Monday, October 24, 2011

மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க. வெற்றியும் முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினையும்!

மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க. வெற்றியும் 
முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினையும்!




டந்து முடிந்த நகராட்சி மன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 2 நகராட்சிகளை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. அதில் ஒன்று நாகர்கோவில், மற்றொன்று மேட்டுப்பாளையம். இதில் நாகர்கோவில் பா.ஜ.க முன்பிருந்தே வலுவான நிலையில் இருந்து வந்துள்ளது. ஆனால் மேட்டுப்பாளையத்தில் முதன்முதலாக பா.ஜ.க வென்று நமக்கு ஒரு படிப்பினையை காட்டி இருக்கிறது.

அது நமக்குள் ஒற்றுமை இல்லாததையே காட்டி உள்ளது.
நான்கு முஸ்லிம் குடும்பங்கள் ஒரு ஊரில் இருந்தால் அங்கு ஐந்து ஜமாஅத்கள் இருக்கும், அவ்வளவு ஒற்றுமை நமக்குள். விரலை ஆட்டுபவனும், நீட்டுபவனும் சண்டையிட்டுக் கொண்டிருக்க, பார்த்துக் கொண்டிருந்தவன் ஜெயித்து விட்டான்.

இந்த நகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மற்றும் அவர்கள் பெற்ற வாக்குக்களை பாருங்கள்.

T.Sathish Kumar  (BJP)              – 11326

A.Nasar         (ADMK)                   – 9495
M.Abdul Hameed  (DMK)             – 5833
Sathyavathi Ganesh (Congress)  – 2101
T.Maharasan      (Independent)   – 1688
S.Jafar sadiq     (DMDK)              – 1456
Minnal Siraj      (PMK)                 – 737
Jayakumar        (Independent)    – 545
Rajagopal    (Independent)         – 456
C.Yugaraj        (Independent)       – 158
S.Jayaram        (Independent)      – 108
M.JafarSadiq      (Independent)    – 86

நான்கு முஸ்லீம்கள் நான்கு கட்சிகளில் நின்று, ஒருவரை ஒருவர் யாருக்காகவோ போராடி, இறுதியில் ஒரு பா.ஜ.க. கட்சிக்கு தொகுதியை தாரை வார்த்து விட்டோம்.
மாற்று மதத்தார்கள் ஒன்று பட்டு கட்சி பாகுபாடு பார்க்காமல் தெளிவாக ஒரே நபர்களுக்கு சிந்தாமல், சிதறாமல் தங்கள் வாக்குக்களை அளித்து வெற்றி பெற செய்து விட்டார்கள்.
இதே நாம் செய்திருந்தால், முஸ்லிம்கள் ஜாதி, மத வெறியர்கள் என்று ஊர் சொல்லி இருக்கும்.
இனி என்ன செய்யப் போகிறோம்? அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களுக்கும் நல்ல புத்தியையும் ஒற்றுமையையும் கொடுப்பானாக.

நூர்தீன்- தமிழ் முஸ்லிம் குழுமத்தில் 

0 comments:

Post a Comment