Tuesday, October 4, 2011

கடைய நல்லூர் பித்ரா குளறுபடி! இரண்டில் எது உண்மை?

கடைய நல்லூர் பித்ரா குளறுபடி!
இரண்டில் எது உண்மை?  


அஸ்ஸலாமு அலைக்கும் 

அன்புள்ள சகோதரர்களுக்கு ....

 பித்ரா எனும் ஏழை தர்மம் எனது கடையநல்லூரில் த த ஜ வெளியிட்டதற்கும் தலைமை வெளியிட்ட செய்தி தங்களின் பார்வைக்காக இணைத்துள்ளேன். 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை  மாவட்டம் கடையநல்லூர்டவுன் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 1800 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 1,88,365மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.





SEP 28, 2011


கடையநல்லூர் TNTJ கிளைகளின் ஃபித்ரா விபரம் (2011)



அன்புள்ள சகோதரர்களுக்கு... அஸ்ஸலாமு அலைக்கும்...
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் முன்னோடியான ஜமாஅத் என்பது தாங்கள் அறிந்ததே. யாருக்காகவும்,எதற்காகவும் கொள்கையில் சமரசமின்றி அல்லாஹ்வின் அருளால் மறுமை இலட்சியத்திற்காக லட்சோப,லட்சம் கொள்கை சொந்தங்களை தனதாக்கி இன்றளவும் தனது பயணத்தை தொடர்கிறது.அல்ஹம்துலில்லாஹ்.அந்த அடிப்படையில் இந்த ஜமாஅத்தையும்,அதன் தூய பணிகளையும் நம்பி சகோதரர்கள் வழங்கிய நோன்புப் பெருநாள் தர்மம் (ஃபித்ரா) 2011 க்கான கணக்கை உங்களுக்கு அறியத்தருகிறோம்.நிறையிருப்பின் அல்லாஹ்வை மட்டுமே சாரும்.குறையிருப்பின் எங்களைச் சாரும்.புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே...!
(பெரிதாக காண மேலே கிளிக் செய்யவும்)


 மொத்தம் 1,35,380 இதில் பயனடைந்த குடும்பத்தினர் 1500 என கடையநல்லூர் டவுண் கிளை வலைப்பூவில் காணலாம். ஆனால் தலைமை செய்தி 1800 குடும்பங்களுக்கு 1,88,365 என்று வெளியிட்டுள்ளார்கள். உண்மை இறைவன் மட்டுமே அறிவான்.

என்றும் அன்புடன் 
ஹிதாயத்.

0 comments:

Post a Comment