Friday, July 29, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்[40] just4jokes


முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராம்தாஸ்; சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வுக்கு எதிரான ஓட்டுகளால், அ.தி.மு.க., வெற்றிபெறவில்லை. தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகளால் தான் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.
பஞ்ச் பட்டிக்காட்டான்; உங்க பேச்சுப் பிரகாரம் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் விழுந்தா அதிமுக ஜெயிச்சுரும். அதிமுக எதிர்ப்பு ஒட்டுக்கள விழுந்தா திமுக ஜெயிச்சுரும். அப்ப இந்த கட்சிகள் ஜெயிக்க உங்க கட்சி ஒட்டு வங்கி அவசியமில்லைன்னு சொல்றீங்க.  
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேட்டிகாங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. ஒவ்வொரு மாநிலத்திலும், சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் செய்ய வேண்டும்.
பஞ்ச் பட்டிக்காட்டான்;  தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் தரணும்னு இங்குள்ள காங்கிரஸ்காரவுக  சொல்வீங்க. தரக்கூடாதுன்னுன்னு அங்குள்ள காங்கிரஸ்காரவுக சொல்வீங்க. சுருக்கமா சொன்னா, இடத்துக்கு தக்கவாறு நிறத்த மாத்திக்கிருவோம்னு சொல்லுங்க.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், பள்ளியில் தேர்வு, டியூஷன், வீட்டுப் பாடம் ஆகிய மூன்றையும் ஒழிப்பேன். இந்த மூன்றும் இல்லாமல், ஆக்கப்பூர்வமான கல்வியை கொண்டு வர முடியும்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; பள்ளியில பரீட்சையெல்லாம் வைக்காம, வருஷம் முடிஞ்சவுடனே வகுப்ப மாத்திடலாம்னு சொல்ல வர்றீங்களா?
பா.ஜ., மாநில துணை தலைவர் எச்.ராஜா;  ""சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் தி.மு.க., அரசு அதன் சின்னம், நாத்திகத்தை புகுத்தியுள்ளது. இவற்றை நீக்கிவிட்டு, இக்கல்வியை அமல்படுத்த வேண்டும்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; அப்ப கர்நாடகத்துல மட்டும் பள்ளிக்கூடத்துல பகவத்கீதையை கட்டாயமாக்குறது மட்டும் சரியாக்கும்?

0 comments:

Post a Comment