Wednesday, August 24, 2011

கலைஞர் டி.வி.யுடன் எனக்கு தொடர்பு இல்லை; கட்டுச் சோற்றுக்குள் மறைய முயலும் கனிமொழி.


கலைஞர் டி.வி.யுடன் எனக்கு தொடர்பு இல்லை;

 கட்டுச் சோற்றுக்குள் மறைய முயலும் கனிமொழி.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் காரணமாக கனிமொழி எம்.பி. கடந்த மே 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இருவரது ஜாமீன் மனுக்களும், அவை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில்  விசாரணையில் உள்ளது. சாஹித் உஸ்மான் பல்வாவின் டி.பி.ரியால்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பாக கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில்,சமீபத்தில் நீதிபதியிடம் பேசும்போது தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த கனிமொழி,  "கலைஞர் டி.வி.க்கும் எனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை. அந்த நிறுவனம் எப்படி இயங்குகிறது, அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது' என்று அவர் கூறியுள்ளார்.
கலைஞர் டிவிக்கும் தனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை என்று கனிமொழி எந்த அர்த்தத்தில் கூறுகிறார் என்று தெரியவில்லை. தான் அந்த டிவியின் பாங்குதாரர் இல்லை என்று சொல்ல வருகிறாரா? அவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் கனிமொழி பங்குதாரர் தான் என்று அவரது தந்தையே வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
“சன்” தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்து பிரிந்ததையொட்டி – 18-10-2005 அன்று “சன்” தொலைக்காட்சி நிறுவனத்தால் தரப்பட்ட தொகை 100 கோடி ரூபாயில் – 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்திய பின் எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது என் இளைய மகள் கனிமொழி தனக்குக் கிடைத்த 2 கோடி ரூபாயை பங்குத்தொகையாக செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று அதற்கு ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்கிறார் கலைஞர்.
 
பிறகு எதில் தனக்கு தொடர்பு இல்லை என்கிறார் கனிமொழி? நிர்வாக விஷயத்திலா? நிர்வாகத்தில் இவர் தலையிட்டாலும், தலையிடா விட்டாலும் பங்குதாரர் என்ற வகையில் ஒரு பெருந்தொகை கலைஞர் டிவிக்கு வந்தது தனக்கு தெரியாது என்பது கட்டுச் சோற்றுக்குள் கலைஞர் டிவியை மறைக்க முயல்கிறார் என்பதைவிட இவரே மறைய முயல்கிறார் என்பதுதான்  உள்ளங்கை நெல்லிக்கனியாக புலப்படுகிறது.








 -முகவை அப்பாஸ்.

0 comments:

Post a Comment