Saturday, July 10, 2010

மக்கள் மன்றம் (மேடை ஏற துணிவுண்டா..?)

பொதுவாக ஒரு பொய்யை திரும்ப திரும்ப மக்கள் மத்தியில் பரப்பும்போது, அதை நம்புவது மக்களின் இயல்பு. இந்த கலையை தனது தற்காப்புக் கலையாக கொண்டு அன்று முதல் இன்று வரை வெற்றிகரமாக இயங்கிவரும் அந்த அவதூறு மன்னன் சமீபத்தில் ஒரு அறைகூவல் விடுத்துள்ளார்.
தங்களைப் பற்றி விமர்சனம் செய்தால் அந்த மேடையில் ஏறி நிரூபிக்க சொல்வோம். மாறாக இனி இணையதளம் பயன்படுத்தப்படாது என்று.
அவமானத்தாலும், மக்களிடம் தனக்கு செல்வாக்கு சரிந்ததை கண்டும் குபீரென்று ரோஷம் பொங்கிவரும் இவருக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறோம். முதலில் இதஜ நிர்வாகிகள் மீது சுமத்திய புளுகு மூட்டைகளை தகுந்த சான்றுகளை கொண்டு இஸ்லாத்தின் அடிப்படையில் நிரூபியுங்கள். பிறகு மேடை ஏறுங்கள்.
மேடை ஏறுமுன் உங்களின் மந்த புத்தியால் வழங்கப்பட்ட டவுசர் போட்டு தொழலாம் என்பது உள்ளிட்ட சில பத்வாக்களை விமர்சித்து சவால்விட்ட ஒரு அறிஞரின் சவாலை ஏற்க துப்பில்லாமல் காவல்துறை நாடி, உங்களின் பலத்தை பயன்படுத்தி அந்த அறிஞரின் நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தீர்களே! அந்த மாதிரி இல்லாமல் ரோஷம் வந்த வேகத்திலேயே நேரடியாக மேடை ஏற துணிவுண்டா..?
நீங்கள் செய்யும் உள்குத்து வேலை எல்லாம் உங்களின் ரசிகர்களுக்கு தெரியாமல் இருப்பதுதான் உங்களின் பலம். உங்களின் கிரிமினல் வேலைகளை பார்த்தவர் வந்து சொன்னாலும், சொன்னவர் மீதே பழிபோடும் உங்கள் விவகாரத்திற்கு படைத்தவன்தான் பாடம் புகட்டவேண்டும். எதிலும் தூய்மை இல்லை என்று அவ்வப்போது நிரூபித்து வரும் நீங்கள் இனி எதிராளிகளுக்கு எதிராக பயன்படுத்த மாட்டோம் என்று சொன்னதிலாவது தூய்மையையும், வாய்மையையும் கட்ட முயற்ச்சி செய்யுங்கள்.
-அபூஸனா.
குவைத்.

0 comments:

Post a Comment