Thursday, August 4, 2011

வக்பு சொத்துகள் முழுவதும் மீட்கப்படும் - தமிழக அரசு! INTJ கோரிக்கைக்கு அல்லாஹ் தந்த வெற்றி!


வக்பு சொத்துகள் முழுவதும் மீட்கப்படும் - தமிழக அரசு!

INTJ கோரிக்கைக்கு அல்லாஹ் தந்த வெற்றி!




தேர்தல் நேரத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த வைத்த கோரிக்கைகளில் ஒன்று தமிழகம் முழுதும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள வக்பு சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதாகும். இதை ஏற்று மறுநாளே திருச்சி பொதுக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை ஜெயலலிதா வெளியிட்டார்.


நேரில்  சந்தித்து விளக்கிய போது...  



                                       
                                           திருச்சி மாநாட்டின் ஆண்களில் ஒரு பகுதி!
                                         
                                        திருச்சி மாநாட்டின் பெண்கள் பகுதி!
                                             மாநாட்டு மேடையில் நிர்வாகிகள்!
தேர்தல் முடிந்து பதவி ஏற்ற பின்னர் மற்ற வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறி வரும் நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்பு சொத்துக்கள் மீட்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது !தமிழகத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே வக்பு சொத்துக்களை மீட்க வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்து திருச்சியில் மிகப் பெரிய மாநாடு ஒன்றையும் நடத்தியது என்பது குறிப்பிடத் தக்கது! எல்லாப் புகழும் இறைவனுக்கே! 


அதே சமயம் முஸ்லிம் சமுதாயம் குறிப்பாக ஜமாத்துகள் உடனடியாக களமிறங்கி அபகரிப்பளர்கள் மேல் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! எப்படி 2000 க்கும் மேற்பட்ட வழக்குகள் தி.மு.க.வினர் மீது பதிவு செய்யப்பட்டு நடவடிகை எடுக்கப் படுகிறதோ அது போன்று வகபு சொத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களை  அரசுக்கு அடையாளம் காட்ட வேண்டும்! அப்போது தான் அதன் பலன் சமுதாயதிற்கு கிடைக்கும் ! இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் சொத்துக்களை மீட்க அனைவரும் ஒன்று படுவோம்!    


தமிழகத்தில் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு சொத்துகள் முழுவதும் மீட்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. 


நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்த தமிழக அரசின் 2011-2012ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:
வக்பு வாரியம் சரியாக நிர்வகிக்கப்படாத காரணத்தால், வாரியத்திற்கு வருவாய் வரும் வகையில் அதன் சொத்துக்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. வாரியம் தனது ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தாகை, இதர பயன்களை அளிப்பதற்குக் கூட இயலாத நிலையில் உள்ளது. எனவே இந்த அரசு வாரியத்தின் செயல்பாடுகளை சீரமைக்க முடிவு செய்துள்ளது.
இதனால் வக்பு வாரியத்தின் சொத்துக்கள் அனைத்தும் திரும்ப அதன் வசம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதுடன், நிலையான வருவாய் பெறுவது உறுதி செய்யப்படும். மேலும் வக்பு வாரிய ஓய்வூதியதாரர்களின் நிலுவையிலுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட பணிக் கொடைகளை வழங்க ஒரு முறை மானியமாக மூன்று கோடி ரூபாயை வக்பு வாரியத்திற்கு வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் போன்றோர் கடந்த ஆட்சியின் போது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததாகப் புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது போன்று, நீண்ட காலமாகவே ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருக்கும் ஏராளமான வக்ஃப் சொத்துகள் மீட்கப்படும் என்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
வெறும் அறிவிப்போடு நின்றுவிடமால், உண்மையாகவே செயல் படுத்தப்படுமானால், அதிமுக அரசு தமிழக முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள ரமளான் பரிசாக முஸ்லிம்கள் கருதுவர்.
நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்.

0 comments:

Post a Comment