Wednesday, October 5, 2011

பெருகி வரும் கலாச்சார சீரழிவு ! கல்லூரி மாணவிகளுக்கிடையில் எஸ்.எம்.பாக்கர் கலந்துரையாடல் !


பெருகி வரும் கலாச்சார சீரழிவு ! கல்லூரி மாணவிகளுக்கிடையில் எஸ்.எம்.பாக்கர் கலந்துரையாடல் !

















கணினி யுகத்தில் நடந்து வரும் கலாச்சார சீரழிவுகளின் களம் ஆக விளங்கும் 
கல்லூரிகளில் அழைப்பு பணியினை மேற்கொள்ள அங்கு பயிலும் மாணவிகளை தயார் செய்யும் முகமாக சூலை மேடு அல்புர்கான் மற்றும் INTJ 
இனைந்து நடத்திய கருத்தரங்கம் நேற்று 05.10.11 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெற்றது!

சகோதரர் சம்சு தப்ரேஸ் தலைமை வகிக்க மாநில செயலாளர் செங்கிஸ் கான் 'இன்றைய சூழலில் முஸ்லிம் பெண்கள் ' எனும் தலைப்பில் காதல் எனும் பெயரில் நடை பெரும் சமுதாயத்தில் நடை பெரும் அவலங்களையும் , சங்க பரிவார கூட்டங்கள் நம் பெண்களை வீழ்த்த வைத்திருக்கும் திட்டங்களையும் வீழ்ந்ததன் விளைவாக வேற்று மததரோடு நம் பெண்கள் ஓடி சென்ற விசயங்களையும், அதனால் தலைமையகத்தில் சந்தித்த பல்வேறு வழக்குகளையும் குறிப்பிட்டுக் காட்டி இதில் இருந்து மீள்வதற்கு இஸ்லாம் கூறும் வழி வகைகளையும் விவரித்தார்.

இரண்டாவதாக பேசிய டாக்டர்.  ஆயிஷா 'நான் கடந்து வந்த பாதை' எனும் தலைப்பில் தன்னை இஸ்லாம் ஈர்த்த விதத்தையும் தான் நடத்தும் தஃ வா  சென்டரில் சந்திக்கும் பெண்களின் பிரச்சனைகளையும் விளக்கினார்.

மூன்றாவதாக பேசிய பேராசிரியர் ஹாஜா கனி நாளைய முஸ்லிம் பெண்கள் எனும் தலைப்பில் முஸ்லிம் பெண்கள் சந்திக்க வேண்டியுள்ள சவால்களை எடுத்து விளக்கினர்  

அடுத்ததாக பேசிய இக்பால் பிர்தவ்சி 'மறுமையில் முஸ்லிம் பெண்களின் நிலை' எனும் தலைப்பில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வகையில் 
மறுமையில் நேர்வழி பெற்ற  பெண்களுக்கு கிடைக்கும் வெகுமதிகளையும், வழிகெட்ட  பெண்களுக்கு நரகத்தில் கிடைக்கும் தண்டனைகளையும்  எடுத்துரைத்தார்.

 இறுதியாக பேசிய எஸ்.எம்.பாக்கர் சஹாப பெண்களின் தியாகத்தையும், அன்றைய முஸ்லிம் பெண்களுக்கு திருமண சுதந்திரம் , பொருளாதார 
சுதந்திரம், வழி பாட்டு சுதந்திரம் அனைத்தும் வழங்கப் பட்டிருந்தது.
ஆனால் வழி பாட்டு சுதந்திரம் பெரும்பாலான பள்ளிவாசல்களில் மறுக்கப் பட்டு   மற்ற வழி கேட்டு சுதந்திரங்கள் வழங்கப் பட்டுள்ளதை எடுத்துக் காட்டினார்.நடை பெற்ற அனைவரின் சொற்பொழிவில் இருந்தும்   மாணவிகளிடத்தில் கேள்வி கேட்டு பதில் வாங்கும் கருத்தரங்கமாக பாக்கர் கொண்டு சென்றது மாணவிகளிடத்தில் வரவேற்பை பெற்றது.

இறுதியாக நன்றியுரை கூறிய சம்சு தப்ரேஸ் ' நாங்கள் பெண்கள் கல்லூரிகளுக்குள் வர முடியாது நீங்கள் தான் இங்கு கேட்ட விசயங்களை அங்கே எடுத்து செல்லவேண்டும் ' என வந்திருந்த எராளமான கல்லூரி மாணவிகளிடம் அழைப்புப் பனியின் பொறுப்பை ஒப்படைத்தார். 

வந்திருந்த கல்லூரி மாணவிகள் களப் பணியாற்றும் பொறுப்பை சுமந்தவர்களாக மாதந்தோறும் இது போன்ற பயிற்சி வகுப்புகளை எங்களுக்கு நடத்த வேண்டும் கோரிக்கை வைத்தது நிகழ்ச்சி ஏற்பாட்டலர்களுக்கு  நிறைவை  தந்தது.   

         

0 comments:

Post a Comment