Friday, October 21, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ;நான் பாராளுமன்ற உறுப்பினரான பின் ஏதாவது வன்முறைகள் நடந்திருக்குமா, யாருக்காவது நெருக்கடி கொடுத்திருப்போமா. இல்லையே சாதியின் பெயரால் வன்முறைகள் தூண்டப்பட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம்.  
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; என்ன பேசுறோம்னு தெரிஞ்சுக்கிட்டுத்தான் பேசுறீங்களா? எம்.பி. ஆன பிறகு வன்முறை நடந்துச்சான்னு கேக்குறீங்களே! அப்ப அதுக்கு முன்னாடி வன்முறை நடந்துச்சுன்னு சொல்லவர்றீகளா?
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த்; தே.மு.தி.க.வில் நடந்த ஒரு சம்பவம் என்பது நேற்று ஒரு எம்.எல்.ஏ.,; சரித்திரம் என்பது இன்று 29 எம்.எல்.ஏ.,; அது சாதனையாவது நாளை... நான் சொல்லமாட்டேன்; உங்கள் கையில்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; இன்று சரித்திரம் படைச்சது அதாவது 29 எம்.எல்.ஏ.,ஜெயிச்சது கூட்டணி புண்ணியத்தில் தானே! தனிச்சு நின்ன காலத்துல நீங்க தனி ஆளாத்தான ஜெயிக்க முடிஞ்சதுங்கிறத மறந்துட்டீங்களா?
 
பத்திரிக்கை செய்தி; கணவருக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; ஆம்பளைங்கதான் பொண்டாட்டிக்கு தெரியாம ரெண்டாம் கல்யாணம் பன்ன முடியுமா? எங்களாலயும்  முடியும்னு காட்ட பொம்பளைங்களும் கெளம்பீட்டாங்களா?  நாடு உருப்பட்ட மாதிரித்தான்.
 
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்; பாட்டாளி மக்கள் கட்சி இனிமேல் எந்தக் காலத்திலும் திராவிட கட்சிகளுடன் கூட்டும் இல்லை. ஒட்டும் இல்லை. உறவும் இல்லை. திராவிட கட்சிகளை வேரறுத்து அடியோடு ஒழிப்பதே தலையாய கடமையாக கொண்டுள்ளோம்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; திராவிடக் கட்சிகளை நீங்க ஒழிக்கப் போறீங்களா? இல்ல நீங்க ஒழியப் போறீங்களான்னு மக்கள் முடிவு பண்ணட்டும். ஆமா திராவிடக்கட்சிகளை ஒழிப்போம்னு சொல்ற நீங்க, நடத்துறது ''ஆரியக்'கட்சியான்னு ஒரு சந்தேகமுங்க.
 
பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன்; பா.ஜ., ஆளும் மாநிலங்கள் பல சாதனை புரிந்துள்ளன.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; எடியூரப்பா மாதிரி முறைகேடுக்காக முதல்வர் பதவியை இழந்து, சிறைவாசம் அனுபவிக்கிறாரே! இது மாதிரி சாதனையத்தான சொல்றீங்க?
 

0 comments:

Post a Comment