Sunday, August 28, 2011

பிஜெயின் மார்க்க முரண்பாடுகள் தோலுரிப்பது தொடரும் - முகவை அப்பாஸ்.



பிஜெயின் மார்க்க முரண்பாடுகள் 

தோலுரிப்பது தொடரும் - முகவை அப்பாஸ்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்பு சகோதர சகோதரிகளே!

அறிஞர்  பீஜேயின் மார்க்க முரண்பாடுகளை, அவருக்கு அவரே முரண்படுவதை, மார்க்க சட்டங்களில் அவரது பொடுபோக்கு தன்மையை உரிய ஆதாரங்களுடன் கண்ணியமாக  நாம் எழுதி வருகிறோம்.
இதை பொறுக்க முடியாமல், தனது பினாமி  தளத்தில் தனது அபிமானிகள் மூலம் அவதூறு தொடரை தொடங்கியுள்ளார் பீஜே. இதனால் நம்மை ஒரு போதும் இவரால் பின்வாங்க செய்யமுடியாது. இவரது மார்க்க முரண்பாடுகள்  தொடர் தொடர்ந்து வெளியாகும் இன்ஷா அல்லாஹ் என்பதை உறுதியுடன் தெரிவிக்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் பீஜேயின் சூன்ய வலையிலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுக்க உதவுவானாக!

-அன்புடன் சகோதரன் முகவைஅப்பாஸ்.
மண்டலத்தலைவர் இதஜ-குவைத்.

வ அலைக்கும் வஸ்ஸலாம்
எங்களது கண்ணியத்திற்குரிய சகோதரரும், எங்களது குவைத் மண்டலத் தலைவருமான முகவை அப்பாஸ் அவர்களே! தாங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
நான் மார்க்க விஷயமாக முரண்படுகிறேன் என்பதை பிஜெ ஒப்புக் கொண்டு விட்டார். மார்க்க விஷயமாக அவர் கொடுத்த விளக்கங்களை தாங்கள் கண்ணியத்துடன் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் சுட்டிக்காட்டும் பொழுது, அதற்கு முறையாக பதில் அளிக்க திராணியற்று, தனது கைக்கூலியினை கொண்டு மிக கேவலமாக விமர்சிப்பதில் இருந்தே, அவர் தன்னுடைய தவறுகளை ஒப்புக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். இவருடைய சுய ரூபத்தை அதிகமான மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இனியும் புரிவார்கள்.
கண்ணியமிக்க நபிமார்களை, அன்புக்குரிய ஸஹாபாக்களையே மிக மோசமாக விமர்சிக்கும் பொழுது நீங்கள் எம்மாத்திரம்? 
நாம் அறியாத ஒன்ற அல்ல, அவருடைய பெயரில் இயங்கும் இணையதளம் முழுவதும் விமர்சிக்கப்படாத அறிஞர்கள் உண்டா? மிக கண்ணியத்துடன் கேள்வி எழுப்பி இருந்த அபூ ஸுமைய்யா என்ற சகோதரருக்கு கொடுத்த அற்பத்தனமான விமர்சனங்களை எல்லாம் தமிழ் பேசும் முஸ்லிம் சமுதாயம் நன்கு அறியும். 
அல்லாஹ் உங்கள் மீது நல்லருள் பாலிப்பான், எப்போதும் போல் மிக உற்சாகத்துடன் தாங்கள் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணயினை தொடர துஆ செய்கின்றோம்.
வஸ்ஸலாம்.  

 #
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரே! நான் எல்லா இணையதளங்களையும் பார்வையிடுபவன். அந்த வகையில் பொய்யன் டிஜே என்ற இணையதளத்தையும் பார்வையிட்டேன். தாங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையானது.
சகோ.முகவை அப்பாஸ் கண்ணியமான முறையில்தான் பிஜே அவர்கள் முன்பு கொடுத்த விளக்கத்திற்கும், இப்போதும் தந்துள்ள விளக்கத்திற்கும் வேறுபாடுகளை சுட்டிக்காட்டுகிறார். அதற்கு விளக்கம் அளிக்கம் வேண்டும் என்று இருந்தால், நல்ல முறையில் விளக்கம் அளித்து இருக்கலாம். இல்லாவிட்டால், அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு இருக்கலாம். அதை விடுத்து ரமலான் மாதம் என்று கூட பார்க்காமல், முறையற்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை.
மார்க்க சம்பந்தமாக கேள்வி கேட்பவர்களுக்கு முறையான பதில் அளிக்காமல், ஏன் அவர்களது தனிப்பட்ட விஷயம் குறித்து படு மோசமாக விமர்சிக்க வேண்டும் என தெரியவில்லை?
சகோ.முகவை அப்பாஸ், பிஜே அவர்களின் அந்தரங்க லீலைகளை ஒன்றும் இவர்களை போல் தொடர் போட்டு எழுதவில்லையே இவ்வளவு படுமோசமாக விமர்சிப்பதற்கு?
முகவை அப்பாஸ் இது போல் நடந்து கொண்டாரா என தெரியவில்லை. எத்தனை காலத்திற்குதான் இதையே பல பெயர்களிலும் வெப்சைட் திறந்து எழுதிக் கொண்டு இருப்பார்களோ தெரியவில்லை. ஒருக்கால் அவர் அவ்வாறு நடந்து இருந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு மீண்ட பிறகும், அவரின் மான மரியாதையை இந்த அளவிற்கு பங்கம் வைக்க இஸ்லாம் காட்டி தந்த ஆதாரம்தான் என்ன? இது குறித்து அந்த அமைப்பில் உள்ள சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். அவர்களும் துணைப் போனால் சனிக்கிழமைகளில் மீன் பிடிக்க சென்றவர்களுக்கு துணைப் போன கதையாக மாறி, அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.
தமுமுகவை தலைவர்களை ஏசுகிறார். ஜாக் சகோதரர்களை பேசுகிறார். PFI போன்ற அமைப்பினரை விமர்சிக்கிறார். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினராகிய உங்களை விமர்சிக்கிறார். சைபுல்லாஹ் ஹாஜா அவர்களை விமர்சிக்கிறார். இந்த இணையதளத்தை நடத்தும் சகோதரர் நாளைய நிலையில் முஃப்லிசாக ஆக போகிறார் என்பது மட்டும் தெரிகிறது? அல்லாஹ் இவரை காப்பாற்ற வேண்டும்.
நீங்களும் தேவையில்லாத விஷயங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். நல்லவை ஏவுங்கள். அல்லாஹ் உதவி புரிவானாக. அல்லாஹ் நம் எல்லோருக்கும் நல்ல ஈமானை தரட்டும் என துஆ செய்கின்றேன்
-அபூ அப்திர் ரஹ்மான்
 

0 comments:

Post a Comment