Friday, July 22, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்[39] just4jokes!


காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி
நாட்டில் ஊழலை ஒழிப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.  அதன் காரணமாகவே முன்னாள் மந்திரிகள்கூட ஜெயிலில் இருக்கிறார்கள். ஊழல் புகாருக்கு ஆளான ஆ. ராசாவும் மத்திய அரசின் நடவடிக்கை காரணமாகவே சிறையில் உள்ளார்.  
பஞ்ச் பட்டிக்காட்டான்; ராசா ஊழல் செய்யல; நாட்டுக்கு இழப்பை மட்டும் தான் ஏற்படுத்தினாருன்னு எல்லோரும் சொல்லிக்கிட்டு இருக்கையில, ராசா செஞ்சது ஊழல்தான்னு துணிச்சலா சொல்லீட்டிங்களே.
இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி:சோனியாவை நாட்டை விட்டு துரத்தினால் தான் நாடு நல்ல நிலைக்கு வரும்; இல்லையென்றால் குட்டிச்சுவராகி விடும்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; சரி. அதே மாதிரி அவங்களும் கைபர் போலன் கனவாய் வழியா வந்தவங்கள துரத்தினத்தான் நாடு உருப்படும்ன்னு சொன்னா என்னாகும்னு யோசிச்சீங்களா?
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி;  பயங்கரவாதம் தொடர்பான விஷயத்தில், தனது இரண்டுவிதமான மனப்போக்கை, மத்திய அரசு கைவிட வேண்டும். பயங்கரவாதத்தை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது என்ற அளவுக்கு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஞ்ச் பட்டிக்காட்டான்;  சபாஷ். இப்பத்தான் மக்கள் கருத்தை பிரதிபலிக்கிறமாதிரி சொல்லியிருக்கீங்க.
உள்துறை அமைச்சர் சிதம்பரம்; குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை விரைவில் பிடிப்போம். இந்தியாவுக்கு எதிரான அனைத்து அமைப்புகள் பற்றியும் விசாரிப்போம். பயங்கரவாதத்தை மையப் புள்ளியாகக் கொண்டு செயல்படும் பாகிஸ்தான், ஆப்கன் போன்ற நாடுகள், நமது அண்டை நாடுகளாக உள்ளன.
பஞ்ச் பட்டிக்காட்டான்;  குண்டு வெடிக்கும்  போது மட்டும் பயங்கரவாத நாடா தெரியுற ஆப்கானுக்கும்- பாகிஸ்தானுக்கும் பிரதமரு, மந்திரி, உள்துறை செயலாளர்னு விசிட் அடிக்கிறீங்களே அது எப்பிடி?
பிரதமர் மன்மோகன் சிங்;  ""எதிர்காலத்தில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள், மிக விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; இனிமே நடக்காம பாத்துக்கிறது கிடக்கட்டும். இதுவரைக்கும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ள  குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை குடுத்தீங்க?

0 comments:

Post a Comment