Sunday, October 30, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்!


காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேச்சு : தி.மு.க., குடும்பத்திற்காக நடத்தப்படும் கட்சி. கருணாநிதிக்கு கணுக்காலில் இருந்து தலை வரை மூளை. அவ்வளவு மூளையும் தன்னைப் பற்றியே சிந்திக்குமே தவிர, இந்த மண்ணைப் பற்றி சிந்திக்காது.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; அவரை  தமிழின தலைவர்னு சிலர் சொல்றதால, தன்னை பற்றி சிந்திப்பதே ஒட்டுமொத்த தமிழ் இனத்தை பற்றி சிந்திப்பதற்கு சமம் என்று நினைத்திருப்பார்.

சிவசேனா தலைவர் பால் தாக்கரே; "சில ஆண்டுகளுக்கு முன், அத்வானியை சந்தித்தபோது, நரேந்திர மோடியை, முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கூடாது என, அவரிடம் வலியுறுத்தினேன்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; இதுல ஒன்னும் ஆச்சர்யம்  இல்லையே? மோடியை பதவி நீக்கம் செய்யுங்கன்னு நீங்க சொன்னா அதுதான் ஆச்சர்யமான செய்தி.
 
சென்னை மாநகராட்சி மேயராகவிருக்கும் சைதை துரைசாமி; கடந்த மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; இது உங்களுக்கே நியாயமா இருக்கா? ஏற்கனவே உங்க அம்மா செஞ்ச ஆய்வுல அத்துணை முன்னாள் அமைச்சர்களும் உள்ளே-வெளியேன்னு இருக்கிறாங்க. இதுல நீங்க வேறயா?
 
உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து கருணாநிதி கருத்து;  ஆளுங்கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சில மாதங்களில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை நடத்தி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால், கடந்த காலத்தில் தி.மு.க. ஆளும் பொறுப்பை ஏற்றபோது உடனடியாக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி, அதில் பெருவாரியான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றி இருக்கிறோம்.
அதனால், இது ஒன்றும் புதுமை அல்ல.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; இதுவே தீர்ப்பு உங்களுக்கு சாதகமா வந்திருந்தா இப்பிடி சொல்வீங்களா? ''உடன்பிறப்பே! அம்மையாரின் ஐந்து மாத அடக்குமுறை ஆட்சியால் மக்கள் உள்ளம் வெந்து, இந்த உள்ளாட்சியில் கழகத்தை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். கழகம் மீண்டும் கோட்டையை கைப்பற்றும்.'' என்று சொல்லியிருப்பீங்கதானே!
 
ம.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் பேட்டிஒரு கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கட்சிக்கு, இனிமேல் தமிழகத்தில் எதிர்காலம் நிச்சயம் உண்டு என்பதை, தேர்தல் முடிவு சொல்லாமல் சொல்லியிருக்கிறது.
பஞ்ச் பட்டிக்காட்டான்; அப்ப தமிழகத்துல உங்க கட்சிக்கு எதிர்காலமே இல்லன்னு சொல்றீங்களா? ஏன்னா ஒருதடவை ஜெயலலிதா-ஒரு தடவை கருணாநிதின்னு கூட்டணி வச்சு உங்க கட்சிக்கு எந்த கொள்கையுமில்லன்னு பல தடவை நிருபிச்சிருக்கீங்களே!

0 comments:

Post a Comment