Friday, July 22, 2011

சென்னையில் மதுக்கடை முற்றுகை! பாக்கர் உள்ளிட்டோர் கைதாகி விடுதலை!


சென்னையில் மதுக்கடை முற்றுகை!
பாக்கர் உள்ளிட்டோர் கைதாகி விடுதலை!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள புகழ் பெற்ற சித்திக் சரை எனும் புகழ் பெற்ற பள்ளிவாசல் உள்ளது! வெளி மாநிலத்தில் இருந்து வரும் முஸ்லிம்கள் மிகக் குறைந்த வாடகையில் தங்கும் விடுதியும் கொண்ட இந்த பள்ளிவாசல் அருகில், வழி பட்டு தளங்களுக்கு அருகில் மதுக்கடை இருக்கக் கூடாது எனும் உச்ச நீதி மன்ற நெறி முறைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு ஒரு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது! 

இதை அகற்றக் கோரி மஸ்ஜித் நிர்வாகமும் பகுதி மக்களும் பல புகார்கள் அளித்தும் எந்தப் பலனும் இல்லாததால் அவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை அணுகினர்! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சென்ட்ரல் கிளை மற்றும் வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக களத்தில் இறங்கி மாவட்ட நிர்வாகத்திடம் பேசி பலன் இல்லாததால் 
நேற்று ஜும்மா தொழுகைக்குப் பின் மதுக்கடை முற்றுகை அறிவித்தனர்.

மதியம் சுமார் 3 மணிக்கு போராட்டத்தை அறிவித்திருந்தாலும் காலை முதலே மதுக்கடை அடைக்கப் பட்டு போலிஸ் படை குவிக்கப் பட்டு இருந்தது! கைது நிச்சயம் எனத் தெரிந்தும் ஏரளமான ஆண்களும் பெண்களும் குவிந்தனர்.   கூட்டம் சேருவதைக் கண்ட 
காவல் துறை மூன்று மணிக்கு முன்னரே கைது நடவடிக்கையை துவங்கினர்.

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், துணை போது செயலர் இக்பால் , மாநில செயலாளர் பிர்தவ்ஸ் , இணையதுல்லாஹ் 





வட சென்னை  மாவட்ட நிர்வாகிகள் யூசுப் , அன்சாரி, புஹாரி, இஸ்மாயில் சென்றால் கிளை நிர்வாகி பாவா உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கைதாகி மண்டபம் ஒன்றில் வைக்கப் பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.        

0 comments:

Post a Comment