Wednesday, August 31, 2011

திடலையும் திருடும் திருச்சி தக்ளித் ஜமாத்தினர்.

திடலையும் திருடும் திருச்சி தக்ளித் ஜமாத்தினர்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...
கொள்கை சகோதரன் திருச்சி.ரிஸ்வான் எழுதி கொண்டது. அனைவருக்கும் எனது புனித ரமழான் வாழ்த்துக்கள்(ஈத் முபாரக்).

அல்லாஹ் தனது திருமறையில் ரமழான் நோன்பை பற்றி குறிப்பிடும் பொழுது நோன்பு வைப்பதன் மூலம் இறையச்சம் உடையோராகலாம் என கூறுகின்றான். இறையச்சத்திற்குரிய பாடம் கற்று அல்லாஹ்வுக்கு அதிகம் அதிகம் தக்பீர் கூறி புகழ்ந்து நன்றி கூறவேண்டிய இந்த நேரத்தில் அவதூறு தலைவனின் சீடர்கள் சிலர் "வெற்றி வெற்றி INTJ கழுசடைகள் பெருநாள் தொழுகை நடத்தாமல் ஓடி ஒழிந்தனர்" என்ற அவதூறை SMS வழியாக பரப்பி மகிழ்கின்றனர்.

அதற்கு விளக்கம் தரவேண்டியது நமது கடமை என்கிற அடிப்படையில் சில நிகழ்வுகளை அல்லாஹ்வுக்கு பணிந்த நிலையில் பதிய வைக்க கடமைபட்டுள்ளோம். நபிவழியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக TNTJ சார்பாக ஏற்பாடு
செய்யபடும் இடம் ஒரு மாட்டு கொட்டாய் ஆகும். நபிவழியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக சாணி வாடையையும் பொறுத்தே கடந்த காலங்களில் இருந்து மக்கள் தொழுது வந்தனர். சிலரின் செருப்புகளையும்,  சிலரின் ஆடைகளையும், அதன் மூலம் தொழுகை பாய்களையும் சாணி அலங்கரித்தது. பெருநாள் தொழுகைக்கென வேறு இடம் தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்தின் குரல் மேலாங்கும்போது TNTJ-யில் பணி செய்வது சமஸ்பிரான் தெருவாசிகள் மட்டும்தான் எனவே இந்த இடத்தில்தான் நடத்த முடியும் என்றனர்.

பெரும்பெரும் அரசியல் கட்சி கூட்டங்கள் மட்டுமே நடைபெறும் திருச்சி தென்னூர் உழவர் சந்தையின் எதிரே உள்ள மாநகராட்சி மைதானத்தில் முஸ்லிம் நிகழ்சிகளிலும், பெருநாள் தொழுகை ஏற்பாட்டிலும் முதல்முறையாக பல்வேறு விதமான பெரும்பெரும் இடையூறுகளுக்கு மத்தியில் அல்லாஹ்வின் மாபெரும் உதவியுடன் கடந்த ரமழான் பெருநாள் தொழுகையை சிறப்பாக நடத்தி முடித்தோம். இதில் ஆண்களும் பெண்களும் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர். அப்போது நம் பள்ளிவாசலுக்கும், நம் தொழுகை திடலுக்கும் வருவோர் TNTJ-யினரே என்று கைப்புள்ளதனமாக எண்ணிக்
கொண்டிருந்தோரின் கண்கள் விரிந்தன.
பக்ரீத் பண்டிகையும் வந்தது. அடுத்தவர் பள்ளிவாசல் (சொத்து) திருட்டில் இருந்து சற்று கீழிறங்கிவிற்க இயலாத, முஸ்லிம் டிரஸ்ட் போன்ற பெரிய சொத்துக்களும் அற்ப சொத்துக்களும் இல்லாத இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் பெயரைகூட விட்டுவைக்காமல் திருடிய தவ்ஹீத் தலைவன்? தவ்ஹீத் ஜமாத்? தவ்ஹீத் தொண்டன்? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். தடம் புரண்டு திருடர்களானவர்கள் நவம்பர் 17 ஆம் தேதி முஸ்லிம்கள் அனைவரும் பக்ரீத் கொண்டாடிய நிலையில் திருடர் ஜமாத் திருடிய இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாகநவம்பர் 18 அன்று தொழுகை நடைபெறும் என்று விளம்பரம் செய்து வழக்கம் போல குழப்பம் செய்தனர். தவ்ஹீத் பணிக்கென மக்களிடம் வசூல் செய்த பணத்தில் இவர்கள் செய்து வரும் பணி குழப்பம், அவதூறு, ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, வன்முறை, கொலை இது மட்டுமே!
பக்ரீத் தொழுகை அனுமதியிலும் TMMK-வினர் சிலர் பெரும் இடைஞ்சல் கொடுத்தனர். எனினும் அல்லாஹ்வின் உதவி கொண்டு தொழுகையை சிறப்பாக நடத்தி முடித்தோம்.குழப்பவாதி பெருநாள் தேதியை மாற்றியதின் காரணமாக, இந்த தொழுகையில் TNTJ-யினர் சிலரில் பெரும்பாலோரும் கலந்து கொண்டனர்.
அமைப்பில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்பதால் 17-ஆம் தேதி அல்லாஹ்வுக்காகவும், 18-ஆம் தேதி அமைப்புக்காகவும் தொழுது என்ட்ரி போட்டனர். (ஷவ்வால் பிறையை பார்த்து இன்று பெருநாள் கொண்டாடக்கூடிய ஜமாத்தின் இணயதளத்தில் இன்று ஷவ்வால் 2 என்று இருப்பதன் மர்மம் என்னவோ?
ஆதாரம் பார்க்க www.tntjtrichy.com )
பொதுமக்களின் வருகை இடம் மாறியதால் வாயை திறந்தனர்.
டிசம்பர்-6 போராட்டம், மற்றும் டிசம்பர்-26 மாநாடு ஆகியவற்றை திருடியதை கொண்டு இடையூறு செய்தனர். நிகழ்ச்சி நடைபெறவில்லை! அனுமதி மறுப்பு என்றும் அவதூறு பிரச்சாரம் செய்தனர். எனினும் நமக்கு இங்கு அந்த திருட்டு பணிக்கு பல்லக்கு தூக்கிய திருச்சி மக்களின் மீது கோபமோ, ஆதங்கமோ வரவில்லை! மாறாக அடுத்தவர் விஷய
த்தில் வரம்பு மீறுபவன் நாளை நம் விஷயத்திலும் வரம்பு மீறுவான் என்கின்ற எதார்த்த கணக்கை புரியாதவர்களாக இருக்கின்றனரே என்று அவர்களின் மீது இரக்கத்தை தவிர வேறேந்த எண்ணமும் எங்களுக்கு ஏற்படவில்லை. அதனால்தான் அவர்களின் மற்ற நிகழ்ச்சிகள், சிங்காரத்தோப்பு JAQH பள்ளிவாசல் விவகாரம் போன்றவற்றில் நாம் தலையிடவில்லை.

 அம்பு எய்தவன் A/C அறையில் இருக்கிறான் போஸ்டர் ஒட்டுபவனுடன்சண்டை எதற்கு? என்ற காரணத்தினாலும், வழக்கு, கைது, போலிஸ் டார்ச்சர் போன்ற சிரமங்களை அனுபவிக்காத தியாகிகள் மட்டுமே அந்த அமைப்பில் மின்னுவதால் அவர்களின் நிகழ்ச்சிகள் எதுவும் தடைபட்டால் ஏங்கி போய்விடுவார்கள் என்பதாலும் நாம் அவர்களை அறவே சட்டை செய்வது கிடையாது. 

தொழுகை, பள்ளிவாசல் விஷயத்தை பொறுத்தவரை அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டிய விஷயம். அதை அறிந்தும் பணிய முடியா காரணத்தினால்தான் பள்ளிவாசல் அருகிலேயே போட்டி பள்ளி, ஆணவம், பெருமை, அவதூறு, ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, வன்முறை கொலை வரை இவர்களை கொண்டு சென்றுவிட்டது.
கடையநல்லூரில் TNTJ-தான் இதற்கு முன்னர் பெருநாள் தொழுகை நடத்தி வருகிறது. எனவே! எங்களுக்குதான் அனுமதி வழங்க வேண்டும் என்று அனுமதி வாங்கியோர், திருச்சியில் நாம் சென்ற வருடம் ரமழான் தொழுகை நடத்திய இடத்தில் அனுமதி கேட்டு ஆக்கிரமிப்பு கரங்களை நீட்டினர். அப்போது மாநகராட்சி அலுவலகத்தில் ததஜ-வை சேர்ந்த பெரும் பயில்வான்கள்? பெரிய ரவுடிகள்? ததஜ அமைப்பின் பூர்வீக கட்டமைப்பாளர்கள்? (செம காமெடிப்பா!) நம்முடன் சண்டை செய்ய முயற்சித்த போது நாம் அவர்களை அலட்சியம்தான் செய்தோம். அடுத்தவர் பாத்திரத்தில் வாய்வைப்பதும், மசூராவில் ஒன்றும், மேடையில் ஒன்றும், தனிபட்ட வாழ்வில் ஒன்றுமாக நடந்து கொள்வது அவர்களின் ஷைகுகற்று கொடுக்கும் பாடமாகும். (நம்மை சிந்தித்து செயல்பட கருணை புரிந்த ரஹ்மானுக்கே புகழனைத்தும்)
அவர்களை தாக்க நமக்கு வலிமை இருக்கிறது, போட்டிக்கு தொழுகை நடத்த அருகில் இடம் இருக்கிறது, இவர்களின் தொழுகையை தடுக்க அதிகார பழக்கவழக்கமும் இருக்கிறது, இவை அனைத்தையும் கொடுத்து எங்களை கண்ணியபடுத்தியிருக்கும் அல்லாஹ், எங்களுக்கு இறையச்சத்தையும் சிறிதளவு அருள்புரிந்திருக்கிறான். எனவேதான் நாங்கள் விலகி நின்றோம்.
எங்களுக்கு அல்லாஹ் இறையச்சத்தை அருள் செய்யாதிருந்தால் இவர்களை விட உலக விஷயத்தில் அல்லாஹ் எங்களுக்கு மேலான நுணுக்கத்தை வழங்கியுள்ளான். பொதுவாக யார் தொழுகை நடத்தினாலும், போராடினாலும் வருவோரை கொண்ட அல்லாஹ்வின் சோதனையில் கூட்ட பேயை உங்களுக்கு பிடிக்க வைத்து, உங்களை கர்வத்தில் ஆழ்த்திய இறைவன் உங்களை ஆழப்பதிய வைக்க போதுமானவன்

LASTஇறுதியாக 2 செய்திகளை சொல்ல விரும்புகிறோம். ஒரு நற்செயலை துவங்கி வைத்தோருக்கு அந்த நற்செயல் தொடரும் காலமெல்லாம் அதனுடைய நன்மை வந்து கொண்டே இருக்கும் எண்கிற நபிமொழிக்கு இணங்க பெருநாள் தொழுகைக்கு ஒரு புதிய இடத்தை ஆரம்பித்து வைத்து வழிகாட்டிய வகையில் அந்நற்செயலை யார் தொடர்ந்தாலும் அதன் நன்மை எங்களுக்கு குறைவின்றி வழங்கபடும் என்று அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்கிறோம்.

 பையும், கூடாரமும் காலியாக இருக்கும்போது யாரும் வரம்பு மீற போவதில்லை. எனவே ஒரு கூட்டத்தினரை இறைவன் வேலையை முடிக்க நாடினால் பையையும், கூடாரத்தையும் நிரப்புவான் என்ற வரலாறுகளைதான் குர்ஆன் நமக்கு போதிக்கிறது. அனைவரின் விஷயத்திலும் தீர்ப்பளிக்க அல்லாஹ் போதுமானவன் இவர்கள் விஷயத்தில் பள்ளிவாசல்களை எழுதி தர மறுத்து வெளியேற்றபட்டோரே போதுமானவர்கள்.
இன்ஷா அல்லாஹ்...


0 comments:

Post a Comment