Thursday, July 15, 2010

மதுரையில் போலீஸ் அராஜகம்! பாக்கர் கடும் கண்டனம்!

மதுரையில் காவல்துறையின் அட்டகாசமும் அராஜாகமும் கடுமையாக இருக்கிறது.

சென்ற ஜுலை 5ஆம் தேதி எதிர்கட்சிகள் பெட்ரோல், டீஸல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் நடத்தின. அன்று எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. அன்று கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையாகி வெளிவந்த தென்காசி சகோரர்கள் மதுரை நீதிமன்றத்திற்கு வந்தனர். அங்கு ஏற்கனவே வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகி உள்ள போலீஸ் பக்ருதீன் என்ற சகோதரரும் சென்றுள்ளார். தென்காசி சகோதரர்களும், பக்ரூதீனும் பேசிக் கொண்டனர்.

அவர்கள் நாங்கள் தென்காசியிலிருந்து காலையிலேயே மதுரை வந்து விட்டோம். எந்த ஹோட்டலும் இல்லை. எங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்து தாருங்கள் என கேட்டுள்ளனர். அவரும் என்னுடன் என் ஏரியா நெல்பேட்டைக்கு வாருங்கள் என அழைத்து சென்றுள்ளார்.

இதை அறிந்த மதுரை துணை கமிஷனர் எண்கவுண்டர் வெள்ளதுரை, பக்ரூதீனை பார்த்து நீனே என்கவுண்டர் லிஸ்டில் இருக்கிறாய், இவங்களை ஏன்டா கூட்டி வந்தாய் என துப்பாகியை எடுத்து இருக்கிறார். ஏன் சார், நான் கடந்த வாரம்தான் வெளியே வந்தேன். என்ன தப்புசார் செஞ்சேன், என் மீது ஏன் அநியாயமாக கேஸ் போடுகிறீர்கள் என சொல்லி துப்பாகியை தட்டி விட்டுள்ளார். வெள்ளதுரையுடன் இருந்த மற்ற போலீஸ்மார்கள் பக்ருதீனை மடக்கி பிடித்து கடுமையாக அடித்துள்ளனர். அவர், நம்மை மீண்டும் ஜெயிலில் தள்ளி விடுவார்கள் என பயந்து போலிஸ்காரர்களிடமிருந்து ஒரு வகையாக தப்பி சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் கொண்ட வெள்ளை துரை தன் காவல்படைகளை அழைத்துக் கொண்டு நெற்பேட்டையை முற்றுகையிட்டுள்ளார். அவர் ஜீப்பில் இருந்து கொண்டு ஸ்பீக்கர் மூலம் அங்கிருந்த முஸ்லிம் மக்களுக்கு பீதி கலந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் தனது எச்சரிக்கையில், “நீங்க தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் இருப்பீங்க, உங்களை எல்லோரையும் எண்கவுண்டரில் போட எனக்கு தெரியாதா?! என திமிர்தனமாக பேசியுள்ளார். அவருடன் வந்த மற்றொரு போலீஸ் அதிகாரி தேன்மொழி இந்த இடத்தை மயானமாக்க எவ்வளவு நேரம் ஆகிவிடும்” என எச்சரிக்கை செய்துள்ளார்.

இதனால் எந்த நேரமும் போலிஸ் சுட்டு விடுமோ என்ற பயத்தில் நெற்பேட்டை முஸ்லிம்கள் உள்ளனர்.

இந்த அராஜகத்தை கண்டித்து கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அராஜகத்திற்கு எதிரான கூட்டமைப்பு என்ற பெயரில் தமுமுக, இதஜ, PFI, விடுதலை சிறுத்தைகள் உட்பட ஏராளமான சிறுபான்மை சமுதாய அமைப்புகள் ஒன்று சேர்ந்து பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அத்தனை பேர்களை ரிமாண்ட செய்த போலீஸ் அதன் பிறகு விடுதலை செய்தது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M..பாக்கர் மதுரை வந்தார். பாதிக்கப்பட்ட நெற்பேட்டைக்கு சென்று காவல்துறைக்கு பயந்து தலைமறைவாகி உள்ள போலிஸ் பக்ருதீன் தயாருக்கு ஆறுதல் கூறினார். துணை கமிஷனர் வெள்ளைதுரையின் அராஜக போக்கை கடுமையாக கண்டித்தார். இவருக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்கும் வரை போராடுவோம் என்றார். அவருடன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகிகள் S.S.T.அப்துல் காதர், ரஃபீக் ஜமான், பரக்கத் அலி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

மதுரையிலிருந்து பரக்கத் அலி.

0 comments:

Post a Comment