Saturday, October 8, 2011

பி.ஜே.வின் பிரிவினை பேதமும், நமது ஒற்றுமை வாதமும்!

பி.ஜே.வின் பிரிவினை  பேதமும்,
நமது  ஒற்றுமை வாதமும்! 


அஸ்ஸலாமு அழைக்கும்  
கேள்வி: ஒற்றுமையைக் குலைக்கும் சைத்தான் வேலையில் அண்ணன் இறங்கிவிட்டதாக செங்கிஸ்கான் சொல்லியிருக்கிறாரே?
-முகவை முத்து மஸ்தான்
அண்ணன் ஒற்றுமையைக் குலைப்பவராகவே இருக்கட்டும். அண்ணன் ஜமாத்தின் எதிரிகள் எல்லாம் ஒரே அணியில் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபட வேண்டியது தானே! ஒரு பயலும் சேரமாட்டான். இப்போ டிசம்பர் வருது பாருங்க. அதில் ஆர்ப்பாட்டத்துக்கு எல்லாரும் வேண்டாம். அண்ணனைக் குறை சொல்லும் இந்த மாமா ஜமாத்தினர் மாமா கட்சியினரோடு சேர்ந்து ஒரே பேனரில் செய்வார்களா என்று கேட்டுச் சொல்லுங்கள்.    a.ஜாகிர் உசேன் சவுதி

ஒற்றுமை பற்றிப் பேசினாலே அண்ணன் வைக்கும் வாதம் ' முதலில் அவங்களை சேர சொல்லு! என்பது தான் ! இந்த வாதம் சரியா என இந்த கேள்வி பதிலில் பார்ப்போம்!

முதலில் அண்ணன் ஒற்றுமையை குலைப்பவர் என ஒப்புக் கொண்டதற்கு நன்றி !

இரண்டாவதாக அண்ணன் ஜமாஅத்தின் எதிரிகள் ஒரு கொடியின் கீழ் 
ஒன்று சேர வேண்டியது தானே என்கிறார்! 

ஷரியத் சட்டத்திற்கு   எதிரான  கட்டாய  திருமண  பதிவு  சட்டம்  கடந்த  திமுக  அரசால்  கொண்டு  வரப்பட்ட போது சமுதாய  அமைப்புகள்  அனைத்தும்  ஒன்றிணைந்து  எதிர்த்தோம்  சங்க  பரிவாரங்களின்  குரலாக ஒலித்து அந்த சட்டத்தை ஆதரித்த  இவர்களைத்  தவிர  !

இஸ்லாத்தின் எதிரிகளான காதியாநிகளையும் , அஹ்லே குரான் எனும்  19 கூட்டத்தாரையும்  எதிர்க்க  ஏற்கனவே  சமுதாயம் ஒன்று சேர்ந்து மேலப்பலயத்தில் ஒரே  குரலில்  ஒலித்தது  இவர்களைத் தவிர !  

ரமலான்  மாதம்  என்றும்  பாராமல்  பள்ளிவாசல்  வாசலில்    வைத்து  சொந்த  முஸ்லிம்  சகோதரனையே  சுட்டுக்  கொன்ற  இவர்களின்  குரூர  அரசியலை  கூட்டமைப்பாக  ஒன்று சேர்ந்து  கண்டித்தோம் !

மாற்றாருக்கு  மாமா  வேலை  பார்த்து மமக வை  மண்ணை  கவ்வ  வைப்பேன்  என இவர்கள்  தெருத்  தெருவாக  பிரசாரம்  செய்த     போது சகோதர   முஸ்லிம் அமைப்புகளோடு  கரம்  கோர்த்து ம.ம.க,வை வெற்றி  பெற  வைக்க  ஒரே பானரில்  ஒன்றிணைந்து  நின்றோம்!  வென்றோம்  !

எல்லா  விசயத்திலும்  எல்லோரும்  ஒரே கருத்தில்  இணைய  முடியா  விட்டாலும் ஒத்த கருத்துள்ள  விசயங்களில்  இணைந்திருக்கிறோம் !

டிசம்பர் - 6 இல் ஒன்றிணைய முடியுமா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு நாம் சொல்வது என்னவென்றால் ' எங்களை விடுங்கள் நீங்கள் ஒரு ஜமாஅத்தை   சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில சேர்ந்து நடத்தாமல் கடந்த காலங்களில் டிசம்பர் ஆறு போராட்டத்தை ஏன் மாவட்டம் தோறும் தனித்தனியாக நடத்தினீர்கள் ? என்று கேட்டால்  பல இடங்களில் எதிர்ப்பை பதிவு செய்தால் அரசு கவனிக்கும் என காரணம் சொல்வீர்கள்! அதே காரணம் பல அமைப்புகள் தனித்தனியே போராட்டம் நடத்துவதற்கு பொருந்தாதா? 




அப்படியே      டிசம்பர் 6 இல் எங்களால்  ஒன்றிணைய முடியாமல்  போனால்  அதனால்   ஒற்றுமை  என்ற  கருத்தே  தவறாகி  விடுமா ? சாதியால்  பிரிந்து  கிடக்கும்  மக்களை  நாம் இஸ்லாத்தில்  பிரிவுகள்  இல்லை  வாருங்கள்  ஓரிறை  கொள்கையின்  பால்  ஒன்றிணைவோம்  என்று அழைக்கும்  போது நீங்கள் எல்லாம்  ஒற்றுமையாகி  விட்டு  வாருங்கள் என பிற  மத  சகோதரர்கள்  நம்  அழைப்பை புறக்கணித்தல்   அது  சரியாகுமா ? ஒட்டு  மொத்த  சமுதாயத்தையும்  குரான் ஹதிசின்  பால்  ஒன்றினது  விட்டுத்தான்  இஸ்லாமிய  பிரசாரம் செய்ய  வேண்டுமா ? அப்படி  ஒன்று படுத்தி  விட்டு   செய்வதுதான்  சரி  என்றால்  நீங்கள் முதலில் குரான் ஹதிஸ்  என்று சொல்பவர்களிடம்  ஒற்றுமை  ஏற்படுத்தி  விட்டு மத்கபை  விமர்சியுங்கள்  எனக்  கூறும்  சுன்னத்  ஜமாஅத் ஆலிம்களின்  வாதத்தை  ஏற்றுக்  கொள்வீர்களா ? 

  உங்களுக்கும்  எங்களுக்கும்  பொதுவான  கருத்தின்  பக்கம்  வாருங்கள் என யூத   கிறிஸ்தவர்களை  அழைக்க  சொல்லும்  இறைவன்  அழைப்பை மறுத்தால்  நாங்கள்  முஸ்லிம்கள்  என்பதற்கு   நீங்கள் சாட்சியாக  இருங்கள்  என சொல்லச்  சொல்கிறான்.  மொத்த முஸ்லிம் சமுதாயதிற்கு  மத்தியில்  உள்ள  முரண்பாடுகள்  அதிகமா ? உடன்பாடுகள்  அதிகமா? உடன்பாடுகள் தான்  அதிகம்  எனும்  போது அதில்  ஒற்றுமையாக  இருப்பதை  விட்டு விட்டு
விலகி  நிற்கும்  நீங்கள் தான் சத்தியத்தை  மனமுரண்டக  மறுக்கிறீர்கள்! 


இட  ஒதுக்கீடு  எனும் பொதுவான  விசயததின்  பால் அனைவரையும்  அழைக்க முடியும்  அதில் தன்னை  தர்காவாதி  எனும் ஜே .எம் .ஹாருன்   உடன்  ஒன்றிணைய  முடியும். அதே விசயத்திற்காக  கேடுகெட்ட  அரசியல்வாதிகளோடு  தேர்தல்  நேரத்தில்  ஒரே மேடையில்  ஒன்றிணைய முடியும் ! ஆனால்  முஸ்லிம்களோடு  கொள்கை  சகோதர்களோடு  பொதுவான விசயத்தில்  ஒன்றிணைய முடியாதா  ? சிந்தியுங்கள்! நமையிலும்  இறை  அச்சத்திலும்  ஒருவருக்கொருவர்  இனைந்து  கொள்ளுங்கள்.    
  
-இப்னு ஹுசைன் 

0 comments:

Post a Comment