Sunday, October 30, 2011

அமைப்புகள் அரசியல்கள் இவற்றை எல்லாம் கடந்து இறையில்ல மீட்பு போரில் பங்கேற்க ஆயத்தமாகுவீர்!!-வேங்கை.சு.செ.இப்ராஹீம்


கொள்கை முழக்கம் எழுப்பிய "இந்திய தவ்ஹீத் ஜமாஅத்"தின் ஓர் இலட்சிய பயணம்!


சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்களின் இதயங்களை கீறி கிழித்தது அந்த மறக்கமுடியாத சம்பவம் இல்லை...இல்லை... திட்டமிட்டசதி... 
பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன் என்கிற துரோக வழியில் முஸ்லிம்களின் இறையில்லத்தை காவியுடை கயவர்கள் இடித்து தரைமட்டமாக்கியத்தை எட்டி நின்று வேடிக்கை பார்த்தது அன்றைய பிரதமர் "புன்னகை மன்னன்" நரசிம்மராவின் தலைமையிலான காங்கிரஸ் அரசு...  
அன்றைய டிசம்பர் 6 நாள்காட்டிகளில் வேண்டுமானால் மறைந்து மக்கி மண்ணோடு மண்ணாகி இருக்கலாம் ஆனால் முஸ்லிம்களின் மனங்களில் அந்த ஆறு மாறாத  வடு... 450 ஆண்டுகாலமாக முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமாக கம்பீரமாக காட்சியளித்த பாபரி மஸ்ஜீத் பாவிகளின் கோடாலி முனைகளின் கோரப்பசிக்கு இரையானது. இறையாண்மை பற்றி மதசார்பின்மை பற்றி உலகிற்கே உபதேசம் செய்து வந்த இந்தியா இந்த இழிவான செயலால் உலக அரங்கில் தலைகுனிந்தது...
இறையில்லத்தை பறிகொடுத்துவிட்டு கைசேதமுற்ற மக்களாக  முஸ்லிம்கள் கலங்கி நின்றபோது வெந்த புன்ணிலேயே வேல் பாய்ச்சபடுவது  போல அப்பாவி முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டார்கள். முஸ்லிம்களின் கோடிகணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டது...
இந்த அநியாய அக்கிரமங்களை எல்லாம் மதசார்பற்ற அரசு வேடிக்கைபார்த்தது....!!!

பாபர் மஸ்ஜீத் இடிக்கபட்டதற்க்கும் அதன் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாலபடுத்தபட்டவர்கள் அடுத்து வந்த காலங்களில் நாட்டின் மிக முக்கிய பதவிகளில் அமர்ந்து நாட்டை வலம் வந்ததுதான் அநாகரீகத்தின் உச்சம்... 
முஸ்லிம்களால் நடத்தப்பட்ட தொடர் நீதி போராட்டங்கள்... சட்டத்திற்கும் நாட்டின் ஜனநாயகத்திற்கும் மதிபளித்த பொதுக்கூட்டங்கள்... எதுவுமே முஸ்லிம்களுக்கு நீதியை தரவில்லை என்பது மறக்க முடியாத மறுக்க முடியாத உண்மை...

பல்லாண்டுகால விசாரணைகள்... பல்லாயிரக்கணக்கான சாட்சிகள்... பலநூறு பக்க அறிக்கைகள்... அனைத்துமே குற்றமிலைத்தவர்களுக்கே கொடிபிடித்தது... முஸ்லிம்களின் இறுதிபட்ச நம்பிக்கை நீதிமன்றம்... அதன் தீர்ப்பும் கடந்த ஆண்டு வந்தது... உரியவனுக்கு ஒரு சிறு பங்கும் அத்துமீறியவனுக்கு இரண்டு பங்குமென அழகான அசிங்கத்தையே நீதிமன்றமும் நிறைவேற்றியது...

பொறுமையைகொண்டும் தொழுகையைகொண்டும் அல்லாஹுவின் பாதுகாப்பை நாடும் முஸ்லிம்கள் அமைதியாக  இந்த அக்கிரமத்தீர்ப்பையும்  கவனித்தார்கள்... இடிக்கப்பட்டது. அல்லாஹுவின் இல்லம்... அதனை மீட்க்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமை...
அந்த மீட்பு போராட்டத்தில் உயிரே போனாலும் கவலை இல்லை... சிறைபடுத்தபட்டாலும் ஏன் சிறை சேதமுற்றாலும் சிரித்தமுகத்துடன் ஷஹீதாவோம் உயர்நீதிமன்றத்தின் அநீதி தீர்ப்பு வெளியாகிய சில நாட்களிலேயே தமிழகத்தின் தலைநகரத்தில் கொள்கை முழக்கம் எழுப்பியது "இந்திய தவ்ஹீத் ஜமாஅத்"

அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் அனுமதி மறுக்கப்பட்டபோதும் வீரியமாக சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டது "இந்திய தவ்ஹீத் ஜமாஅத்" இப்படியாக பாபர் மஸ்ஜீத் சம்மந்தமான அநீதி தீர்ப்பை எதிர்த்து முதலில் களமிறங்கிய பெருமை "இந்திய தவ்ஹீத் ஜமாஅத்" அமைப்பையே சாரும்... இந்தியாவின் மற்ற மாநில முஸ்லிம்களுக்கும் இதஜவின் போராட்டம் வீரியத்தையும் போராட தைரியத்தையும் கொடுத்தது என்பது மிகைபடுத்தப்பட்ட வார்த்தையல்ல...
போராட்டங்கள் நீர்த்துபோனால் எஞ்சியுள்ள முஸ்லிம்களின் உடைமைகளும் காணமல் போய் விடும். ஆகவே தொடர் போராட்டங்கள் முக்கியமாகியது... அதுவும் மற்ற சமூகமக்களும் நமது போராட்டத்தின் நியாயத்தை உணர வேண்டும் நாம் இழந்த நமது சொத்தைத்தான் மீட்க்க போராடுகிறோம் என்கிற உண்மை அவர்களுக்கும் விளங்கவேண்டியது அவசியம்... ஆம் அந்த பொறுப்பையும் இதே அநீதி தீர்ப்புக்கு எதிராக முதல் அஸ்திரத்தை ஏவிய இந்திய தவ்ஹீத் ஜமாத்தே ஏற்றுள்ளது"அல்ஹம்துலில்லாஹ்"

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ம் தேதிமுதல் டிசம்பர் 5 ம் தேதிவரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் "பாபரி மஸ்ஜீத் மீட்பு ரதயாத்திரை" நடத்துகிறது. இதன்மூலமாக முஸ்லிம்களின் நியாயங்கள் நடுநிலையான மற்றசமூக மக்களுக்கும் தெரியபடுவதொடு அக்கிரமக்காரர்களின் தீர்ப்பிற்கு எதிராக சகோதர சமுதாயங்களும் நம்முடன் கைகோர்க்கும் நல்ல வாய்ப்பை பெற முடியும்... இதஜவின் இப்பயணம் மிக அவசியமானது நமது உரிமைகளை நிலைநாட்டிட நமது வலிமையை அரசுக்கும் அசூரர்களுக்கும் தெரிவித்திட இப்பயணம் இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக உதவிடும்...
 
"இந்திய தவ்ஹீத் ஜமாஅத்"
 என்கிற அமைப்பு நடத்துவதால் இப்பயணபோர் அந்த அமைப்பிற்கான
பேரணியோ ஊர்வலமோ அல்ல ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஜீவாதார மீட்புக்கான ஆரம்பம்...
தமிழகத்தில் இயங்கிவரும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சிகள் இந்த பயணத்தில்
பங்கேற்க வேண்டியது சமுதாய கடமை. அனைத்து ஊர் முஹல்லாஹ் ஜமாத்துகளும் முழுமையாக
ஆதரவு தரவேண்டிய நமது இறையில்ல மீட்பு போராட்டம் இது... ரதயாத்திரை பயணம் வலம் வரும் பகுதிகளில் வாழக்கூடிய முஸ்லிம்கள் முஹல்லாஹ் ஜமாத்துக்கள் பெருவாரியாக திரண்டு பங்கேற்க வேண்டும்...

அன்பிற்கினிய சமுதாய சொந்தங்களே நல்லது யார் செய்தாலும் நாம் கைகொடுக்க வேண்டும்... எல்லாம் வல்ல அல்லாஹுவின் மாபெரும் துணையுடன் "இந்திய தவ்ஹீத் ஜமாஅத்"நடத்தவுள்ள இந்த "பாபரி மஸ்ஜீத் மீட்பு ரதயாத்திரை" சிறப்பான வெற்றியடைய அந்த வெற்றியின் மூலமாக நமது ஒற்றுமையும் அடங்க மறுக்கும் ஜனநாயக போர்க்குணமும் ஆளுவோருக்கும் ஆளத்துடிப்போருக்கும் அறியத்தருவோம்.
இடிக்கப்பட்ட இறையில்ல இடத்தை முழுமையாக மீட்டு இன்ஷாஅல்லாஹ் அதே இடத்தில் மீண்டும் கம்பீரமாக "பாபரி மஸ்ஜீத்"தை கட்டமைப்போம்.

இந்த வேளையில் இத்தகைய அதிமுக்கியமான போராட்டத்தை தனக்கே  உரிய தனிபாணியுடன் வீரியமாக முன்னெடுத்துள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு தொண்டர்களுக்கு அல்லாஹு ரப்புல் ஆலமீன் அனைதுவகையில் வலிமையை தந்திட திடகாத்திரமான உடல்நலத்தையும் மன வலிமையையும் அருளிட அனைவரும் மனதார துஆச் செய்வோம்...

பாபர் மஸ்ஜீத் மீட்பு நமது உரிமை... அதற்க்கான வெற்றி நமக்காக காத்திருக்கும் இடம் மறுமை! இந்தியா நமது தேசம்... இஸ்லாம் நமது சுவாசம்!!

அமைப்புகள் அரசியல்கள் இவற்றை எல்லாம் கடந்து இறையில்ல மீட்பு போரில் பங்கேற்க ஆயத்தமாகுவீர்!!
இந்திய திருநாட்டில் மற்றவர்களின் ரத்தங்களில் ரத்தயாத்திரை நடத்துவோருக்கு மத்தியில் நாம் நமது உரிமைக்கான ரதயாத்திரையை வலிமையாக நடத்திகாட்டுவோம்...!! இன்ஷாஅல்லாஹ்...!!

வேங்கை.சு.செ.இப்ராஹீம்

0 comments:

Post a Comment