Wednesday, July 14, 2010

எடுபடாத வாதங்கள் - எடுத்து வைக்கும் உண்மைகள்!

எடுபடாத வாதங்கள் என்ற தலைப்பில் பொய்ஜெ நம்மை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது நடுநிலையாளர்கள் மத்தியில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இவருக்கு நாம் பதில் கொடுப்பதை விட நடுநிலை பேணும் சகோதரர்கள் நல்ல பதில் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் அப்துல் காதர் என்ற சகோதரரின் கடிதம் இதோ....
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ!
அன்பு ததஜச் சகோதரர்களுக்கு!
வழக்கம் போல் உங்களின் குரு மாநாடு முடிந்ததும் வசை மாரி பொழிய ஆரம்பித்துள்ளார். அதற்கு நடுவில் குறிப்பிட்டுள்ள பல உண்மைகளை வழமைப் போல் உங்களைப் போன்றோர் கவனிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கை அவருக்கு பலமாக உண்டு. அவரால் குற்றஞ்சாட்டப்படும் நபர் அல்லது இயக்கம் குறித்து உங்களிடையே ஒரு வெறுப்புணர்வை விதைத்ததன் பின்னர் அவர் எடுத்து வைக்கும் வாதங்களில் அவரே (பொய்ஜே) முன்னின்று செய்தவைகளும் அடங்கும்.
ஆனாலும் ஒரு தனி நபர் அல்லது கூட்டத்தினர் மீது வெறுப்பு ஏற்படுத்தியதன் பின் அவர்களை நோக்கியே உங்களது கவனம் எல்லாம் திருப்பப்பட்டதனால், நிச்சயமாக அவரது பங்களிப்புப் பற்றி நீங்கள் ஒருவரும் கண், வாய் திறக்க மாட்டீர்கள் என்பது அவரது திடமான நம்பிக்கை. நீங்களனைவரும் இதுவரை அப்படித்தான் நடந்துக் கொண்டுள்ளீர்கள்.
எனவே, உங்களின் சிந்தனைக்கு 'எடுபடாத வாதங்களில்' ஒளிந்து கிடக்கும் உண்மைகளை இங்கே பட்டியலிடுகிறேன். ஏற்றுக் கொள்வதும், புறந்தள்ளுவதும் உங்களின் ஏகோபித்த உரிமை. உண்மையை எடுத்துக் கூறுவது மட்டுமே என் கடமை.
'இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் பல மாநாடுகளை நடத்தி விட்டோம். எனவே, மக்கள் செல்ல வேண்டாம் என PFI வீடு வீடாக பிரச்சாரம் செய்தனர்'
இது ஓர் அப்பட்டமான இட்டுக்கட்டப்பட்ட பொய் என்பதனை அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருசகோதரர் ஆணித்தரமாக TMB குழுமத்தில் தெரிவித்து விட்டார்.
ஒரு சகோதரனைப் பொய்யன் என்று நிறுவதற்காக, உங்கனைவரையும் தயார்படுத்தும் நோக்கில் எடுத்து வைக்கப்படும் முதல் அடியிலேயே மரண சறுக்கல். மற்றவனைப் பொய்யன் என்று தீர்ப்பு வழங்க பொய்ஜே எடுத்து வைக்கும் முதல் (சம்பந்தமில்லாத) செய்தியே பொய் எனில் பொய்யன் யார்?
'அந்நியப் பெண்ணுடன் தனியாக பயணம் செய்யலாம் என ஃபத்வா கொடுக்கும் கூட்டம்..'
ரதிமீனா பேருந்து பயணத்தில் தவறு நடக்கவில்லை அல்லது நடந்திருக்க வாய்ப்பும் இல்லை. எனவே அவரை மீண்டும் பொதுச்செயலாளராக்குவோம் எனப் பரிந்துரைத்தது யார்?
அதற்கு முன்னால் பேருந்து பயணத்தில் எப்படியெல்லாம் நிகழ்ந்திருக்கும் என ஊர் ஊராக நடித்துக் காட்டியது யார்?
அதற்குப் பின்னால், அவருக்கு (பாக்கருக்கு) பாவமீட்சி அளித்து அமிர்தசரஸ் குருத்துவார குருக்கள் போல, 'அவரை (பாக்கரை) இடை நிறுத்தம் செய்த பின்பும் 'தொடர்ந்து மர்க்கஸூக்கு வர்றாரு.. படியெல்லாம் கூட்டி சுத்தம் செய்றாரு' என்று சப்பைக்கட்டு கட்டி அதனால் அவரை மீண்டும் பொதுச் செயலாளராக்குவது பொருத்தமே எனபரிந்துரைத்தது யார்?
ஆக, அந்நியப் பெண்ணுடன் தனியான பயணம் தவறில்லை என தீர்ப்பளித்து தனது முந்தைய தீர்ப்பை மாற்றிச் சொன்ன பஞ்சாயத்துத் தலைவர் யார்?
இவ்வளவிற்கும் பிறகு ஏன் தனி மனிதனை மட்டும் சுட்டிக்காட்ட வேண்டும்? அச்சம்பவத்தில் தனக்குள்ள பங்கை மறைத்தது ஏன்?எனில் பொய்யன் யார்?

இதைவிட முக்கியமானதொரு விஷயம்..
'தீவுத்திடலை விட பல மடங்கு குறைவான இடம் கொண்ட கும்பகோணத்தில் பத்து லட்சம் பேர் கூடியதாக இதே பொய்யன் அடித்தொண்டையில் கூறியது...'
'மேலும் தீவுத்திடலை விட பல மடங்கு சிறிய இடம் கொண்ட வல்லத்தில் பத்து லட்சம் பேர் கூடியதாக பொய்யன் பாக்கர் கத்தியதும்...'
அன்புச் சகோதரர்களே!.. சற்று பின்னோக்கிச் சென்று சிந்தித்துப் பாருங்கள்..
இதே கும்பகோணம் மற்றும் வல்லம் மாநாடுகள் பற்றி பாக்கர் மட்டுமா பேசினார்? பொய்ஜே பேசவில்லையா? ஏன் நீங்களும் உங்களைப் போன்றோரும் வலைத்தளத்தில் எப்படியெல்லாம்அலப்பறை செய்தீர்கள்!
மாநாடு துவக்கத்திலேயே எண்ணிக்கையைத் துவக்கி இஷ்டம்போல 10 லட்சம், 20 லட்சம் என தத்தமது விருப்பம் போல் சமுதாய மக்களை ஏலம் விட்டுக் கொண்டிருந்தீர்களே..நினைவுக்கு வருகின்றதா? இறுதியில் 18 முதல் 20 லட்சம் என உறுதியாக நம்பினீர்களே.. அதையே பிரச்சாரமும் செய்தீர்களே.. ஒருவேளை 20 ஆயிரத்தைத்தான் இப்படிச்சொல்கிறார்களோ என்ற நியாயமான சந்தேகம் எழுப்பியவர்களை சமுதாய விரோதி என கூட்டம் கூடி கும்மியடித்தீர்களே.. நினைவுக்கு வருகின்றதா?
ஆனால் இன்றைய 'எடுபடாத வாதங்கள்' எடுத்தியம்பும் உண்மை என்ன?
1. கும்பகோணம் மற்றும் வல்லம் மாநாட்டு இடங்கள் மிகவும் சிறியவை.
2. இவைகளில் 10 லட்சம் பேர் கூட முடியாது.
3. எவன், எவர்கள் இவ்வாறு கூறினார்களோ அவர்கள் பொய்யர்கள்.
எனில் பொய்ஜே முதல் பொய்யர். இதனை எதிரொலித்து நேரிலும், போனிலும், வலைத்தளத்திலும், குழுமத்திலும் பேசியும் எழுதியும் வந்த அனைத்து ததஜ வினரும் பொய்யர்கள். நிலைமையைப் பார்த்தீர்களா. உடல், பொருள், நேரத்தை செலவிடும் உங்களைப் போன்ற தூய சமுதாய சிந்தனைக் கொண்ட அனைவருமே பொய்யர்கள் என எளிதாக பட்டம் சூட்டி விட்டார். அவரும் அதேதான் என ஒப்புக் கொண்டும் விட்டார்.
ஆனால் இது தன்னை மட்டுமே ஏகத்துவவாதியாக விசுவசிக்கும் தனது சீடர்களுக்கு கண்டிப்பாக புரியாது, எவரும் எம்மை நோக்கி கேள்வி கேட்க துணிய மாட்டார்கள், எனது (பொய்ஜே) வழிமுறைக்கு எதிராக எவர்கள் கேள்வி எழுப்புகிறார்களோ அவர்களுக்கு இம்மையில் நான் தரும் டார்ச்சர் எந்த அளவுக்கு என்பது ததஜ வினருக்குத் தெரியும் என்ற அபார நம்பிக்கை.
'இப்போது இவர்கள் காட்டும் நீள அகல கணக்குகள் தவ்ஹீது ஜமாஅத்திலிருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடு...'
அன்புச் சகோதரர்களே.. சற்று சிந்தித்துப் பாருங்கள்..
கும்பகோண மாநாட்டின் போது, அங்கு 5 லட்சம் பேர் கூட வாய்ப்பில்லை என எடுத்துச் சொல்லப்பட்ட போது கும்பகோண வரப்பு மேடுகளின் நீள அகலங்களை பட்டியலிட்டது யார்? நினைவுக்கு வரவில்லையெனில் அன்றைய தேதி உணர்வு பத்திரிக்கையை புரட்டிப் பாருங்கள்.
இப்பொழுது நீள அகல கணக்குகள் ஆத்திரத்தின் வெளிப்பாடு எனில், கும்பகோண நீள அகல கணக்குகள் யார் மீதுள்ள ஆத்திரத்தின் வெளிப்பாடு?
ஒருவன் பொய்யன் என்பதற்கு இந்த கணக்குகள் ஆதாரம் எனில், முதல் பொய்யன் பொய்ஜே அல்லவா? பத்திரிக்கையில் வெளியானதும் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்த (பொய்ஜேபாஷையில் வாந்தியெடுத்த) அனைத்து ததஜ வினரும் பொய்யர்கள் அல்லவா?
'திடலின் நீள அகலத்தை அளப்பவர் யாராக இருந்தாலும்... சமுதாயத்திற்கு துரோகம் செய்தவர்களே'
அப்படியானால் கும்பகோண விஷயத்தில் பொய்ஜே சமுதாயத்திற்கு துரோகம் இழைத்ததாக ஒப்புக் கொள்கிறாரா?
'தீவுத்திடலுக்குள் மக்கள் நிரம்பிய பின் இரண்டு கிலோ மீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலை முழுவதும் மக்கள் அடர்த்தியாக நின்றனர்'
இது ஒரு பச்சைப் பொய் என்பது குறைந்த பட்சம் சென்னைவாசிகளுக்குத் தெரியுமே என்ற வெட்க உணர்வின்றி எழுதப்பட்ட வாசகம்.
மற்றவர்களை பொய்யன் எனக் குறிப்பிடும் இக்கட்டுரையில் எத்தனை பொய்களை சர்வ சாதாரணமாக குறிப்பிட்டுள்ளார். சிந்திப்பீர்களா?
தீவுத்திடலுக்கு இருபுறம் உள்ள வாசல் வழியாகவும் வெளயேறினால் 3 வழிப்பாதைகள் தான் உண்டு. 4 வழிப்பாதைகள் அல்ல. அவற்றில் மக்கள் அடர்த்தியாக நின்றனர் எனில் போக்குவரத்து ஸ்தம்பித்திருக்க வேண்டும். அவ்வாறான படங்களோ, செய்திகளோ உண்டா?
'15 ஆயிரம் என்று சொல்லி 6 லட்சம் பேரை அழைத்து வந்து விட்டீர்கள்..' இதுவும் ஒரு பச்சைப் பொய்தான். 15 ஆயிரம் பேர் என்று காவல்துறையிடம் சொல்லி அனுமதி பெற்றிருந்தால்; ஏன் 15 லட்சம் என போஸ்டர், பேனர், ஸ்டிக்கர் அடிக்க வேண்டும்?
தீவுத்திடலின் கொள்ளளவே 1.5 லட்சம்தான். அதிலும் பல ஏரியாக்கள் காலியாக இருந்ததை மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் உறுதிப்படுத்தியிருக்கும் வேளையில், 6 லட்சம் எனப்பதிவு செய்வது ஏன்? பொய் சொல்வது ஏன்?
இதையே 15 லட்சம் என்றும் அதற்கு மேலும் என்றும் உங்களைப் போன்றோர் கூவித்திரிவது மிகப்பெரிய பொய் என்பதனை உணர்வீர்களா?
'தீவுத்திடல் அவ்வளவு சிறியதும் அல்ல. தீவுத்திடலைப் போல் 4 மடங்கு மக்கள் வெளியேஇருந்தனர்..' இது ஒரு முரண்பாட்டு வாக்கியம். முரண்பட்டுப் பேசுவது பொய்யன் என்பதற்கான ஆதாரம் - ஹதீஸ்.
'தீவுத்திடல் அவ்வளவு சிறியதும் அல்ல' அப்படியானால் பெரியது. 'தீவுத்திடலைப் போல் 4 மடங்கு மக்கள் வெயியே இருந்தனர்'
அப்படியானால் தீவுத்திடலுக்கு வெளியே 4 மடங்கு பெரிய இடம் இருந்திருக்க வேண்டும். இதனை ஏற்றுக் கொண்டால், தீவுத்திடலுக்குள் இருந்தவர்கள் 20 பேர் எனில் வெளியே இருந்தவர்கள் 80 பேர். இதன்படி தீவுத்திடலைச் சுற்றியுள்ள சாலை எங்கும்நடைபாதைகளில் மக்கள் அமர்ந்திருந்தாலும் மொத்தமாக 4 ஆயிரம் பேர் கூட இருக்க முடியாது. அப்படியானால் மொத்தக் கூட்டமே 5 ஆயிரம் பேர் தானா?
அதிர்ச்சி அளிக்கவில்லையா சகோதரர்களே?
'எடுபடாத வாதங்களில்' குறிப்பிட்டுள்ளதை உண்மை என ஒப்புக்கொண்டால், 5 ஆயிரம் பேர்தான் கலந்துக் கொண்டனர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனை நிராகரித்தால் 'எடுபடாத வாதங்களில்' குறிப்பிட்டுள்ளது அனைத்தும் பச்சைப்பொய் எனஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவ்வகையில் பொய்யன் யார்?
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படி உண்மைக்குப் புறம்பாக மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கையை காட்டி என்ன சாதிக்க முயற்சி செய்கிறீர்கள்? கூட்ட எண்ணிக்கையின் அடிப்படையில்தான் அந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிலைநாட்ட முடியும் என்றால், குர்ஆன் அதை மறுத்து பெரும்பான்மைக்கு மதிப்பில்லை என்கிறதே.
மேலும், மிக மிக சின்னஞ்சிறிய விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய சகோதரர்களோடு மஞ்சள் பைசகிதம் தவ்ஹீது பிரச்சாரத்தில் இன்று பொய்ஜே வாகிப்போன அன்றைய பீ. ஜைனுல் ஆபிதீன் உலவி மேடைகளில் முழங்கியபோது கூறியவை இன்னும் எமது காதுகளில் எதிரொலிக்கிறது..
கூட்டம் நமக்கு பெரிசில்லம்மா.. பத்ரு போரில் வெறும் 313 சஹாபாக்களுக்கு 10,000 பேர் கொண்ட எதிரிப்படையை வெல்லும் ஆற்றலை அல்லாஹ் கொடுத்தாம்மா.. என்றும், பெரும் கூட்டமாக உள்ளதினால் அவர்கள் சத்தியத்தின் பக்கம் நிற்கிறார்கள் என்பது அர்த்தமல்ல.. ஏனென்றால் பெரும்பான்மையான மக்கள் நிராகரிப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள். பள்ளிவாயில்களைவிட சினிமாக் கொட்டகைகளில்தான் அதிகம் கூட்டத்தினை பார்க்க முடியும் என்றும் மக்கள் எண்ணிக்கையை துச்சமாக மதித்த காலம் போய் இன்று தனது பொய் பிரச்சாரத்தினால் கூட்டப்படுகின்ற கூட்டத்தின் எண்ணிக்கையை கொஞ்சம் கூட கூச்ச உணர்வின்றி பன்மடங்காக்கி ஆரம்பம் முதல் கடைசி வரை அந்த பொய் கணக்கை நிலைநாட்டி வரும் காலம்தான் இது. போர் தந்திர உதாரணம் காட்டி அதை நியாயப்படுத்தவும் செய்வது அதைவிடக் கேவலம். ஏனென்றால் கண்காணாமல் இருக்கும் எதிரிப்படைக்குத்தான் நம் படையின் எண்ணிக்கையை பற்றி மிகைப்படுத்திக் கூறி அச்சமூட்ட முடியும். இன்றைய விஞ்ஞான உலகத்தில் இது சாத்தியமா? அதிலும் நம்மைச் சுற்றியுள்ள மக்களும், காவல்துறையும், உளவுத்துறையும், அரசும், ஊடகங்களும் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கும்போது யாரிடம் இந்த தந்திரம் வெல்லும்? சரியான நகைச்சுவை.
உண்மையில் சொல்லப்போனால், நம் சமுதாய அமைப்புகளின் கூட்டங்களுக்கு 50,000 பேரோ அல்லது 1 லட்சமோ மக்கள் கூடினாலே அது பெரிய கூட்டம்தான். இந்தக் கூட்டத்தை வைத்தும் நம்மால் நமது கோரிக்கைகளை வென்று எடுக்க முடியும். ஒரு கூட்டத்தில் கூடும் மக்களின் எண்ணிக்கையை அப்படியே வாக்குகளாக மாற்றி விட முடியாது என்ற அரசியல் சூட்சுமம் புரியதாவர்களா நமது அரசியல்வாதிகள்.
அன்பான சகோதரர்களே!
குறிப்பிட்ட சில விஷயங்களில் உள்ள முரண்பாடுகளை அவற்றை நிறுவதற்காக எடுத்தாளப்படும் பொய்யுரைகளை மட்டுமே இதில் குறிப்பிட்டுள்ளேன். தங்களின் வேலை பளுவிற்கு நடுவில் நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி. கண்மூடித்தனமாக ஒருவரைப் பின்பற்றுவதால் ஏற்படும் கையறு நிலை இது.
குர்ஆன் மற்றும் ஹதீஸில் போதிய ஞானமுள்ள சகோதரர்களாகிய நீங்கள் புரிந்துக் கொள்வீர்களென நம்புகிறேன். நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன். நாமும் அதற்காக முயற்சிப்போமாக.
வஸ்ஸலாம்.
அப்துல் காதர்

0 comments:

Post a Comment