Monday, July 25, 2011

INTJ தலைவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி பற்றிய 'அரபு நியூஸ்' பத்திரிகை செய்தி!

INTJ தலைவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி பற்றிய 
'அரபு நியூஸ்' பத்திரிகை செய்தி! 



  பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா  னிர்ரஹீம்
தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை
குவைத்.
இந்திய  தவ்ஹீத் ஜமாத் (INTJ)  தலைமைக்கழக நிர்வாகிகள் வரவேற்பு நிகழ்ச்சி:
===============================================================
       கடந்த 16-07-2011 வெள்ளிக்கிழமை மதியம் 2:15 மணியளவில் அல்தபக் ( முர்காப் ) ஹோட்டலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இச்சிறப்பு நிகழ்வுக்கு பேரவை தலைவர் ஜனாப் ஆவூர்பஷீர் அஹமது தலைமை தாங்கினார்.
கல்வி & மார்க்க குழு செயலாளார் K.P.S. M. முனீர்அஹமது M.A.அவர்கள்         கிராஆத் ( திருமறைவசனம் ) ஒதி தொடங்கி வைத்தார்.
பேரவை தலைவர் ஜனாப் ஆவூர்.A.பஷீர்அஹமது தனது வரவேற்புரையில்
தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் 16-ஆண்டுகால சேவைகள் குறித்த விபரங்களை விளக்கமாக பட்டியலிட்டார்.
        பேரவையின் 15-ம்ஆண்டு மலர்யை பேரவை முன்னாள்தலைவர் R.M.முஹம்மது பாருக் அவர்கள் வெளியிட INTJ தேசிய தலைவர் சகோதரர்
S.M. பாக்கர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.  பேரவை முன்னாள் தலைவர் M.A.J.முகமது இக்பால் அவர்கள் வெளியிட INTJ மாநில செயலாளர் சகோதரர் செங்கிஸ்கான் பெற்றுக் கொண்டார். பேரவை காப்பாளர் I.ஜாஹிர்தீன் வெளியிட INTJ மாநிலபொருளார் சகோதரர் அபுபக்கர் தொண்டியப்பாபெற்றுக்கொண்டார். பேரவை பொருளாளர் சுவாமிமலை H.ஜாஹிர் ஹூசைன் வெளியிட. INTJ
குவைத் மண்டல  தலைவர் சகோதரர் அப்பாஸ் அவர்களுக்கும், தொடர்ந்து, பேரவை ஆலோசகர் ஜமால்ஜாஃபர் அவர்கள், INTJ குவைத் நிர்வாகி சகோதரர் ஃபிர்தவ்ஸ் அவர்களுக்கும், பேரவைகாப்பாளர் கம்பளிA.பஷிர் அவர்கள், INTJ குவைத் நிர்வாகி சகோதரர் அமீர்ஹம்சா அவர்களுக்கும், 15-ம்ஆண்டு மலர்யை வழங்கி கொளரவித்தனர்.
          ஏற்ப்புரை வழங்கிய, “தமிழக முஸ்லிம் சமுதாய ஒற்றுமை புயல்”
இந்திய தவ்ஹீத்ஜமாத் (INTJ) தலைவர் S.M.பாக்கர் அவர்கள்,தனது உரையில்...
TMCAபேரவை, தமிழக நம்சமுதாயமக்கள்,மற்றும் குவைத்வாழ் தமிழ்முஸ்லிம் நலன்கருதி நல்லபலபணிகளை சிரமேற்கொண்டு செய்துவருவதையும், சகோதர சமுதாயத்தினருடன் நல்லிணக்கமாக இருந்து நற் தொண்டாற்றி வருவதையும் பாராட்டியதுடன், தமிழக நம் சமுதாய மக்கள் நலன் கருதி தங்கள் (INTJ) அமைப்பும் இது போன்று தாயகத்தில் செயல்படுவதையும், அரசியல் ரீதியாக,
நம் ஜனநாயக உரிமைகளை பெறுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு போராடவேண்டிய அவசர அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த TMCA பேரவைக்குமிக நன்றிதனை
தெரிவித்து  கொண்டார்.,
           பேரவை முன்னாள் துணைதலைவர் ஜனாப். M.I. சவுக்கத்அலி அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர்களுக்கும், ஏனைய
செயற்குழு உறுப்பினர்களுக்கும்  நன்றிதனை கூறினார்.
            பேரவை துணைபொதுச்செயலாளர் A.அப்துற்ரசாக்அல்வானி அவர்கள் மஜ்லிஸ் துஆ செய்து நிகழ்ச்சியை  முடித்து வைத்தார்.
     பேரவை செய்திதொடர்பாளர் காரைக்கால் ஜனாப் S.M.ஆரிப்மரைக்காயர் அவர்கள் இவ் அனைத்து நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்கி சிறப்பு சேர்த்து உதவினார்.
மதியம் உணவு உபசரிப்புக்கு பின்னர் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
        அல்ஹம்துலில்லாஹ்..!       
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

0 comments:

Post a Comment