறிய கூட்டம் வெற்றி பெறும் என்று கூறியதெல்லாம் பொய்யா? இப்போது கூட்டம் பற்றியும், எண்ணிக்கை பற்றியும் கூறும் நீங்கள் எத்தனையோ பெரிய கூட்டங்கள் தோல்வியுற்றுள்ளன என்று இஸ்லாமிய அடிப்படையை மறந்து விட்டீர்களா?
12. பொறுப்பில் இல்லை என பொய் சொல்லும் நீங்கள், பொறுப்பிலுள்ள தலைவர் அல்தாஃபியை ஓரங்கட்டிவிட்டு புதுடெல்லி சென்று மன்மோகன் சிங்கை சந்திப்பதும், ?? அமைச்சர் இருக்கை தரப்பட்டது எனக் கூறுவதும் உங்களது உள் மன ஆசையை வெளிப்படுத்துவதாக இல்லையா?
13. வல்லம் மாநாட்டு திடல் அளவு தீவுத் திடலைவிட பல மடங்கு சிறியது எனக் கூறுகின்றீர்களே! 100 ஏக்கர் வல்லம் மாநாட்டுத் திடல் 64 ஏக்கர் தீவுத் திடலை (மிலிட்டரி கிரவுண்ட், கிளப், தமிழ்நாடு ஓட்டல் உள்பட) விட பல மடங்கு சிறியதாக இருக்கும்? மாநாட்டு தோல்வியில் மறை கழன்று விட்டதா!
14. பெண்கள் கூடும் மாநாடுகளுக்கு இவர்களை அழைக்காமல் இருப்பது நல்லது என்று கொச்சைப்படுத்துவது கேவலமாக இல்லையா? இதற்கு முன் நீங்கள் நடத்திய மாநாடுகளில் எல்லாம் இப்படி எதுவும் நடந்ததா? பொது மக்கள் மத்தியில் நடந்ததா? பொறுப்பில் உள்ள உங்கள் குடும்பத்தாருக்கு நிகழ்ந்ததா? நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டீர்களா? மாநாட்டிற்கு வந்த மற்ற உங்கள் சகாக்கள் மற்றும் உங்கள் மீதும் இது போன்ற குற்றச்சாட்டு உள்ளதே!
பெண்களை மட்டும் பாதுகாத்தால் போதுமா? கடையநல்லூர் மாணவர்களை சைபுல்லாஹ்விடமிருந்து காத்தது போல் மாநாட்டுக்கு வரும் மாணவர்களை காக்கும் பொறுப்பில்லையா?
15. உங்கள் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். உங்களுக்காக உயிரை எடுக்க ஒரு கூட்டம் இருந்தது அது இப்போது "உள்ளே இருக்கிறது'' உங்களுக்காக உயிரை கொடுக்க ஒரு கூட்டம் இருந்தது அது இப்போது "வெளியே இருக்கிறது'' உங்களோடு இப்போது இருப்பதெல்லாம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்.
உங்களது எந்த நடவடிக்கைக்கும் உங்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறோம்! இன்ஷா அல்லாஹ் இதுவரை தொடாத பல்வேறு அஸ்திரங்களோடு இது தொடரும். உங்களது உண்மை முகத்தை உலகிற்கு வெளிச்சம் போடும் வேலை தொடரும்!
-செங்கிஸ்கான்.

அண்ணன் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம்!

அண்ணன் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம்!
-->
கடந்த காலங்களில் நாங்கள் எந்த அரசியல்வாதியையும் சந்திக்க மாட்டோம்! நீங்கள் இடஒதுக்கீட்டை அறிவித்தால் நாங்கள் எங்கள் உயிரைக் கொடுத்து(?) வேலை செய்து உங்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்வோம்! வெறும் சந்திப்பு தேவையில்லை "கையில காசு வாயில தோசை'' ஆர்டர் போடுங்க - ஆதரவு தருகிறோம் என்றெல்லாம் கூறியவர், தற்போது எந்த வாக்குறுதியும் தராமல் பிரதமரை ஓடோடிச் சென்று மாநாடு முடிந்த மறுநாளே சந்தித்து இருப்பது அவருக்கு ஏற்பட்டிருக்கும் தடுமாற்றத்தையே எடுத்துக் காட்டுகிறது.
மாநாட்டின் தோல்விக்கு மன்மோகன் சிங்கிடம் மருந்து தேடுகிறார் பாவம்! மேலும் பிரதமரைச் சந்தித்தது, பெரிய சாதனை போல் அவர்களால் பரப்பப்படுகிறது. பிரதமரை இதற்கு முன் தமிழகத்தில் தமுமுக தலைவர்களும், ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்களும், தேசிய லீக் தலைவரும் எந்த மாநாடும் நடத்தாமலேயே ஜே.எம். ஹாரூண் எம்.பி. மூலம் மிக சுலபமாக சந்தித்திருக்கின்றனர். ஆனால் பிரதமரே தங்களை அழைத்தார் என்று "பில்டப்' யாரும் கொடுக்கவில்லை. இது இவர்களது தரத்தையும், நிறத்தையும் எடுத்துக் காட்டுகிறது!
-செங்கிஸ்கான்.

Tuesday, July 6, 2010

ஒடுக்கபட்டோரின் உரிமை மாநாடும் ! ஒழிக்கப்பட்ட உண்மைகளும் (PDF)

ஒடுக்கபட்டோரின் உரிமை மாநாடும் ! ஒழிக்கப்பட்ட உண்மைகளும் (PDF)
டவுன்லோட் செய்ய

பொய்யனுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் !
கடந்த 2- 07-2010 அதிராம்பட்டினம் தக்வாபள்ளி அருகே இந்திய தௌஹீத் ஜமாஅத் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நாமும் கலந்து கொண்டோம் .
கூட்டம் சிறப்பாக நடை பெற்றது.
அனைத்து ஜமாஅத்தை சேர்ந்தவர்களும் (டி .என். டி .ஜே தவிர )
தங்களின் அமைப்பு நடத்தும் பொதுக்கூட்டம் போல் திரளாக கலந்து கொண்டது ,
சமுதாய ஒற்றுமையை வெளிகாட்டியது .
இந்த ஒற்றுமையைவிரும்பாத டி .என் .டி .ஜே .
ஆபாசத்தை மற்றுமே எழுதி அதை உண்மை என தம்மை நம்பும் கூட்டத்தை
நம்பவைக்கவும் ,தங்களின் ரசிகர்களை திருப்திபடுத்த ,எங்கே வளர்ந்து
விடுவார்களோ ?என்ற பொறமை,பொச்சரிப் பை பொய்களால் தமது வலை தளங்களில் நிரப்பி உள்ளது .
செங்கிஸ் கான் உரை நிகழ்த்தும் போது ,இருவர் துண்டு சீட்டை கொடுத்தனர் .
அதன் பிறகு பாக்கர் "பஸ்சில் அந்நிய பெண்ணுடன் போனாரே ?என்று கேட்டனர் .
இது தான் நடந்தது .

இதனை பொது மக்கள் மைக் பிடித்து பேசினார்கள் என்பது தார்பாயில்
வடிகட்டிய பொய்யாகும் .
கூட்டம் நடந்தபோது எடுத்த வீடியோ காட்சிகளை பார்ப்பவர்கள்
உண்மையை அறிய முடியும்.
அடுத்தது ;
ஒவ்வொரு மேடையிலும் இது போன்றே நடக்கும் .என எழுதி உள்ளான் .
நாம் கேட்பது
பீஜே பேசும் ஒவ்வொரு மேடைகளிலும் ,
"தொழுகை இல்லாத பீஜே மார்க்கம் சொல்ல என்ன தகுதி உள்ளது ?"
மர்ர்க்கம் என்ற பெயரில் ,பெண்களிடம் கடலை போட அனுமதி உள்ளதா?
என்று ஒவ்வொரு சாதாரண தொண்டன் கேட்டால் ,பதில் உண்டா ?
ஆக்கம் : அபூ நபீலா .6-7-10

Monday, July 5, 2010

ஜூலை 4ல் P.Jவின் மாபெரும் அரட்டை அரங்கம்

69மண்டபம் 
500பஸ் 
15 லட்சம் பேர் வந்திறங்கி காலை கடன் நிறைவேற்றிய அதிசயம்! 
பல்லவன் இல்லம் முதல் தீவுதிடல் வரை(1 KM) 15 லட்சம் பேர் அணிவகுத்த அதிசய பேரணி !
15 ஆயிரம் தங்காத தீவு திடலில்  15 லட்சம் பெற்ற பங்கு பெரும் உலகின் மாபெரும் அரட்டை அரங்கம்