Friday, October 7, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்


பத்திரிக்கை செய்தி; பசுவைக் கொன்றால், ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, குஜராத் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; பசுவை கொன்றால் தண்டனை கொடுக்குற மாநிலத்துல, 2000  மனித உயிர்கள் கொல்லப்பட்டதுக்கு தண்டனை வழங்க ஆளைக்காணோம். மாட்டுக்கு இருக்குற மதிப்பு மனுஷனுக்கு இல்லையோ?
 
அன்னா ஹசாரே; தங்கள் அபிமானத்துக்குரிய அமைச்சர்கள் கேட்டுக் கொண்டதால் தான், உண்ணாவிரதத்தை நான் முடித்துக் கொண்டதாக, சில அரசு ஏஜன்சிகள் தகவல் பரப்புகின்றன. இது பொய் பிரசாரம்.
 
 பஞ்ச் பட்டிக்காட்டான்;  ஒரு மத்திய அமைச்சர் சாதுர்யமாக பேசி,  உங்க உண்ணாவிரத்தை முடித்து வைத்தாக பத்திரிக்கைகளில் செய்தி வந்தப்ப மூச்சு விடமா இருந்த நீங்க, இப்ப திடீர்னு முழங்குறது ஏன்னு தெரியலையே?
 
மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேட்டி : எங்கள் கட்சி எந்தக் கட்சியின் பின்னாலும், ஓடவில்லை. எந்த விஷயத்தில் கண்டிக்க வேண்டுமோ, அந்த விஷயத்தில் கண்டிக்கிறோம். கண்மூடித்தனமான ஆதரவை நாங்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்;  எந்த கட்சி பின்னாலையும் ஓடலன்னு சொல்ற நீங்க, அண்ணாதிமுக கழட்டி விட்டவுடனே தனிச்சு நின்றிருந்தால்  நீங்க சொல்றது சரின்னு நம்பலாம். ஆனா தேமுதிக பின்னால ஓடிப்போய்  ஒட்டிக்கிட்டீங்களே! இதுக்கு என்ன அர்த்தமோ?
 
பா.ம.க., தலைவர் மணி பேச்சு: தனித்துப் போட்டி என்றதும், வேட்பாளராக நிற்க ஆள் கிடைக்கவில்லை என்றனர். தற்போது ஒரு பதவிக்கு, 10 பேர் வேட்பாளராக விண்ணப்பித்துள்ளனர்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; உங்க கட்சி மதுரை மேயர் வேட்பாளர் ஒதுங்குன பின்னாடி, மாற்று  வேட்பாளரை அறிவிக்க கூட முடியாம நீங்க தவிச்சத பாத்தாலே உங்க கட்சி பலம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமே!

0 comments:

Post a Comment