Saturday, July 10, 2010

பொய்ஜெயின் கடைந்தெடுத்த பொய்களுக்கான பதில்கள்!

கீழ்காணும் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.
http://www.intjonline.in/video-common
கண்ணியமிக்க திருக்குர்ஆன் கூறுகிறது: (24 அத்தியாயம் சூரத்துன் நூர்)
24:4 எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
24:6 எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:
24:7 ஐந்தாவது முறை, '(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாகஅல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்' என்றும் (அவன் கூற வேண்டும்).
24:8 இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க,'நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி:
24:9 ஐந்தாவது முறை, 'அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).

24:11 எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும்.(பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை)இருக்கிறது. மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக்கடினமான வேதனையுண்டு.
24:12 முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக்கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு,'இது பகிரங்கமான வீண் பழியேயாகும்' என்று கூறியிருக்க வேண்டாமா?
24:13 அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே, அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில்பொய்யர்களாக இருக்கிறார்கள்.
24:14 இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச்சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.
24:15 இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க்கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித்திரிகின்றீர்கள். இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்
.
24:16 இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, 'இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த்தகுதி) இல்லை. (நாயனே!) நீயே தூயவன். இது பெரும் பழியாகும்' என்று நீங்கள்கூறியிருக்கலாகாதா?
24:17 நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின்பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.
24:23 எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.

0 comments:

Post a Comment