Thursday, July 14, 2011

செங்கிஸ்கான்ஆன்லைன் இணையதளத்தை நிறுத்த தயார்!. துபையில் முஜீப்.காம் இணையத்திற்கு அளித்த பேட்டியில் சகோ.செங்கிஸ்கான் அறைகூவல்!.


இந்திய தவ்ஹீது ஜமாத் நிர்வாகிகள் வளைகுடா நாடுகளில் தங்களின் சுற்றுப்பயனத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதின் முதற்கட்டமாக துபைக்கு வருகை புரிந்திருந்தனர். குறிப்பாக சகோதரர் எஸ்.எம். பாக்கர் மற்றும் சகோதரர் செங்கிஸ்கான் ஆகியோர் நம் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளிக்க முன்வந்தனர். முதலில் பேட்டியளிதமைக்கு நம் இணையத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். மேலும் இந்த பேட்டியை எடுத்து தந்த சகோதரர்கள் அதிரை அமீன், அதிரை அப்துல்காதர் ஆகியோருக்கும் நம் மனமார்ந்த நன்றிகள்.

இனி சகோதரர் செங்கிஸ்கான் அவர்களின் பேட்டியிலிருந்து....

கேள்வி: இ.த.ஜ தலைவரிடம் பேட்டி கண்டோம். அதில் ஒருசிலவற்றை தங்களிடம் கேட்குமாறு கூறினார்கள். குறிப்பாக செங்கிஸ்கான் ஆன்லைன் இணையதளத்தில், நீங்கள் எழுதுவதை நீங்கள் நியாப்படுத்தினாலும், உங்களின் எழுத்துக்கள் விமர்சனத்திற்கு உட்பட்டதாக உள்ளதே?.


பதில்: கடந்த 2010 மே மாதம் வரை செங்கிஸ்கான் ஆன்லைன் என்ற நம் இணையதளம் இல்லை!.. இது எப்போது ஆரம்பிக்கப்பட்டது எனில், பொய்யண்டிஜே என்ற பெயரில் ஓரு இணையதளம் வரம்பு மீறி விமர்சனங்களையும், வசைபாடியும் வந்து கொண்டிருக்கும் போது, உண்மை அல்லாத பலவிசயங்கள் உண்மை போல காட்ட முயன்றதினால் தான், அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இணைய துவங்கப்பட்டது. பதிலடி கொடுக்க வின் டிவியையோ, மக்கள் ரிப்போர்டையோ பயன்படுத்தாமல், நானே என் பெயரில் இந்த இணையத்தினை துவங்கினேன்.

எப்படிப்பட்ட பொய்யையும் பரப்பலாம் என்பதற்கு இந்த பொய்யன்டிஜே இணையம் ஓரு உதாரணம். இதற்கு அதிரையில் நடந்த சம்பவமே சாட்சி!. அதிரையில் கடந்த மே மாதத்தில் நடந்த கூட்டத்தில் மக்கள் எல்லாம் மேடையில் ஏறி கேள்வி கேட்டதாகவும், பொய்யர்களுக்கு செருப்படி என்றும், ஒரு செய்தி வந்தது. அது எப்படிப்பட்ட உண்மை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்!. இதை அதிரை மக்கள் நேரில் பார்த்ததே ஒரு சாட்சி!. இதற்க்காண விளக்கம் ஆன்லைன் இணையதளத்தின் மூலமே நாம் கொடுத்தோம். பல அதிரை சகோதரர்களும் தங்களின் பதிலை கடிதம் வாயிலாக தெரியப்படுத்தினார்கள்.

மேலும் அவர்கள் பொய் என்ற ஆயுதத்தை மட்டும் வைத்து களத்தில் இருக்கும் போது, நான் மட்டும் வெறுங்கையுடன் போரிட வேண்டும் என்று நீங்கள் விரும்புவது எந்த வகையில் சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை!. மேலும் செங்கிஸ்கான் ஆன்லைன் மற்றும் பொய்யன்டிஜே என்ற இரு இணையத்தையும் பார்க்கும் நபர்களுக்கு, எதில் கடினமான வார்த்தைகள் இருகின்றன?. தரம்தாழ்ந்த நடை எதில் இருக்கின்றது?. மிக மோசமான வார்த்தை எதில் இருக்கின்றது?. என்று பார்த்தாலே தெரிந்துவிடும்!. என் இணையத்தில் தரம்தாழ்ந்து, கண்ணியம் குறைந்து எப்பொழுதுமே நான் எழுதியதில்லை!. நாம் கண்ணியத்தை பேனத்தான் செய்கின்றோம்!.

எனவே அவர்கள், இவ்வாறு எழுதுவதை நிறுத்தி விடுவார்களேயானால், அன்றே நான் செங்கிஸ்கான் ஆன்லைன் என்ற என் இணையத்தை மூடிவிட தயார்!. நான் எந்த ஒரு தனிநபரையோ, இயக்கத்தையோ வசைபாட இந்த இணையத்தை துவங்கவில்லை!. அதுதான் உண்மை!.

கேள்வி: உங்களுடைய பார்வையில் வளைகுடா சுற்றுப்பயணத்தை நீங்கள் எப்படி உணர்கிண்றீர்கள்?. இதை இன்னும் எவ்வாறு விரிவாக கொண்டு செல்ல உள்ளீர்கள்?.

பதில்: கடந்த முறை நாங்கள் வந்த சுற்றுப்பயணத்திற்கும், இந்த முறை வந்துள்ள சுற்றுப்பயணதிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது!. கடந்தமுறை நிறைய அவதூறுகளை சுமந்துகொண்டு, இதை எப்படி எதிர்கொள்ளப் போகின்றோம் என்ற கவலையுடன் வந்தோம்!. ஆனால் இன்றைய சூழ்நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக செய்த பணிகளை மக்களின் முன் எடுத்து வைப்பதற்கு வந்தது மிக மகிழ்ச்சி!.

இரண்டாவதாக கடந்தமுறை ஆதரவாளர்கள் என்று அறியப்பட்டாலும் எட்டி நின்று, நம்மை பார்த்தவர்கள் இந்த முறை, தங்களின் முழு ஆதரவையும் கொடுத்து ஒரு உற்சாக வரவேற்பை தந்ததை அறிய முடிகின்றது!.

மூன்றாவதாக கடந்த முறை நான் இங்கே வந்தபோது கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விக்கணைகள் நம்மீது தொடுக்கப்பட்டன. இந்த முறை அதுபோன்ற எந்த நிகழ்வும் இல்லாமல், அமைதியான முறையில் அற்புதமாக முழுக்க முழுக்க தாவாவுக்கான நிகழ்சியாகவும், தாவா பணியை முன்னெடுத்து செல்வதற்கான நிகழ்ச்சியாகவும் இப்பயணம் அமைந்தது. உண்மையிலேயே மிகப்பெரிய திருப்தி.

இ.த.ஜ வின் தாவாபணிகள் மென்மேலும் வளர, நாமும் நம் வாழ்த்துகளையும், துவாவையும் கேட்டவர்களாக விடைபெற்றோம்!. அல்ஹம்துலில்லாஹ்!.

முஸ்லிம்களாகிய நாம் ஒருவரை ஒருவர் தரம்தாழ்ந்து விமர்சனம் செய்யும்போது, அது முஸ்லிமல்லாத மக்களிடம் ஒரு வெறுப்பை நம்மீது உண்டாக்கும். எனவே ஒற்றுமை உணர்வுடன் நாம் அனைவரும் செயல்பட வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் தமிழ்நாட்டில் ஏகத்துவ பிராச்சாராத்தை முன்னெடுத்து செல்ல, எல்லா இயக்கங்களும் மீண்டும் ஒரே தலைமையின் கீழ் வர நாமும் துவா செய்வோம்.
Posted by அதிரை முஜீப்

0 comments:

Post a Comment