Tuesday, May 18, 2010

சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன்.


சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் என்றுதான் எழுதியுள்ளேன். சிறை கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் என்று சிறையில் பீடி வாங்கி கொடுத்தவர்களோ,முன்பு அவருடன் நெருக்கமாக இருந்தவர்களோ இப்படி படித்தால் நான் பொறுப்பு இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாக்கரை கோழையாக சித்தரித்துள்ள மாவீரன்.

அநியாயமாக சிறையில் தள்ளப்பட்டதும் நியாயமாக சிறையில் தள்ளப்பட வேண்டியபி.ஜெ.யைக் காட்டிக் கொடுக்காதவர்களில் தடாவில் தள்ளப்பட்ட பாக்கரும் ஒருவர். அந்த பாக்கரை கோழையாக சித்தரித்துள்ள மாவீரன் பி.ஜெ. பூட்டு உடைப்பு போராட்டத்தில் 800பேருடன் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறை சென்று பொறுமையுடன் இருந்தது போல் ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த மாவீரனைப் பற்றி அப்பொழுதே தெரிந்திருந்த கோவைவாசிகள்.

சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. அதுவும் முதல் நாள் நடந்த பேரணியில் கூட்டத்தை கண்டு விட்டு உட்சாக அறிவாளியாக வாய் குளறி பூட்டு உடைப்பு போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என அறிவித்து விட்டார் மாவீரன் பி.ஜெ. இந்த மாவீரனைப் பற்றி அப்பொழுதே தெரிந்திருந்த கோவைவாசிகள் வசமாக பிடித்துக் கொண்டார்கள்.

அவரது முகம் எந்த அளவுக்கு வெண்மையாக ஆனது.

காலையில் கைது செய்து மாலையில் விட்டு விடுவார்கள் என்ற எண்ணத்தில் அதுவும் கோவைவாசிகள் பின்னால் இருக்கிறார்கள் ஹைதர் அலியும் நம்முடன் இருக்கிறார் என்ற தைரியத்தில்தான் பூட்டு உடைப்பு போராட்டத்தில் இறங்கி கைதானார். ரிமாண்ட் செய்யப்பட்டதும் அவரது முகம் எந்த அளவுக்கு வெண்மையாக ஆனது என்பதை அவருடன் இருந்தவர்கள் அன்றே சொன்னார்கள். ஹைதர் அலி நன்றாகவே அறிவார்.

குணங்குடி ஹனீபா களத்தில் இறங்கினார்.

அப்பொழுது அவரது விடுதலைக்கு த.மு.மு.க. மாநில தலைவராக இருந்த குணங்குடி ஹனீபாதான் கதி என்றானது. எப்படியாவது உடனடி விடுதலைக்கு வழி செய்ய வேண்டும் என அவரை முடுக்கி விட்டார். பா.ம.க. மாநில பொருளாளர் என்ற பின் பலத்துடன் இருந்த த.மு.மு.க. மாநில தலைவர் குணங்குடி ஹனீபா களத்தில் இறங்கினார். த.மு.மு.க. மாநில அமைப்பாளர் பி.ஜைனுலாப்தீனை விடுதலை செய்யாவிட்டால் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வீட்டு முன் மறியல் என அறிவித்தார். விளைவு
சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் விடுதலை செய்யப்பட்டார்.

மகா கோழை மகத்தான கோழை மட்ட ரகமான கோழை யார்?

இது இப்பொழுதுள்ள யாருக்குத் தெரியும். அதனால்தான் மற்றவர்களை கோழைகளாக சித்தரிக்கிறார். மகா கோழை மகத்தான கோழை மட்ட ரகமான கோழை யார் என்பதை வரலாறு உள்ளவர்கள் அறிவார்கள்.

மீசைக்காரன் சரி இல்லை.

பாபரி மஸ்ஜிதை மீட்க பாராளுமன்றத்தில் தொழுகை நடத்துவோம் என்ற வீரியமிக்க போராட்டத்தை அறிவித்தார் த.மு.மு.க. மாநில தலைவராக இருந்த குணங்குடி ஹனீபா. சிறைக்கஞ்சா வீரியமிக்க மாவீரன் ஜைனுல் ஆபிதீன் வெளிநாட்டுக்கு போன் போட்டு என்ன சொன்னார். மீசைக்காரன் சரி இல்லை. அவன் நம்மளை அவன் வழியில் இழுக்கப் பார்க்கிறான். அவன் அறிவித்த பாராளுமன்ற தொழுகை போராட்டத்தை நடத்தினால் பா.ம.க.வில் அவனுக்கு செல்வாக்கு கூடி விடும். எனவே பாராளுமன்ற தொழுகை போராட்டம் வேண்டாம் என்றார்.

இந்த போராட்டம் வேண்டாம்.

நீங்களும்தானே பாபரி மஸ்ஜிதை கட்டித் தராவிட்டால் பாராளுமன்றத்தை பள்ளிவாசலாக ஆக்கி தொழுகை நடத்துவோம் என்று பேசி உள்ளீர்கள் என்றதற்கு அப்படி பேசினால்தான் இந்த போராட்டம் வேண்டாம் என்று நாம் சொல்ல முடியும் என்றார் சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன்.

மாதக்கணக்கில் சிறையில் கிடக்க வேண்டி வரலாம்.

டெல்லிக்கு போகும்போது முன்னெச்சரிக்கையாக சென்னையிலேயே கைது செய்து விட்டால் சென்னை போலீஸ் பிரச்சனை இல்லை. போராட்ட தேதி முடிந்ததும் விடுதலை செய்து விடும். விடுவிக்காமல் நாளை நீடித்தால் ஹனீபாவுக்காக பா.ம.க. களத்தில் குதிக்கும். ஒரு வாய்தாவில் விடுதலை கிடைத்து விடும். வட நாட்டில் கைது செய்யப்பட்டால் முதலில் மொழி தெரியாது. பா.ம.க. செல்வாக்கு அங்கு பயன்படாது. எனவே மாதக்கணக்கில் சிறையில் கிடக்க வேண்டி வரலாம். எனவே பாராளுமன்றத்தில் தொழுகைப் போராட்டம் என்பது சாத்தியப்படாது என்றார் சிறைக்கஞ்சா மாவீரன்.

மக்களே மறந்து விடுவார்கள்.

எந்தப் போராட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்குள் நடத்துவதே நமக்கு நல்லது.
எனவே இப்பொழுது குளிர் காலம் என்று போராட்ட நாளை ஒத்தி வைப்பதாகக் கூறி அப்படியே கிடப்பில் போட வேண்டியதுதான். அடுத்தடுத்து வரும் போராட்டங்கள் மூலம் பாராளுமன்ற தொழுகைப் போராட்ட அறிவிப்பை மக்களே மறந்து விடுவார்கள் என்றார். சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன்.

கேடயமாக பயன்பட்டவர் பாக்கர்.

பாராளுமன்ற தொழுகைப் போராட்ட அறிவிப்பை மக்கள் மறக்க கவர்னர் மாளிகையில் தொழுகைப் போராட்டம் நடத்தினார் சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன். மதுரை ராஜகோபாலன் கொலை வழக்கில் பி.ஜெ. கைது செய்யப்படாமல் இருக்க கேடயமாக பயன்பட்டவர் பாக்கர். அந்த பாக்கரை கோழையாக சித்தரித்துள்ளார் பி.ஜெ.


இவர் மற்றவர்களை கோழை என சொல்லட்டும்.

இது உண்மை இல்லை என்று மறுத்தால் உண்மையிலேயே அவர் சிறைக்கஞ்சா மாவீரன்தான் என்றால் 1996இல் அவர் சவால் விட்டு பேசியபடி பாபரி மஸ்ஜிதை மீட்க பாராளுமன்றத்தை தொழுகை இடமாக ஆக்கும் போராட்டத்தை ஜைனுல் ஆபிதீன் அறிவிக்க வேண்டும். அறிவிக்க வேண்டும் என்றால் முன்போல் அறிவித்து நாடகமாடக் கூடாது. டெல்லி சென்று போராட்டத்தை நடத்திக் காட்டட்டும். அதன் பிறகு இவர் மற்றவர்களை கோழை என சொல்லட்டும்.

நடை பிணமாக ஆகி விடுகிறார் என்பதுதான் உண்மை.


அடுத்த ஆண்டு (1998டு)க்குள் பாபரி மஸ்ஜிதை கட்டித்தராவிட்டால் அடுத்த ஆண்டு அயோத்தி நோக்கி நடை பயணம் செல்வோம் என்று 1997இல் கர்ஜித்தார் சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன். 98 போய் 2008டும் போய் விட்டது. போயஸ் தோட்டத்து பொன்மகளை பார்க்கத்தான் மாவீரனாய் நடை பயணம் போனார். அயோத்தி நோக்கி நடை பயணம் என்றால் நடை பிணமாக ஆகி விடுகிறார் என்பதுதான் உண்மை.

முதலில் தான்கோழை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

இதை உண்மை இல்லை என்று மறுத்தால் உண்மையிலேயே ஜைனுல் ஆபிதீன் சிறைக்கஞ்சா மாவீரன்தான் என்றால் 1997இல் அவர் கர்ஜித்து பேசியபடி பாபரி மஸ்ஜிதை மீட்க அயோத்தி நோக்கி நடை பயணம் செல்லட்டும். அதன் பிறகு அவர் யாரை கோழை என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம். ஒருவன் மற்றவர்களை கோழை என்று விமர்சிப்பதாக இருந்தால் முதலில் தான்கோழை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் நிரூபிப்பாரா?

இது சிறைக்கஞ்சா மாவீரன் செய்யும் செயலா?

அந்நஜாத் ஆசிரியர் அபூஅப்துல்லாஹ் பற்றி வண்டி வண்டியாகக் குற்றம் சாட்டினார். கோர்ட்டுப் போனதும் தொண்டிக் குதிரை நொண்டிக் குதிரையாக ஆனது. இது வீரமிக்க செயலா? இது சிறைக்கஞ்சா மாவீரன் செய்யும் செயலா? சந்தி சிரிக்கிறது.

கோர்ட்டு பக்கமே தலை வைத்து படுக்கவில்லை.


பஸ்லுல் இலாஹி தாயகம் வர மாட்டான் வர முடியாது. வந்தால் சிவில் கிரிமினல் வழக்குப் போடுவேன் என்றார். அவரது சவாலை ஏற்று பல முறை தாயகம் வந்தோம். தாராளமாக வழக்குப் போடுங்கள். நீங்கள் தொடரும் வழக்கை கொண்டே தமிழகத்தில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் மூல காரணம் நீங்கள்தான் என நிரூபித்து உங்களை சிறையில் தள்ளுவேன் என்றோம். அவ்வளவுதான் சிறைக்கஞ்சா மாவீரன் கோர்ட்டு பக்கமே தலை வைத்து படுக்கவில்லை.

இப்பொழுது சொல்லுங்கள்.

காரைக்காலில் இமாம் அலியை தங்க வைத்து விட்டு பெண்களை கேடயமாக்கி தன்னைக் காத்துக் கொண்டவர்தான் சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் . பெண்களைக் கேடயமாக ஆக்கிய பெட்டை யார் என்பதை இப்பொழுது சொல்லுங்கள்

0 comments:

Post a Comment