Saturday, July 10, 2010

அவதூறு ஜமாஅத்தின் லேட்டஸ்ட் அவதூறு

அஸ்ஸலாமு அலைக்கும்...
பெரிய விஷயத்தை சிறிதாக்கிக் காட்டுவதும், சிறிய விஷயத்தை ஊதிக் காட்டுவதும் எப்போதும் அண்ணன் செய்யும் வாடிக்கையான வேலை தான். வெளியேற்றப்பட்டவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் களம் கண்டதும், அந்த இயக்கத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பையும் கண்டு முழி பிதுங்கிப் போயிருக்கிறார்.
ஒரு தலைவரை அதிகாரப்பூர்வமாக மாற்றி சேலத்திற்கும், இன்னொரு தலைவரை அன்-அபிஷியலாக திருச்சிக்கு அனுப்பிய பிறகும் வீரியம் பெறாததால் மாநாட்டு அஸ்திரத்தை கையிலெடுத்தார்.
வீரியம் பெறாததால் என்று குறிப்பிட்ட காரணத்தால் தனி நபர் ஜமாஅத்தினரே கோபம் கொள்ளாதீர்கள். தற்போதைய தலைவர் பதவி விலகுவதாக கூறியபோது இப்படி சொன்னதாக மேலாண்மைக் குழு தலைவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுவரை நடத்திய மாநாடுகளின் போது செலவழித்ததை
விட அதிக தொகைகளை விளம்பரத்திற்காக செலவழித்த பின்பும், பிரபல டிவிக்களில் தொடர்ந்து விளம்பரம் செய்த பின்பும் வந்த கூட்டம் என்னவோ வல்லம் மற்றும் கும்பகோணத்தில் நடத்தப்பட்ட மாநாடுகளில் கலந்து கொண்டதை விட குறைவுதான்.
தனி நபர் ஜமாஅத் தலைவர் இயக்கங்களை உடைப்பதும், உடைத்த பின் மாநாடு நடத்துவதும், மாநாடு முடித்த பின் வெற்றி.. வெற்றி, மக்கள் என் பக்கம் என்று மார்தட்டுவதும் தமிழகம் ஏற்கனவே சந்தித்த நிகழ்வுகள்.
ஆனால் இந்த மாநாட்டின் தோல்வி அவர்களை சித்தம் கலங்க வைத்திருப்பது மட்டுமல்லாமல் கூட்டம் வராததற்கு காரணம் இவர்களின் குறைபாடுகள் என்பதை உணராமல் அடுத்தவர்கள் மீது பாய்ந்து பிறாண்டுகிறார்கள்.
முதல் அவதூறு :
மாநாட்டிற்கு யாரும் போதீர்கள் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர் சொன்னார்களாம்.அடுத்தவர்கள் நடத்தும் மாநாட்டிற்கு போகாதீர்கள் என்று பிரச்சாரம் செய்வது தனி நபர் ஜமாஅத் செய்யும் வேலை. பீஸ் மாநாட்டிற்கு யாரும் போகாதீர்கள் என பேசியவர்கள் யார் என மக்கள் அறிவார்கள். எங்கேயும், எப்போதும் மாநாட்டிற்குப் போகாதீர்கள் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர் யாரும் பேசவில்லை.
பொய்களைச் சொல்லி மாநாடு நடத்தாதீர்கள் என்று தான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர் சொன்னார்கள். மாநாட்டைக் காட்டி தனி நபர் ஜமாஅத்தினர் கட்டவிழ்த்து விட்ட பொய்களைத் தான் மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டிக் காட்டினார்கள்.
பொதுப் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தும் போது கலந்து கொண்டவர்களை குறைத்துச் சொல்வது துரோகம் என்று இப்போது சொல்லும் இவர்கள், டிசம்பர் 6 போராட்டத்தின் போது காவல் துறையினரால் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினரின் எண்ணிக்கையை குறைத்துப் பேசியது யார்? பள்ளிக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தது கூட தெரியாமல், மண்டபத்தின் சதுர அடி எவ்வளவு? எத்தனை பேர் உட்காரலாம்? என்று நீட்டி, முழக்கி கேள்விகள் எழுப்பி மேதாவித் தனத்தை காட்டினார்கள் அல்லவா?
அந்த கேள்வி விதைகள் தான் இப்போது விருட்சமாக அவர்களை நோக்கித் திரும்புகிறது. தீவுத் திடலின் பரப்பளவு எவ்வளவு? எத்தனை பேர் உட்கார முடியும்? எத்தனை பேர் நிற்க முடியும்? என்று கேள்விகளை கிளப்பியுள்ளது.
எய்த அம்புகள் பூமராங் போல திரும்பியவுடன் குத்துது, குடையுது என்று எகிறிக் குதிக்கிறார்கள்.மாநாட்டுக் கூட்டத்தை வைத்து பில்டப் செய் நினைத்து முடியாமல் போனதால், பிரதமர் சந்திப்பை பூஸ்ட் செய்து ஈடுகட்ட நினைத்தார்கள்.
அடுத்த பில்டப் ஸ்டார்ட் ஆனது. கூட்டத்தைக் கண்டு பிரதமர் அழைத்தார் என்று எஸ்.எம்.எஸ்.கள் பறக்க விட்டவர்களை நோக்கி சின்ன கேள்விதான் கேட்கப்பட்டது. அழைத்தது பிரதமரா? கடிதம் கொடுத்து நேரம் வாங்கி சந்தித்தீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
ஆப்பு அசைத்த குரங்கு போல வகையாக மாட்டியவுடன் ஆமாம் ஹாரூண் மூலம் கடிதம் கொடுத்து சந்தித்ததாக முணுமுணுப்புடன் இப்போது ஒத்துக் கொள்கிறார்கள்.மாநாடு, பிரதமர் சந்திப்பு ஆகிய இரண்டு விஷயத்திலும் பில்டப் செய்ய முயன்று தோற்றவர்கள், இரண்டாவது அவதூறை இந்திய தவ்ஹீத்தினர் மீது வீசியிருக்கிறார்கள்.
நானும் எனது மனைவியும் இவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டோமாம். மாநாட்டுப் பந்தலில் நான் உட்கார்ந்து இருந்திருந்தால் சுற்றி வளைத்து வீடியோ எடுத்து அண்ணனுக்கு அடுத்தபடியாக என் முகத்தை அல்லவா அதிகளவு போட்டுக் காட்டியிருப்பார்கள். (வல்லம் மாநாட்டு ஒளிபரப்பில் விஞ்ஞானி ஜலீலை காட்டியதைப் போல) மாநாட்டுக்கு வந்திருந்த என்னுடைய உறவினரின் மகள் (திருமணம் தடை செய்யப்பட்ட உறவு) வீட்டுக்கு அழைத்துப் போகுமாறு போன் மூலம் தெரிவித்ததால் தீவுத் திடல் வாசலில் நின்றிருந்த அவரை அழைத்து வந்தேன்.
உண்மை நிலவரம் இப்படி இருக்க, இக்பால் மாநாட்டில் கலந்து கொண்டதாக பில்டப் காட்டுகிறார்கள். இதில் மனைவியோடு கலந்து கொண்டதாக கற்பனை கலந்த பில்டப் வேறு.ஜெயலலிதாவும், கருணாநிதியும் அந்தப் பக்கமாக காரில் போயிருந்தால் மாநாட்டிற்கு தான் வந்தார்கள் என்று சொல்லித் தீர்த்திருப்பார்கள்.
தனி நபர் ஜமாஅத் சகோதரர்களே!
உழைப்பின் மூலமும், தியாகத்தின் மூலமும், இறையச்சத்தின் மூலமும் வளர முயற்சி செய்யுங்கள். பொய்கள் மூலமாகவும், பில்டப்புகள் மூலமாகவும் மற்றும் அடுத்தவர்கள் மீது அவதூறு சொல்லி இயக்கத்தை வளர்ப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.
இப்படிக்கு
(எஸ்.எம். சையது இக்பால்)

0 comments:

Post a Comment