Monday, July 25, 2011

லீசுக்கு விடப்பட்டதா ஆன்லைன் பீஜே...?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

கேள்வி; ஆன்லைன் பீஜே இணையதளத்தை ததஜவுக்கு லீசுக்கு விட்டுள்ளதாக பொய்யன் தளம் கூறுகிறதே?
-அப்துர்ரஹ்மான் தொண்டி.
பதில்; ஆன்லைன் பீஜே இணையதளம் பெயர் மாற்றம்  செய்வது தான் நியாயம் என்று நாம் சொன்ன கருத்தை மறுக்க வழியின்றி, லீசுக்கு விட்டிருப்பதாக  பொய்யனின் பினாமியான பொய்யன் தளம் புலம்புகிறது. பொய்யன் கும்பலின் தலைவரான அண்ணன் பீஜே, தனது இணையதளம் தொடர்பான கேள்விக்கு  கூட பதிலளிக்க இயலாத பலவீனத்தில் இருக்கிறார் என்பது பரிதாபத்திற்குரியதுதான்
சரி. பொய்யனின் பினாமியின் ஆசைப்படியே ஆன்லைன் பீஜே லீசுக்கு விடப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், 
இதைப்பற்றி அண்ணன் பீஜே எங்கே- எப்போது அறிவித்துள்ளார் என்று பொய்யனின் பினாமி காட்டவேண்டும். 
அடுத்து லீசுக்கு கொடுத்துவிட்ட அண்ணன் பீஜே,  ததஜ எனும் பொது 
அமைப்பின்  கீழ் இயங்கும், பொது மக்களின் பணத்தில் இயங்கும் இந்த இணையதளத்தில் ததஜவின் ஏனைய அறிஞர்கள் உரையை கூட பதியவிடாமல் தன்னுடைய சரக்கை மட்டும் கடை விரிப்பது ஏன்?
பொய்யனின் பினாமியின் பாஷையில் சொல்லவேண்டுமானால், லீசுக்கு எடுத்த பழனிமுருகன் பஸ்ஸில் எந்த பயணியை வேண்டுமானலும் ஏற்றும் உரிமை லீசுக்கு எடுத்தவருக்கு இருக்க, லீசுக்கு கொடுத்த பழனி முருகன், 'பஸ்ஸில் வேறு எந்த பயணியையும் ஏற்றக்கூடாது; நான் மட்டுமே ஏறி பயணிப்பேன். என்னிடத்தில் டிக்கட்டும் வாங்கக்கூடாது என்று சொன்னால் அது எப்படி முட்டாள்தனமோ, அதைப் போல் லீசுக்கு எடுத்த ததஜ'வின் ஏனைய தவ்ஹீத் அறிஞர்களின் உரையை இங்கே பதியக்கூடாது; என்னுடைய சரக்கு மட்டும் தான் இருக்கவேண்டும்; ஏனைய அறிஞர்களின் உரையை பாதுகாக்க வேறு இணையதளம் தொடங்குங்கள் என்று சொல்லும் அண்ணன் பீஜேயை மட்டும் எப்படி அறிவாளி என்று இந்த தக்லீதுகள் ஏற்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஆக, யாரோ கடைக்கு வாடகை கட்ட, நோகாமல் தனது சரக்கை விற்பவனைப் போல், ஆன்லைன் பீஜே என்பது பொதுப்பணத்தில் தனது பெயரில் பீஜே நடத்தும் ஒரு இணையதளம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
-அப்துல்முஹைமீன்.

0 comments:

Post a Comment