Sunday, July 24, 2011

ஃபித்ரா தொகையை, ஜக்காத் நிதியில் கரைத்த அண்ணன் ஜமாஅத்!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

ரமலான் இதோ நெருங்கி விட்டது; அண்ணன் ஜமாஅத்தினர் தங்களின் ஃபித்ரா வசூல் விளம்பரம் செய்யத் தொடங்கி விட்டார்கள். இவர்கள் ஃபித்ரா தொகையில் ஒரு பகுதியை என்ன செய்கிறார்கள் என்று நாம் மக்கள் மன்றத்தில் வைக்கிறோம். ஆனாலும் மக்களின் மறதி இவர்களுக்கு  ஒரு வரப்பிரசாதமாகும். கடந்த ஆண்டு ஃபித்ரா தொகையில் ஒரு பகுதியை ஜகாத் நிதியில் கரைத்தார்கள். அதையொட்டி நாம் கடந்த 20-10-10௦ அன்று அண்ணன் ஜமாஅத்தினரை நோக்கி கீழ்கண்ட கேள்விகளை வைத்தோம். அடுத்த ரமளானும் வந்துவிட்டது. இன்னும் பதிலைக் காணோம்..? அந்த கட்டுரை மீண்டும் உங்கள் பார்வைக்கு- அப்துல்முஹைமின்.

''நீங்கள் எந்த வகைக்கு வழங்குகிண்றீர்களோ அந்த வகைக்கு மட்டுமே செலவிடப்படும்'' இது ஒவ்வொரு வசூல் வேட்டையின் போதும் அண்ணன் ஜமாஅத் அடிக்கும் ஸ்டான்டாகும். ஆனால் உண்மை நிலவரமோ பெரும்பாலும் நேர்முரனாகத் தான் இருக்கும்.

சுனாமி நிதியில் தனது இயக்கத்தவருக்கு  சீருடை, உணர்வுக்கு ஒரு தொகை, இவ்வாறாக சுனாமித் தொகையில் ஒரு பங்கு பினாமியாக போனதாக பரவலாக குற்றச்சாட்டு அந்த நேரத்தில் எழுந்ததை மறந்திருக்க முடியாது. அதற்கான ஆதாரம்  இங்கே; http://3.bp.blogspot.com/-_EIHXwTtzds/ThTdbD3srHI/AAAAAAAAA_c/dEYOIQBQTNM/s1600/sunami_unarvu_23-03-2006.JPG

அடுத்து ஃபித்ரா வசூலில்  ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை மீதமாகி விட்டது. எனவே தலைமையால் நடத்தப்படும்  தாஃவா சென்டருக்கு ஒதுக்கப்பட்டது என்று அறிவிப்பு வரும். ஃபித்ரா தொகையை தாஃவா சென்டருக்கு எப்படி ஒதுக்கலாம் என கடந்த காலங்களில் விமர்சனங்கள் எழுந்தவுடன், இந்த ஆண்டு உஷாராக வேறு வழியை கையாண்டுள்ளது அண்ணன் ஜமாஅத்.

''பெருநாள் தொழுகை முடிந்த பிறகு சுமார் நான்கு லட்சம் ரூபாய் ஃபித்ரா தொகை வந்ததாம், அதில் தலைமை ஒதுக்கிய தொகையை விட கூடுதலாக  செலவு செய்த மாவட்டங்களை கண்டறிந்து, அவர்களுக்கு அந்த தொகையை திருப்பி செலுத்தியது போக சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மீதமானதாம். அந்த தொகையை ஜக்காத் நிதியில் சேர்த்து விட்டதாக'' உணர்வில் அறிவித்துள்ளார்கள்.

ஃபித்ரா கடமையாக்கப் பட்டதே பெருநாள் அன்று பணக்காரன், ஏழை பாகுபாடில்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாக பெருநாள் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான். அதனால்தான் ஃபித்ராவை பெருநாள் தொழுகைக்கு முன்பாகவே வழங்கிடுமாறு வள்ளல் நபி[ஸல்] அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மார்க்கம் இவ்வாறு சொல்லியிருக்கையில், பெருநாள் முடிந்த பின்னும் வசூல் செய்து அதை ஜக்காத் நிதியில் சேர்ப்பதற்கு இவர்களுக்கு அதிகாரம் தந்தது யார்?  எனவே,

  1. பெருநாள் தொழுகை முடிந்த பின்னும் ஃபித்ரா தொகை வசூலிக்கலாம் என்பதற்கு  இவர்கள் ஆதாரத்தை  வைக்க வேண்டும்.
  2. ஃபித்ரா தொகையை ஜக்காத் நிதியில் சேர்க்கலாம் என்பதற்கும் இவர்கள் ஆதாரத்தை  வைக்க வேண்டும்.
இதற்கு இவர்கள்  ஆதாரம் தரும் பட்சத்தில் இது குறித்த நமது சாட்டை மீண்டும் சுழலும் இன்ஷா அல்லாஹ்.

0 comments:

Post a Comment