Tuesday, August 2, 2011

ரமளானில் நாம்...


ரமளானில் நாம்
بسم الله الرحمن الرحيم
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன்2:183)
            பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்
'எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
எதற்காக நாம் நோன்பு வைக்க வேண்டும்?

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். அல்குர்ஆன் 2:185


    1.நோன்பின் சிறப்பு
عن أبى هريرة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: (قال الله عز جل: كل عمل ابن آدم له إلا الصيام، فإنه لي وأنا أجزي به والصيام جنه، فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب، فإن سابه أحد أو قاتله، فليقل : إني صائم. والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك.( رواه البخاري)
நோன்பு ஒரு கேடையமாகும். எனவே உங்களில் நோன்பிருப்பவர் தீய வார்த்தைகளை பேசக்கூடாது, பாவச்செயல்கள் செய்யக்கூடாது. முட்டாள்தனமாக நடக்கக்கூடாது. யாரேனும் அவரை திட்டினால் நான் ஒரு நோன்பாளி என்பதை மட்டுமே பதிலாகக் கூறவேண்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிகமணமுடையது, அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) (புகாரி)
  1. கணக்கின்றி கூலி
وفي رواية لمسلم: (كل عمل ابن آدم يضاعف: الحسنة بعشر أمثالها إلى سبعمائة ضعف. قال الله تعالى: إلا الصوم فإنه لي وأنا أجزي به ).
 'ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழுநூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே
அதற்கு கூலி வழங்குவேன்' என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: (முஸ்லிம்)


  1. இரவில் நின்று வணங்குதல்
    عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( من قام رمضان إيماناً واحتساباً غُفر له ما تقدم من ذنبه ) متفق عليه
 “ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி),(புகாரி)
  1. ரய்யான்
وعن سهل بن سعد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم، قال: (إن في الجنة بابا يقال له: الريان، يدخل منه الصائمون يوم القيامة، لا يدخل منه أحد غيرهم، يقال: أين الصائمون؟ فيقومون لا يدخل منه أحد غيرهم، فإذا دخلوا اُغلق، فلم يدخل منه أحد ).     'நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாயில்வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள். அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டுவிடும்' என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஃத் (ரலி)  (புஹாரி)

5. பொய்யான, வீண் பேச்சு
قال رسول صلى الله عليه وسلم: "من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه" رواه البخاري والترمذي وأبو داود وابن ماجه وأحمد
பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் ஒரு நோன்பாளி தவிர்த்துக் கொள்ளவில்லையெனில் அவர் பசித்திருப்பதிலும்,தாகித்திருப்பதிலும் இறைவனக்கு எந்தத் தேவையுமில்லை. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா  (ரலி)  (புகாரி)
6. ஷைத்தான் விலங்கிடப்படுதல்
إِذَا دَخَلَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ رواه البخاري  ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாசல்கள் திறக்கப்படும், நரகத்தின் வாசல்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா  (ரலி)  (புஹாரி)
  1. காற்றை விட அதி வேகம்
كان رسول الله (ص) أجود الناس وكان أجود ما يكون في رمضان كان أجود بالخير من الريح المرسلة وقد قال صلى الله عليه وسلم ( أفضل الصدقة صدقة في رمضان
“நபி (ஸல்) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமழானில் நிறைவேற்றப்படும் தருமமே மேலான தருமம்” என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்  (ரலி)  (திர்மிதி)
  1. குரானை தினமும் ஓதுவோம்
عن عبد اللّه بن عمرو بن العاص رضي اللّه عنه أن النبي ص قال: «الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة، يقول الصيام: أي رب منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه، ويقول القرآن: منعته النوم بالليل فشفعني فيه، قال فيشفّعان». (رواه أحمد) நோன்பு பரிந்து பேசும் : 'நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், 'நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன், இவன் விசயத்தில் பரிந்துரைப்பாயாக'! அல் குர்ஆன் கூறும் 'நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன். எனவே இவனுக்கு
பரிந்துரை செய்வாயாக' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) (அஹ்மத்)
    9. இரட்டிப்பு மகிழ்ச்சி
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : (للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ) رواه البخاري
நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி : 'நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள்     உள்ளன: ஒன்று- அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது-   (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது ' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா  (ரலி)  (புஹாரி)
    10.  நோன்பு திறப்பில் அவசரம்
تعجيل الفطور: لقوله صلى الله عليه وسلم: (لا تزال أمتي بخير ما عجلوا الفطر ) متفق عليه
எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம்வரை நன்மையில் இருக்கின்றனர்' என நபி (ஸல்) கூறினார்கள். நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப் படுத்துபவர்களாவர்' என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)
கூறினார்கள்
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஃத் (ரலி) (புகாரி)
  1. ஸஹர் உணவு

عن أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً " رواه البخاري
நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),புகாரி

12.லைலத்துல் கத்ரின் சிறப்பு
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: مَنْ يَقُمْ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْذَنْبِهِ (رواه البخاري)
லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள்மன்னிக்கப்படும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார், புகாரி

13. ஸதக்கத்துல் ஃபித்ர்.

عَنْ ابن عمر رضي الله عنهما ، قال: (فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان صاعاً من تمر أو صاعاً من شعير .. على الحر والعبد والذكر والأنثىوالصغير والكبير من المسلمين) (رواه البخاري)
முஸ்லிம்களிடையேயுள்ள அடிமை, சுதந்திரமானவர் ஆண், பெண் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையை நோன்புப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ,புகாரி
   
 தொகுப்பு அப்துல் காதர் மன்பயி. 

0 comments:

Post a Comment