Thursday, July 8, 2010

ஒடுக்கப்பட்டோர் மாநாடும் - ஒளிக்கப்பட்ட உண்மைகளும்!

கடந்த காலங்களில் குடந்தை குலுங்கியது, தஞ்சை திணறியது. ஆனால் தற்போது தீவுடத்திடல் திணறவும் இல்லை, சென்னை சிணுங்கக் கூடவுமில்லை என்பதுதான் உண்மை!
கடந்த காலங்களில் கும்பகோணத்துக்குள்ளேயும், தஞ்சைக்குள்ளும் நுழைய முடியாமல் வாகனங்கள் திணறிய நிலை காணப்படவில்லை. பிரதான சாலைகளில் மக்கள் கடைசி வரை ஃப்ரீயாக சென்றதைக் காண முடிந்தது. சென்னையில் சின்ன டிராஃபிக் ஜாம் கூட ஏற்படவில்லை.
பல்லவன் இல்லத்தில் தொடங்கிய பேரணி(?!) அரைமணி நேரத்தில் முடிந்து போனது. 600க்கும் குறைவான வாகனத்தில் வந்தவர்கள், 18,000 பேர் என்றால் அண்ணன் கணக்குப்படி மீதி 148200 பேர் சென்ûனையச் சேர்ந்தவர்களா? சென்னையில் அத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்களா?
உணர்வில் போட்ட மண்டபம், மர்க்கஸ் உள்ளிட்ட 69 இடங்களில் 15 லட்சம் பேரும் காலைக்கடன் முடித்த அதிசயமும் நிகழ்ந்ததேறியது.
கமல் மனைவி சரிகா படத்தைப் போட்டும், வடிவேலு காமெடிக்கிடையில் விளம்பரம் செய்தும், கோடிக்கணக்கில் செலவழித்து அனைத்து தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தும், வல்லத்தில் பாதி கூட கூட்ட முடியாததன் அவலத்தை பேட்டி கொடுத்த அண்ணன் முகத்தில் காண முடிந்தது. ஆனாலும் கொஞ்சமும் கூச்சமின்றி, இறையச்சமுமின்றி 15 லட்சம் பேர் நாங்கள் கூடியிருக்கிறோம் என்று நா கூசாமல் பொய் சொல்ல அண்ணனால் மட்டுமே முடியும்.
உள்ளே மேடையில் உள்ளவர்கள் அதையும் தாண்டி 22 லட்சம் பேர் வந்துள்ளதாக கூறியதுதான் ஹைலைட் காமெடி. வல்லத்தில் வந்த பஸ் எண்ணிக்கையில் கால்வாசி கூட பல ஊர்களில் புறப்படவில்லை. பின் எங்கிருந்து வருவார்கள் 22 லட்சம் பேர்!
கலைஞரே வியக்கும் அளவுக்கு இவர்களின் பொய் இருக்கிறது. ஒரு ஆண்டு முழுவதும், ஒரு அரசு தான் மொத்த இயந்திரத்தையும் முடுக்கிவிட்டு, உலகம் முழுவதும் இருந்து தமிழர்களை வரவழைத்து, பள்ளி கல்லூரிகளுக்கெல்லாம் 5 நாள் அரசு விடுமுறை அளித்து, வாகன வசதி செய்து கொடுத்து, 400 கோடி செலவழித்து, 4.75 லட்சம் சதுர அடி பந்தலில் 60 ஆயிரம் பேரை கூட்ட முடியவில்லை. 5 நாள் மாநாட்டில் மொத்தம் கலந்து கொண்டவர்கள் 5 லட்சத்தைத் தாண்டவில்லை என உளவுத்துறை சொல்கிறது! ஆனால் பீஜேவிடம் ஜூலை-4ல் 6லட்சம் மக்கள் கூடியதாக உளவுத்துறை சொன்னதாம்!
மாநாட்டின் தோல்வி அவரை விரக்தியில் தள்ளி இருக்கிறது. சகோதரர்களே! தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்! தோல்வியை மூடி மறைத்தால் அது பின்னாளில் மிகப் பெரும் தோல்விக்கு வழிவகுக்கும்!
பாக்கரைப் பிரிந்ததால் பலம் குன்றிவிடவில்லை என்பதைக் காண்பிப்பதற்கு இத்தனை கோடி செலவா? அதற்கு இத்தனை பொய்களா?
சென்னை மண்ணடியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த மாநாட்டிற்கு வருவத்றகு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என சொன்ன பாக்கரை தரம் தாழ்ந்து விமர்சித்தீர்கள். அந்த பாக்கர் குறித்து 2 வருடத்திற்கு முன்பு என்ன சொன்னீர்கள். அந்த நற்சான்றிதழ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


செங்கிஸ்கான்.






















0 comments:

Post a Comment